அதிமுகவின் தற்போதைய பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பிசியாக இருக்கும் காரனத்தால் கட்சி அலுவல்களைத் தன்னால் பார்க்க முடியாது என கருதி பொய்யன் சமாத்தின் நிறுவனரும், நிரந்தரத்தலைவருமான அண்ணன் பாக்கர் அவர்களை புதிய பொதுச்செயலாளராக நியமித்து உத்தரவிட்டார். ஆனால் இந்த செய்தி வேறு யாருக்கும் தெரியாது. எந்த பத்திரிகையிலுமோ டிவியிலுமோ வரவில்லை.
அண்ணன் பாக்கர் அவர்கள் அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்றவுடன் செய்த வேலை என்ன தெரியுமா? புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் முஸ்லீம்கள் இடஒதுக்கீடு பற்றி ஒரு வார்த்தை கூட இடம்பெறாதது கண்டு மிகுந்த மனவேதனை அடைந்தார். உடனடியாக தன்னுடைய "பெர்சனல்" சகாக்களிடம் கலந்து ஆலோசனை செய்தார். அந்த ஆலோசனையின் முடிவில் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. அதாவது அதிமுகவின் முன்னாள் பொதுசெயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவிக்காமல் விட்ட முஸ்லீம்கள் இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவோம் என்ற ஒரு வாசகத்தை ஒரு பேப்பரில் எழுதி அதை ஏற்கனவே வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையின் ஏதாவது ஒரு பக்கத்தில் வைத்து பின் அடித்து விடுவது என முடிவுசெய்யப்பட்டது.

அண்ணனின் இந்த அற்புதமான முடிவை அவரது சகாக்களும் மனமார ஏற்றுக்கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு டீயும், சமோசாவும் வழங்கப்பட்டன. அதிமுகவின் புதிய பொதுச்செயலாளரின் இந்த முடிவை தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டி அதை ஒரு பேப்பரில் எழுதி பின் அடித்துக் கொள்ளலாம் என நினைத்து அந்த இடத்திலே தேட அங்கே எந்த பேப்பரும் கிடைக்கவில்லை. உடனே அனைவரும் ஆலோசனையில் ஆழ்ந்த போது, அங்கிருந்த சிந்தனை சிப்பி, சயனைடு குப்பி அண்ணன் செங்கி அவர்கள் சமோசா மடித்து வந்த பேப்பரில் எழுதி இப்போதைக்கு ஒட்டிக்கொள்வோம் என ஆலோசனை கூற, இந்த அருமையான ஆலோசனையை ஏற்றுக்கொண்ட கழகத்தின் புதிய பொதுச்செயலாளர் அண்ணன் அவர்கள் அதை அமுல்படுத்த உத்தரவிட்டார்.
உடனடியாக சிந்தனைப்புயல் அண்ணன் செங்கி அவர்கள் இடஒதுக்கீடு சம்பந்தமாக கீழ்க்கண்ட வாசகங்களை எழுத ஆரம்பித்தார்.
"சிறுபான்மையினருக்கு தனி இடஒதுக்கீடு கிடைக்கும் வகையில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மூலம் அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டது. ஆனால் 2006ம் ஆண்டில் கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்றபின், இஸ்லாமியர்கள் இடம்பெறாத வகையில் இந்தச் சட்டம் திருத்தப்பட்டது. மேலும் கருணாநிதி தன்னிச்சையாக இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இடைஒதுக்கீட்டை அறிவித்தார். என்றாலும் இது முறையாக அமுல்படுத்தப்படவில்லை.
அதிமுக ஆட்சி அமைந்தால் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டு விகிதம் உயர்த்தி அறிவிக்கப்படும். மேலும் அது முறையாக அமுல்படுத்தப்படுகிறதா என்பதும் கண்கானிக்கப்படும். இஸ்லாமியர்களின் இதர கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும்..."
என்றவாறு வாசகங்களை எழுதி அதை புரூஃப் பார்க்க தொண்டியப்பாவிடம் கொடுக்கப்பட்டது. ஆஹா..அற்புதமான அறிக்கை என பாராட்டிய தொண்டியப்பா அவர்கள் அதை அதிமுகவின் புதிய பொதுச்செயலாளர் அண்ணன் பாக்கரிடம் கொடுத்து கையெழுத்துப் போடுங்கள், முன்னாள் பொதுச்செயலாளர் அம்மா அவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ஏதாவது ஒருபக்கத்தில் வைத்து பின் அடித்து விடலாம் என சொல்லவும், அதிமுக கழகத்தின் புதிய பொதுச்செயலாளர் அண்னன் பாக்கர் அவர்கள் அதிலே கையெழுத்திட, அதிமுகவின் புதிய தேர்தல் அறிக்கை தயாரானது. அதை முன்னாள் பொதுச்செயலாளர் அம்மா அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் வைத்து பின் அடிக்கலாம் என நினைத்த போது அங்கே ஸ்டாப்ளரை காணவில்லை, ஸ்டாப்ளரை தேடுங்கப்பா என உத்தரவிட , உடனே கழகத்தின் புதிய பொதுச்செயலாளர் அண்ணன் பாக்கர் அவர்கள், அதெற்கெல்லாம் நேரமில்லை. நாம் சமுதாய மக்களுக்கு இதை உடனடியாக அறிவிக்க வேண்டும் என சொல்ல, உடனே செங்கி அவர்கள் எச்சிலைத் தொட்டு அந்த பக்கத்தை ஒட்டினார்.
உடனடியாக இந்த செய்தியை நம் சமுதாய இதழான மக்கள் ரிப்போர்ட் இல்லை இல்லை சமுதாய மக்கள் ரிப்போர்டில் போட்டு விடலாம் என உடனடியாக செய்தி தயார் செய்யப்பட்டது. அந்த செய்தி இந்த வார சமுதாய மக்கள் ரிப்போர்ட் பத்திரிகையில் 2ஆம் பக்கத்தில் வந்திருக்கிறது. ஆனால் இவர்கள் எச்சில் தொட்டு ஒட்டி புதிதாக வடிவமைத்த அந்த தேர்தல் அறிக்கை யாருக்காவது கிடைத்தால் தயவுசெய்து எங்களுக்கு அனுப்பிவையுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக