அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! இந்த முக நூலில் பலர் பல வேஷம் போட்டு தவ்ஹீத் வாதிகளை எதிர்த்தார்கள் .அசிங்கமா திட்டினார்கள் சிலர் விமர்சனம் பண்ணினார்கள் தரீக்கா வழிகேடர்கள் பண்ணின தொல்லைகள் ஏராளம். தவ்ஹீத் வாதிகளின் புகைப்படங்களையும் பெண்களின் செக்ஸ் போட்டகளையும் சமந்தபடுத்தி பொய்யான பீதியையும் கிளப்பி விட்டு பார்த்தார்கள் நம் தவ்ஹீத் வாதிகள் கொஞ்சம் கூட அசராமல் அவர்களின் முகத்திரைகளை கிழித்தார்கள் அவர்களின் கொக்கரிப்பு நம் தவ்ஹீத்வாதிகளிடம் எடுபடாமல் போயிட்டது. இன்னும் பலர் தவ்ஹீத் வளர்ச்சி பிடிக்காமல் தவ்ஹீத் வாதிகளின் மீது சேற்றை வாரி பூசினார்கள்.அண்ணன் பீஜே அவர்கள் மீது சுமத்திய ஆதாரமில்லாத குற்றங்கள் தவிடி பொடியா ஆனது.பலர் தவ்ஹீதை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் வாதிகளின் முகவரிலும் வந்து குழப்பினார்கள் அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட பட்டது.சிலர் நடு நிலைவாதி என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீத் வாதிகளை கண்டித்தார்கள்.அதற்கும் நம் தவ்ஹீத் வாதிகள் அஞ்சாமல் அவர்கள் யார் என்பதை இந்த முக நூலில் அடையாளம் காட்டினார்கள்.பலர் நான் எந்த இயக்கத்தை சாராதவன் என்றும் நாம் ஒற்றுமையா இருக்கணும் என்றும் போராடினார்கள் அவர்களும் ஒரு சாரார் என்பதை இந்த தவ்ஹீத் வாதிகள் நிருபித்தார்கள்.அவர்களின் பொய்யான முகத்திரையும் கிழிக்கப்பட்டது. பொய்யான முக மூடி போட்டுக்கிட்டு நாங்கள் நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் பலர் தமுமுகவை சேர்ந்தவர்கள்.என்பதை வெட்கத்துடன் சொல்லிகொள்கிறேன். தவ்ஹீத் வாதிகளை எதிர்க்க கூடியவர்கள் பலர் இந்த முக நூலில் காணமல் போனார்கள்.அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! எதிர்ப்பு இருந்தால்தான் ஏகொத்துவம் (தவ்ஹீத்) வளரும்! தவ்ஹீத் மீண்டும் மீண்டும் வீறு நடை போடும்! இன்ஷா அல்லாஹ்!
வெள்ளி, 8 ஏப்ரல், 2011
தமுமுகவின் சமுதாய துரோக வரலாறு..பாகம் - 2
தமுமுக - விடுதலைப் புலிகள் அரசியல்கூட்டு
பதவிப்பசி வந்துவிட்டால்கொள்கைகளும் கோட்பாடுகளும்சமூக நலன்களும் அடியோடு காணாமல் போய்விடும் என்பது தான் அரசியல் அரிச்சுவடி. சீர்திருத்தவாதிகள் என்று தங்களை இஸ்லாமியசமூகத்தில் முன்னிறுத்தி,அதனடிப்படையில் மக்களிடையே ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி பின்னர்அரசியலில் மண்டிய இருளை அகற்ற போகிறோம் என்று சொல்லி சாக்கடையாகி போனவர்கள்தமுமுகவின் அரசியல் கட்சியான மனிதநேய மக்கள் கட்சியினர். இஸ்லாமிய சமூக நலனை விட தம் இயக்க நலனே பெரிதென்று நினைத்து மூன்று சீட்டுக்களுக்காக மொத்த சமூகத்தையும் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை அதிகரிக்க மறுக்கும்அ.தி.மு.க விடம் அடகு வைத்ததோடு மட்டுமின்றிமூன்று தொகுதிகளில்வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்வதற்காக முஸ்லிம் விரோதிகளுடன் கை கோர்த்திருக்கின்றனர் தமுமுகவினர்கள்.
இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரங்கள் எப்படி முஸ்லிம் வெறுப்பை வெளிப்படுத்தி முஸ்லிம்களின் உயிர் உடமைகளை சூரையாடுகிறதோ அதற்கு சற்றும் குறையாமல்இலங்கையில் விடுதலைப் புலிகள் என்னும் பாசிச வெறியர்கள் பிரபாகரன் தலைமையில் இலங்கை முஸ்லிம்களின் சொத்துக்களையும் உயிர்களையும் சூறையாடியவர்கள். முஸ்லிம்கள் தமது உயிரையும் விட மேலாக மதிக்கும் பள்ளிவாசல்களை தொழுகையாளிகளுடன் உயிருடன்வைத்து தீயிட்டு கொளுத்தியவர்கள் விடுதலைப் புலிகள். ஆனால் விடுதலைப் புலிகளின் தமிழக பிரதிநிதிகளுடன் சேர்ந்து கொண்டு தமுமுகவின் ஜவாஹிருல்லாஹ்வும் தமிமுன் அன்சாரியும் இலங்கை முஸ்லிம்களின் படுகொலைகளை தமிழக இஸ்லாமிய சமுதாயத்திடமிருந்துமறைக்க பார்க்கின்றனர். தமிழக முஸ்லிம் மக்களை ஏமாற்றவும்துடிக்கின்றனர். கடற்கரையோர முஸ்லிம் கிராமங்களில் இலங்கையுடன் வர்த்தக தொடர்பை வைத்திருந்த முஸ்லிம்பெரியவர்கள் உயிருடன்இருந்தால் அவர்களிடம் கேட்டுப் பாருங்கள் விடுதலைப் புலிகளின் முஸ்லிம்களுக்கெதிரானவன்முறை வெறியாட்டத்தை. கண்ணில் கண்ணீரும் வற்றிப் போகும் சோக வரலாற்றைசொல்வார்கள்.
1990 இல் இலங்கையின்கிழக்கு மாகாண மண்ணில் முஸ்லிம்களின் இரத்தம் வெள்ளமாகபாய்ந்தோடியது. பள்ளிவாசல்களிலும், முஸ்லிம் கிராமங்களிலும் ஜனாசாக்கள்மலைபோல குவிந்து கிடந்தன. ஆடு மாடுகளை போல முஸ்லிம்களை கண்ட இடத்தில் முஸ்லிம்களை சுட்டுக் கொன்றும் தீயிட்டு கொளுத்தியும் மகிழ்ந்தனர் விடுதலைப் புலிகள்.ஆகஸ்ட் 3 ஆம் தேதி,காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசல், ஹுஸைனிய்யாப் பள்ளிவாசல்களில் இஷாத் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்த 103முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.தொழுகைக்கு குனிந்த தலைகள் குருதியில் சரிந்தன. படுகொலை செய்யப்பட்டவர்களில் சுமார் 30 நபர்கள் பன்னிரண்டு வயதை தாண்டாத பாலகர்கள். ஈவிரக்கமற்ற இந்த பள்ளிவாசல் படுகொலை உலக முஸ்லிம் சமுதாயத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.ஏறாவூரை அண்டிய ஜயன்கேணி, சதான் உசைன் கிராமம் போன்றவற்றில் உறக்கத்திலிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் எல்லோருமாக 116 பேர் விடுதலைப் புலிகளினால் வெட்டியும்கொளுத்தியும்சுட்டும் கொல்லப்பட்டனர்.இந்த கொடிய நினைவுகளின் மையமான ஆகஸ்ட் மூன்றாவது நாளை இலங்கை முஸ்லிம்கள் ஸுஹதாக்கள் தினமாக பிரகடனப்படுத்தி இன்றுவரைநினைவு கூர்ந்து வருகிறார்கள்.
12-07-1990 அன்று மக்காவிற்கு ஹஜ்புனித யாத்திரை சென்று கொழும்பில் இருந்து கல்முனைவழியாக காத்தான்குடி திரும்பிக் கொண்டிருந்த 68முஸ்லிம்களை குருக்கள் மடம் பகுதியில் வைத்து விடுதலைப் புலிபயங்கரவாதிகள் வெட்டியும் சுட்டும் கொன்றனர். இறைக்கடமையை நிறைவேற்றி விட்டு தாயகம் திரும்பியவர்களை வீட்டுக்கு கூட செல்ல விடாமல் கண்டம் துண்டமாக வெட்டி தமது முஸ்லிம் எதிர்ப்பை காட்டியவர்கள் விடுதலைப் புலிகள். சங்கபரிவாரங்களும் செய்ய பயப்படும் பயங்கர செயலை படு எதார்த்தமாக செய்தவர்கள் விடுதலைப் புலிகள். அதனால தான் மராட்டிய பயங்கரவாதி பால் தாக்கரே விடுதலைப் புலிகளை ஆதரிக்கின்றார்.
1992 ஏப்ரல் 29 ம் நாள் அழிஞ்சிப் பொத்தானை கிராமத்தில் 69 முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப்பட்டனர். 1992 ஜூலை 15 ம் நாள் கிரான்குளத்தில் மறிக்கப்பட்ட பஸ்ஸிலிருந்து இறக்கப்பட்ட 22 முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப்பட்டனர். 1990 களில் கிழக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்புச் செய்ய புலிகள், முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலைகளும் அழிவுகளும் வரலாற்றுப் பதிவுகளுக்குரிய பேரவலமாகும். பொத்துவில் தொடக்கம், அக்கரைப்பற்று, ஒலுவில், சாய்ந்தமருது, காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிண்ணியா, மூதூர் என புலிகள் முஸ்லிம்கள் மீது மிகப்பெரியளவிலான பாசிச பயங்கரவாதத்தை ஏவி அவர்களை வெளியேற்ற முயன்றனர். கிழக்கின் பல முஸ்லிம் கிராமங்கள் பலவருடங்களாகபுலிகளின் பாசிச பயங்கரவாத முற்றுகைக்குள்ளேயே இருந்தன. ஆனால் இவற்றையெல்லாம் முஸ்லிம் சமுதாயம் மறக்க வேண்டுமென தமுமுக எண்ணுகிறது. வரலாற்றை மறைக்கவும் முயல்கிறது.
விடுதலைப் புலிகளின் தமிழக பிரதிநிதியாய், பிரபாகரனை தானைத் தலைவனாய் ஏற்று வலம் வருபவர் சீமான் என்னும் கூத்தாடி. அந்த சீமானுடன் கூட்டு சேர்ந்திருக்கின்றனர் தமுமுக - மமகவினர்கள். இவருடன் சேர்ந்து தான் மாற்று அரசியலை முன்னெடுக்க போகிறோம் என்று விளக்கமும் கொடுக்கின்றனர். பின்னர் எந்த அடிப்படையில் தமுமுகவினர்கள்முஸ்லிம் சமூகத்தின் நலனை காப்பாற்ற போகிறார்கள்? சில ஆயிரம் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் ஒட்டு வேண்டுமென்பதற்காக பயங்கரவாத விடுதலைப்புலிகளுடன் கூட்டு சேர்ந்திருக்கிறார்கள். முஸ்லிம்களை கருவறுத்து படுகொலை செய்ததோடு மட்டுமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை துரத்தியடித்து முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாடி, சொந்த நாட்டில் அகதிகளாக்கிய விடுதலைப் புலிகள் என்னும்பயங்கரவாதிகளுடன் கூட்டு சேர்ந்த தமுமுக - மமக வினர்கள் எவ்வாறு முஸ்லிம் சமுதாயத்திற்கு குரல் கொடுப்பார்கள்? இன்று விடுதலைப்புலிகளுடன் அரசியல் ஆதாயத்திற்காகஉறவை வைத்துக்கொள்ளும் தமுமுகவினர்கள், விடுதலைப் புலி பயங்கரவாதிகளால்அநியாயமாக தமது உயிரை இழந்த முஸ்லிம்களின் ஜனாசாக்களுக்கு என்ன பதிலை சொல்ல போகிறார்கள்? அறிவுடைய ஒவ்வொரு முஸ்லிமும் இதை சிந்திக்க வேண்டும். இதையும் மீறி தமுமுக- மமக வினர்களுக்கு போடும் ஒட்டு இலங்கையில் விடுதலைப்புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட ஒவ்வொரு முஸ்லிமின் ஜனாஸாவின் மேல் ஏறி நின்று போடுகிற ஓட்டுக்கள்என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
நன்றி: உணர்வு வார இதழ்
சைத்தானிய போராளிகள் காத்தான்குடியில் நிகழ்த்திய சமூக அழிப்பு படுகொலையை பாருங்கள்!
முஸ்லீம்களை கொத்தாக கொன்று குவித்த விடுதலைப்புலிகளின் தலைவரை தன் அண்ணன் என்று சொல்லிக்கொள்ளும் சீமானுடன் சேர்ந்து கேவலம் ஓட்டுக்காக இந்த மாமா கட்சியின் இனதுரோகிகள் இணைந்து சிரிக்கும் காட்சியை பார்க்கும் சமுதாயமே! இந்த சமுதாய துரோகிகளுக்கா நீங்கள் வாக்களிக்கப்போகிறீர்கள்?
இதை காப்பி செய்து அனைத்து சகோதரர்களுக்கும் பரப்புங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக