அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! இந்த முக நூலில் பலர் பல வேஷம் போட்டு தவ்ஹீத் வாதிகளை எதிர்த்தார்கள் .அசிங்கமா திட்டினார்கள் சிலர் விமர்சனம் பண்ணினார்கள் தரீக்கா வழிகேடர்கள் பண்ணின தொல்லைகள் ஏராளம். தவ்ஹீத் வாதிகளின் புகைப்படங்களையும் பெண்களின் செக்ஸ் போட்டகளையும் சமந்தபடுத்தி பொய்யான பீதியையும் கிளப்பி விட்டு பார்த்தார்கள் நம் தவ்ஹீத் வாதிகள் கொஞ்சம் கூட அசராமல் அவர்களின் முகத்திரைகளை கிழித்தார்கள் அவர்களின் கொக்கரிப்பு நம் தவ்ஹீத்வாதிகளிடம் எடுபடாமல் போயிட்டது. இன்னும் பலர் தவ்ஹீத் வளர்ச்சி பிடிக்காமல் தவ்ஹீத் வாதிகளின் மீது சேற்றை வாரி பூசினார்கள்.அண்ணன் பீஜே அவர்கள் மீது சுமத்திய ஆதாரமில்லாத குற்றங்கள் தவிடி பொடியா ஆனது.பலர் தவ்ஹீதை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் வாதிகளின் முகவரிலும் வந்து குழப்பினார்கள் அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட பட்டது.சிலர் நடு நிலைவாதி என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீத் வாதிகளை கண்டித்தார்கள்.அதற்கும் நம் தவ்ஹீத் வாதிகள் அஞ்சாமல் அவர்கள் யார் என்பதை இந்த முக நூலில் அடையாளம் காட்டினார்கள்.பலர் நான் எந்த இயக்கத்தை சாராதவன் என்றும் நாம் ஒற்றுமையா இருக்கணும் என்றும் போராடினார்கள் அவர்களும் ஒரு சாரார் என்பதை இந்த தவ்ஹீத் வாதிகள் நிருபித்தார்கள்.அவர்களின் பொய்யான முகத்திரையும் கிழிக்கப்பட்டது. பொய்யான முக மூடி போட்டுக்கிட்டு நாங்கள் நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் பலர் தமுமுகவை சேர்ந்தவர்கள்.என்பதை வெட்கத்துடன் சொல்லிகொள்கிறேன். தவ்ஹீத் வாதிகளை எதிர்க்க கூடியவர்கள் பலர் இந்த முக நூலில் காணமல் போனார்கள்.அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! எதிர்ப்பு இருந்தால்தான் ஏகொத்துவம் (தவ்ஹீத்) வளரும்! தவ்ஹீத் மீண்டும் மீண்டும் வீறு நடை போடும்! இன்ஷா அல்லாஹ்!
திங்கள், 15 ஆகஸ்ட், 2011
மஹதியும் அப்துல் முஹைமீன் என்னும் மடையனும்
பதிலைக் காணோம்! பதிலைக் காணோம்!
சனி, 13 ஆகஸ்ட், 2011
சுனாமித் திருடர்களின் துரோக வரலாறு
நீல வண்ணத்தில் உள்ள எழுத்துக்கள் சுனாமி விவகாரம் நடந்த போது நாம் உணர்வில் எழுதியவை. கறுப்பு வண்ணத்தில் உள்ளவை இப்போது எடுத்துக் காட்டுபவவை
தமுமுக இயக்கத்தை நாமும் நாட்டில் உள்ள நன்மக்களும் சுனாமித் திருடர்கள் என்ற அடைமொழி கொடுத்து குறிப்பிட்டு வருகிறோம். இவர்களுக்கு சுனாமி திருடர்கள் என்ற பட்டம் ஏன் கிடைத்தது என்ற விபரம் புதிய தலைமுறைக்கு தெரியாது என்ற நம்பிக்கையில் சுனாமி தொடர்பாக நம்மைப் பார்த்து கேள்விகள் எழுப்பி வருகிறார்கள். இவர்கள் எழுப்பும் கேள்விகள் புதியவை அல்ல. ஏற்கனவே கேட்கப்பட்டு அப்போதே உணர்வு இதழ் மூலம் பதிலளிக்கப்பட்டவை தான். நம்மை நோக்கி கேள்வி எழுப்புவோரின் முதுகெலும்பை முறிக்கும் பதில்கள் இறுதி தொடரில் இடம் பெறும் இன்ஷா அல்லாஹ்பின்னணி என்ன?
இறைவனின் திருப்பெயரால்…
மாநிலச் செயலாளர்கள் கோவை ஜாபர்,
எம்.ஐ. முஹம்மது முனீர்
ஆகியோர் கொண்ட குழு
முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் டாக்டர் சையத் சத்தார் அவர்களையும்,
தேசிய லீக் தலைவர் கோனிகா எம். பஷீர் அஹமது அவர்களையும்,
ஜமாஅத்தே இஸ்லாமியின் செயலாளர் நஸீர், துணைத் தலைவர் ரஹீம் மற்றும் சிக்கந்தர் ஆகியோரையும்,
மனித நீதிப் பாசறையின் தலைவர் குலாம் முஹம்மது அவர்களையும்,
இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகத்தின் சார்பில் அ. முஹம்மது கான் பாகவி அவர்களையும்
சந்தித்தனர்.
சுனாமித் திருடர்களின் துரோக வரலாறு- தொடர் 2
முதல் தொடரை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்கேள்வி : நமக்கிடையே உள்ள பிரச்சனைகளைப் பற்றி துண்டுப் பிரசுரங்கள் வெளியிடுவது சரிதானா?
தி. அப்துல் மாலிக், திருச்சி.



இதில் இருந்து பொது விசாரணைக்கு தமுமுகவினர் முன்வராமல் பாரதூரமான குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து அலட்சியமாக நடந்து கொண்டது தமுமுக வில் உள்ள நன்மக்களை எந்த அளவுக்கு பாதித்தது என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம். இந்த வரலாறூகள் தெரியாத சில சில்லறைகள் நம்மைப் பார்த்து சுனாமி கணக்கு குறித்து கேள்வி கேட்கின்றனர், அனைத்து கேள்விகளுக்கும் நம்மை உட்படுத்திக் கொண்டு விசாரணைக்கு தயார் என்று நாம் பகிரங்கமாக ஒப்புக் கொண்டு அழைத்த போது பின்னங்கால் பிடரியில் பட ஓட்டம் எடுத்த தமுமுகவினர், இன்றைக்கு சில சில்லறைகளைக் கிளப்பி விட்டுள்ளனர். அனைத்துக்கும் தக்க பதில் அளிக்கப்பட்டு விட்டது. இனியும் அளிக்கப்படும் என்பதை உறுதி படக் கூறிக் கொள்கிறேன். இன்ஷா அல்லாஹ்.
பொருளாதார மோசடி தொடர்பாக என்னைப் பற்றியோ நான் பொறுப்பில் இருந்த, இருக்கும் ஜமாஅத் பற்றியோ எவனும் எந்தக் குற்றச்சாட்டையும் கூற முடியாது என்பதை திட்டவட்டமாக கூறிக் கொள்கிறேன்.
நடுவர் குழுவினர் பொது விசாரணைக்கு அழைப்பு விட்ட போது அதற்கு நான் அளித்த பதிலில் இருந்து தவ்ஹீத் ஜமாஅத் பொருளாதார விஷயத்தில் தூய்மையானது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
அந்தக் கடிதம் இதோ:

இதன் பின்னர் நடுவர்கள் அழைத்த விசாரணையில் தமுமுக கலந்து கொண்டார்களா? நடுவர்கள் எடுத்த முடிவு என்ன?
சுனாமி மற்றும் ஃபித்ரா வசூல் தொடர்பாக பொது விசாரணைக்குத் தயார் என்று நாம் அறைகூவல் விட்ட போது அதை தமுமுக ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த விவகாரம் நடக்கும் போது நடுவர்களாக நாம் குறிப்பிட்ட ஆறு இயக்கத்தவர்களும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு நெருக்கமானவர்கள் அல்லர். மாறாக தமுமுகவுக்குத் தான் நெருக்கமாக இருந்தனர். தமுமுகவோடு ஒரே மேடையில் பல ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள். தவ்ஹீத் ஜமாஅத்துடன் இவர்களுக்கு நெருக்கமான உறவு கிடையாது. மாறாக தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக அனைவரும் கூடி ஒரு முடிவு எடுக்கும் போதெல்லாம் இந்த ஆறு இயக்கத்தினரும் கலந்து கொண்டதுண்டு. இன்றைக்கும் கூட அது தான் நிலைமை. அப்படி இருந்தும் நம்மிடம் எந்த தில்லுமுல்லுகளும், ஒளிவு மறைவும் இல்லாததால் நாம் இவர்களை நடுவர்களாக ஏற்றுக் கொண்டோம். ஆனால் தமுமுகவினர் சுனாமி நிதியிலும் பித்ராவிலும் மோசடி செய்த காரணத்தால் அவர்கள் விசாரணைக்கு உடன்படவில்லை என்பதை மேற்கண்ட விபரங்களில் இருந்து நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
இதன் பின்னர் சில சகோதரர்கள் இது போல் நாம் சவால் விட்டதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் தனிப்பட்ட காழ்ப்புணர்வு காரணமாக நாம் விமர்சனம் செய்வதாகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். இது குறித்து உணர்வு ஏட்டிலும் ஒரு சகோதரர் கேள்வி கேட்டிருந்தார். அந்தக் கேள்வியும் அதற்கு நாம் அளித்த பதிலும் வருமாறு:
கேள்வி : நமக்கிடையே உள்ள பிரச்சனைகளைப் பற்றி துண்டுப் பிரசுரங்கள் வெளியிடுவது சரிதானா?
தி. அப்துல் மாலிக், திருச்சி.
பதில் : ஃபித்ரா, சுனாமி நிவாரண நிதி பற்றி நாம் வெளியிட்ட பிரசுரத்தின் அடிப்படையில் இக்கேள்வியை எழுப்பியுள்ளீர்கள்.ஃபித்ரா என்பது இரண்டு இயக்கங்களுக்கிடையே உள்ள பிரச்சனை அல்ல. அது மார்க்கத்தின் ஓர் அம்சமாகும். ஏழைகள் சம்பந்தப்பட்ட பொருளாதராரப் பிரச்சனையாகும்.ஒவ்வொரு முஸ்லிமும் தான் கொடுத்த ஃபித்ரா தொகை ஏழைகளைச் சென்றடையும் என்ற நம்பிக்கையில் தான் இயக்கங்களின் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கிறான். அந்தப் பணம் ஏழைகளைச் சென்றடைந்ததா என்பதைக் கண்காணிக்கும் கடமை எங்களுக்கு மட்டுமின்றி உங்களுக்கும் உண்டு.அங்கே இவ்வளவு கொடுத்தோம். இங்கே இவ்வளவு கொடுத்தோம் என்று செய்திகள் வெளியிடுவது போதுமானதல்ல. எந்தக் கணக்காக இருந்தாலும் வரவு என்ன? எந்த வகையில் வந்தது என்பதை விபரமாக வெளியிட வேண்டும். அப்படி வந்த வரவு ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டதா என்ற செலவையும் வெளியிட வேண்டும்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை தலைமைக்கு வந்து சேர்ந்தது எவ்வளவு என்ற விபரப் பட்டியலையும் வெளியிட்டோம்.அவை எந்தெந்த ஊர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது என்ற செலவுப் பட்டியலையும் வெளியிட்டோம்.இது போல் ஃபித்ரா திரட்டிய மற்ற இயக்கங்களும் தாங்கள் திரட்டிய தொகை எவ்வளவு?அவை முழுமையாக விநியோகம் செய்யப்பட்டதா என்ற கணக்கை வெளியிடச் சொல்வது நமக்கிடையே உள்ள பிரச்சனையா?இதுபோல் சுனாமிப் பேரழிவின் போது உள்ளம் உருகிய மக்கள் வாரி வாரி வழங்கினார்கள். தாங்கள் வழங்கிய ஒவ்வொரு பைசாவும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையும் என்ற நம்பிக்கையில் குடும்பத்தாருக்குக் கூட பணம் அனுப்பாமல் ஒரு மாத ஊதியத்தை வழங்கியவர்களும் இருந்தனர்.சுனாமி நிதி திரட்டியவர்கள் வரவுகளை மட்டும் பட்டியல் போட்டு வெளியிட்டனர். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிய விபரத்தை வெளியிடவில்லை.அதாவது பித்ராவில் வரவு விஷயம் வெளியிடப்படவில்லை.சுனாமியில் செலவு விபரம் வெளியிடப்படவில்லை.இதை வற்புறுத்துவது நமக்கிடையே உள்ள பிரச்சனையா?இதைத் தட்டிக் கேட்கும் கடமை உங்களுக்கும் உள்ளது. ஒவ்வொருவருக்கும் உள்ளது.இதை வெளியிடாதவரை நமது நடவடிக்கை தொடர்ந்து கொண்டே இருக்கும்.( உணர்வு உரிமை 10 : குரல் 13, டிசம்பர் 02 – 08, 2005. பக்கம் 15 )சுனாமி மற்றும் ஃபித்ராவில் தமுமுக ஊழல் செய்து விட்டது; அதை நாங்கள் நடுவர்கள் முன்னிலையில் நிரூபிப்போம் என்று நாம் விட்ட அறைகூவல் இன்றைக்கு தமுமுகவுக்கு முட்டுக் கொடுக்கும் புதுசுகளுக்கு தெரியாது. ஆனால் தமுமுகவுக்காக அன்றைக்கு உழைத்த பல உண்மையான சகோதரர்கள் எந்த அளவுக்கு மனம் நொந்தார்கள் என்பதையும் அப்போதைய உணர்வில் நாம் வெளியிட்டோம்.அந்த வகையில் நாம் வெளியிட்ட ஒரு கடிதத்தைப் பாருங்கள்!ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்தமுமுக தலைமை நிர்வாகிகள் பொது விசாரணைக்கு தாங்கள் தயராக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த சில தந்திரங்களைக் கையாண்டு அதன் மூலம் தங்களை நம்புகின்ற மக்களைத் தக்க வைக்கலாம் என்று எண்ணுகின்றனர்.நேர்மையையும் நியாயங்களையும் விரும்புகின்றவர்கள் நிச்சயம் இந்தத் தந்திரங்களையும் சரியாகப் புரிந்து கொள்வார்கள்.நேர்மையை விட இயக்க வெறியை மட்டுமே பார்ப்பவர்கள் மட்டும் தான் மிஞ்சுவார்கள் என்பதற்கு சேலம் மாநகர தமுமுக செயலாளர் டி.முஹம்மது ஹுஸைன் எழுதிய மடலை ஒரு சோற்றுப் பதமாக வெளியிடுகிறோம்.தமுமுக ஊழல் இயக்கமா?1995 களில் தமிழகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொடங்கப் பட்ட போது தமிழக முஸ்லிம்களில் மிகக் குறைவானவர்கள் இவ்வியக்கத்தை ஏற்றுக் கொண்டனர். காரணம் தமுமுக மீது சுமத்தப்பட்ட தீவிரவாத முத்திரையும், “நஜாத் இயக்கம்” என்கிற ஏளனமுமே! ஆனால் இறைவனின் கருணையினால் இன்று பெரும்பான்மை முஸ்லிம்கள் திரும்பிப் பார்க்கும் வகையில் “தமுமுக” உருவெடுத்துள்ளது. இதற்கு காரணம் இந்த இயக்கம் கடந்து வந்த பாதை, தனித்தன்மை பணிகள், அதிகார வர்க்கத்திற்கு அஞ்சாத துணிவு, தன்னரிகல்லா எளிமையான தலைவர்கள், இவை அனைத்திற்கும் மேல் அல்லாஹ்விற்காக செய்கிறோம் என்கிற தூய எண்ணம்.தமுமுகவின் ஒவ்வொரு அடிமட்ட தொண்டனுக்கும் இந்த உணர்வு உள்ளதாலேயே எத்தனை இன்னல்கள் வந்தாலும் சகித்துக் கொண்டு சமுதாய பணிகள் செய்து வருகிறோம்.மற்ற இயக்கங்களை விட தமுமுகவினுடைய தனித்தன்மைகளைச் சொல்லி பிரச்சாரம் செய்து தான் நாம் மக்களைச் சந்திக்கிறோம். சமுதாய மக்கள் இதன் காரணமாகவே நம் மீது நம்பிக்கை வைத்து தங்களுடைய பொருளாதாரத்தைக் கொடுக்கின்றனர். ஒன்றுபட்ட தமுமுகவாக இருந்த போது ஒரு புறம் ஏகத்துவ பிரச்சாரப் பணிகளையும் மறுபுறம் சமுதாயப் பணிகளையும் செய்து வந்துள்ளோம். இடையில் சகோ. பி.ஜே உள்ளிட்ட சில சகோதரர்கள் தமுமுகவை விட்டு விலகிய பின்பும், சமுதாய நலன் கருதி தமுமுகவில் நிலைத்து இருந்துள்ளோம். இவையெல்லாம் தமுமுக தலைமை நிர்வாகிகள் மீது நாம் கொண்ட நம்பிக்கையே!ஆனால் இன்றைக்கு பிரிந்த சகோதரர் பி.ஜே அவர்கள் தமுமுக மீது எழுப்பியுள்ள “ஊழல் குற்றச்சாட்டுகள்” சாதாரணமானது அல்ல. பி.ஜே, மற்ற அமைப்புகள் மீது தொடுக்கும் விமர்சனங்களும், தமுமுக மீது கூறியுள்ள குற்றச்சாட்டையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளக் கூடாது.இன்றைக்கும் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் தமுமுகவைப் பற்றி மக்களிடம் தவறான பிரச்சாரத்தைச் செய்து வருகின்றனர். என்னவெனில், “கோவை கலவரத்தில் நடந்த காட்சிகளை வீடியோ தொகுப்பாகத் திரட்டி சுருட்டி விட்டனர்” என்று பேசி வருகின்றனர். இவை நமக்கு ஒன்றும் பொருட்டல்ல….ஆனால் சகோதரர் பி.ஜேவைப் பொறுத்த வரை பதில் கூற வேண்டிய பொறுப்பு நிச்சயமாக நமக்கு (தமுமுக தலைமைக்கு) உண்டு. காரணம் பி.ஜே நம்மில் இருந்து விலகிச் சென்றவர் என்ற காரணத்தை வைத்துக் கொண்டு நம் மீது அவதூறு பரப்புபவர்களுக்கு இச்செய்தி ”வெறும் வாய்க்கு அவல்” ஆகி உள்ளது.தமுமுகவினுடைய ஆரம்பகால தொண்டனாகவும், சேலம் மாவட்டத்தில் அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து நிர்வாகத்தில் இருந்து வருகின்ற நான் தற்போது மாநகர செயலாளர் ஆக இருக்கும் என்னுடைய ஓர் வேண்டுகோள் :தமுமுக மாநில நிர்வாகிகளுக்கு :தமுமுகவினருக்கு பகிரங்க அறைகூவலை விடுத்த சகோ. பி.ஜே அவர்களுக்கு “இறைவனின் துணைக் கொண்டு சவாலை ஏற்கிறோம்” என்று அறிவித்த மாநில நிர்வாகிகள் பாராட்டுக்குரியவர்கள். ஆனால் தமுமுக மாநில தமைமை எதிர் தரப்பாரிடம்….ஒன்றரை மணிநேரம் காத்திருப்போம், 2 மணி நேரம் காத்திருப்போம் வந்து விட வேண்டும் என்பதும்….சகோ. பி.ஜே விற்கு பதில் கூறத் தேவையில்லை. ஆனால் முதலும் இது தான் கடைசியும் இது தான் என்பதும்…“நடுநிலையான பொது நபர்கள்” அடங்கிய குழுவை சகோ. பி.ஜே தான் ஏற்படுத்த வேண்டும் என்பதும்….தமுமுகவினர் நழுவிச் செல்கிறார்களோ! என்பதாக அமைந்துள்ளது.மாறாக….சகோ. பி.ஜேயின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பதில் நாம் உறுதியோடு இருப்பின் அதை பட்டவர்த்தமாக வெளிப்படுத்த நமக்குக் கிடைத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்த வேண்டும். இதற்காக ஓரிரு நாட்கள் ஆனாலும் கவலைப்பட தேவையில்லை. “பொது நபர்கள்” அடங்கிய குழுவை அமர்த்துவதற்கு சகோ. பி.ஜேயை விட நமக்கு அதிக ஆர்வம் ஏற்பட வேண்டும். நமக்கு விடப்பட்ட சவாலை எதிர் கொள்ள வேண்டும்.இனி ஒரு முறை சகோ. பி.ஜே. தமுமுவைப் பற்றி விமர்சனம் செய்ய வாய்ப்பு இல்லாமல் செய்ய இதுவே தருணமாகும்.tntj மாநில தலைவர் சகோ. பி.ஜே அவர்களுக்கு :தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் மீது உண்மையான கவலை இருந்து தவறான ஓர் இயக்கத்தில் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று கருதி தாங்கள் தமுமுக மீது பகிரங்கமாக ஊழல் குற்றச்சாட்டை கூறி இருப்பின் அதற்கான ஆதாரத்துடன் தாங்கள், எவ்வித ஒளிவு மறைவும் இன்றி சாமான்ய தொண்டனும் புரியும் விதத்தில் சாட்சிகளுடன் நிரூபிக்க வேண்டும். அவ்வாறு தமுமுக ஊழல் இயக்கம் தான் என்பதை நிரூபித்தால் நிச்சயமாக தமுமுக வளர்க்கப் பாடுபட்ட நாம் தமுமுகவை புறந்தள்ள தாமதிக்க மாட்டோம். ஒவ்வொரு தமுமுக தொண்டனும் tntj தொண்டனும் இந்த விசயங்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு வரும் வேளையில் உங்களிடம் உண்மை இல்லை என்று தெரியவந்தால் “தூய இஸ்லத்தைப் பற்றி பேசவோ, சமுதாய மக்கள் பற்றி பேசவோ செய்கிற தகுதியை அறவே இழக்கிறீர்கள்” என்பதை கவனத்தில் கொள்வீராக!தமுமுகவினருக்கும், தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கும் இடையே நடைபெறும் “இப்பனிப் போர்” முற்றுப் பெறவேண்டும். சமுதாயப் பணிகள் செய்யக் கூடிய நாம் ஒவ்வொரு சமுதாய மக்களின் வீட்டுப் படியேறி சென்று சமுதாய பணிகளுக்கு நிதியைத்திரட்டுகிறோம். அவர்களுடைய கேள்விகளுக்கு பதில் கூற வேண்டிய பொறுப்பு மாநில நிர்வாகிகளை விட நம்மை (என்னைப் ) போன்றவர்களுக்கு அதிகமாக உள்ளதாகக் கருதுகிறோம்.இறுதியாக….மேற்கண்ட விவகாரத்தின் உண்மை நிலை தெரியும் வரை…. சேலம் மக்களின் தமுமுக செயலாளராக பொறுப்பில் இருக்கும் நான் என்னுடைய உள்ளார்ந்த முடிவின்படி இன்றைய தினத்திலிருந்து “செயலாளர்” பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். “இராஜினாமா” செய்கிறேன். இன்ஷா அல்லாஹ்…தமுமுக தலைமையின் தூய்மை வெளிப்படுமாயின் இயக்கத்தின் அடிப்படை உறுப்பினராக பணியாற்ற கடடைப்பட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறúன்.அன்புடன் டி.முஹம்மது ஹுஸைன் “(உணர்வு உரிமை 10 : குரல் 13, டிசம்பர் 02 – 08, 2005. பக்கம் 22)தமுமுகவின் கடந்த கால செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு அதில் ஈடுபாடு கொண்டு பொறுப்பும் வகித்தவருக்கே தமுமுக செய்யும் கள்ளத்தனமும் பொது விசாரணையில் இருந்து ஓட்டம் பிடித்ததும் புரிந்து போனதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.அது மட்டுமின்றி வெளிநாடுகளில் தமுமுகவுக்காக நிதி திரட்டி வழங்கிய சகோதரர்கள் எத்தகைய மன உளைச்சலுக்கு ஆளானார்கள்? தமுமுக மோசடி செய்தது எந்த அளவுக்கு அவர்களைப் பாதித்தது என்பதை ஒரு தமுமுக பொறுப்பாளரான மார்க்க அறிஞரின் கடிதம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.அந்தக் கடிதம் இதோ:


இதில் இருந்து பொது விசாரணைக்கு தமுமுகவினர் முன்வராமல் பாரதூரமான குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து அலட்சியமாக நடந்து கொண்டது தமுமுக வில் உள்ள நன்மக்களை எந்த அளவுக்கு பாதித்தது என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம். இந்த வரலாறூகள் தெரியாத சில சில்லறைகள் நம்மைப் பார்த்து சுனாமி கணக்கு குறித்து கேள்வி கேட்கின்றனர், அனைத்து கேள்விகளுக்கும் நம்மை உட்படுத்திக் கொண்டு விசாரணைக்கு தயார் என்று நாம் பகிரங்கமாக ஒப்புக் கொண்டு அழைத்த போது பின்னங்கால் பிடரியில் பட ஓட்டம் எடுத்த தமுமுகவினர், இன்றைக்கு சில சில்லறைகளைக் கிளப்பி விட்டுள்ளனர். அனைத்துக்கும் தக்க பதில் அளிக்கப்பட்டு விட்டது. இனியும் அளிக்கப்படும் என்பதை உறுதி படக் கூறிக் கொள்கிறேன். இன்ஷா அல்லாஹ்.
பொருளாதார மோசடி தொடர்பாக என்னைப் பற்றியோ நான் பொறுப்பில் இருந்த, இருக்கும் ஜமாஅத் பற்றியோ எவனும் எந்தக் குற்றச்சாட்டையும் கூற முடியாது என்பதை திட்டவட்டமாக கூறிக் கொள்கிறேன்.
நடுவர் குழுவினர் பொது விசாரணைக்கு அழைப்பு விட்ட போது அதற்கு நான் அளித்த பதிலில் இருந்து தவ்ஹீத் ஜமாஅத் பொருளாதார விஷயத்தில் தூய்மையானது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
அந்தக் கடிதம் இதோ:

இதன் பின்னர் நடுவர்கள் அழைத்த விசாரணையில் தமுமுக கலந்து கொண்டார்களா? நடுவர்கள் எடுத்த முடிவு என்ன?
தொடரும் இன்ஷா அல்லாஹ்….,
