அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! இந்த முக நூலில் பலர் பல வேஷம் போட்டு தவ்ஹீத் வாதிகளை எதிர்த்தார்கள் .அசிங்கமா திட்டினார்கள் சிலர் விமர்சனம் பண்ணினார்கள் தரீக்கா வழிகேடர்கள் பண்ணின தொல்லைகள் ஏராளம். தவ்ஹீத் வாதிகளின் புகைப்படங்களையும் பெண்களின் செக்ஸ் போட்டகளையும் சமந்தபடுத்தி பொய்யான பீதியையும் கிளப்பி விட்டு பார்த்தார்கள் நம் தவ்ஹீத் வாதிகள் கொஞ்சம் கூட அசராமல் அவர்களின் முகத்திரைகளை கிழித்தார்கள் அவர்களின் கொக்கரிப்பு நம் தவ்ஹீத்வாதிகளிடம் எடுபடாமல் போயிட்டது. இன்னும் பலர் தவ்ஹீத் வளர்ச்சி பிடிக்காமல் தவ்ஹீத் வாதிகளின் மீது சேற்றை வாரி பூசினார்கள்.அண்ணன் பீஜே அவர்கள் மீது சுமத்திய ஆதாரமில்லாத குற்றங்கள் தவிடி பொடியா ஆனது.பலர் தவ்ஹீதை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் வாதிகளின் முகவரிலும் வந்து குழப்பினார்கள் அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட பட்டது.சிலர் நடு நிலைவாதி என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீத் வாதிகளை கண்டித்தார்கள்.அதற்கும் நம் தவ்ஹீத் வாதிகள் அஞ்சாமல் அவர்கள் யார் என்பதை இந்த முக நூலில் அடையாளம் காட்டினார்கள்.பலர் நான் எந்த இயக்கத்தை சாராதவன் என்றும் நாம் ஒற்றுமையா இருக்கணும் என்றும் போராடினார்கள் அவர்களும் ஒரு சாரார் என்பதை இந்த தவ்ஹீத் வாதிகள் நிருபித்தார்கள்.அவர்களின் பொய்யான முகத்திரையும் கிழிக்கப்பட்டது. பொய்யான முக மூடி போட்டுக்கிட்டு நாங்கள் நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் பலர் தமுமுகவை சேர்ந்தவர்கள்.என்பதை வெட்கத்துடன் சொல்லிகொள்கிறேன். தவ்ஹீத் வாதிகளை எதிர்க்க கூடியவர்கள் பலர் இந்த முக நூலில் காணமல் போனார்கள்.அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! எதிர்ப்பு இருந்தால்தான் ஏகொத்துவம் (தவ்ஹீத்) வளரும்! தவ்ஹீத் மீண்டும் மீண்டும் வீறு நடை போடும்! இன்ஷா அல்லாஹ்!

வியாழன், 21 ஏப்ரல், 2011

கற்பை விற்றுப் பிழைக்கலாம்..ஈமான் விற்றவர்களின் எஸ்.எம்.எஸ்

தேர்தலுக்கு முன்தினம் மமக போட்டியிடும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, இராமநாதபுரம் மற்றும் ஆம்பூர் தொகுதியில் சில விசமிகளால் பரவலாக ஒரு குறுந்தகவல் அனுப்பப்பட்டது. அதாவதுமமக போட்டியிடும் தொகுதிகளில் ததஜ வாக்காளர்களுக்கு 1000 ரூபாய் கொடுத்து மமகவுக்கு வாக்களிக்காதே என பிரச்சாரம் செய்கிறது. இந்த பிழைப்புக்கு அவர்கள் கற்பை விற்றுப் பிழைக்கலாம்என்ற குறுஞ்செய்தி அனைவரது மொபைல் போன்களிலும் இடம்பிடித்தது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை சமுதாய நலன் கருதி மட்டுமே ஒருவரை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டை காலம் காலமாய் கடைப்பிடிக்கிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யாரை ஆதரித்தாலும் அவர்கள் முந்தைய காலங்களில் சமுதாயத்திற்குச் செய்த துரோகங்களை மறைப்பதும் இல்லை. குறைப்பதும் இல்லை. அவர்கள் செய்த துரோகங்களை அவர்களிடமே சுட்டிக் காட்டுவது தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தனிச் சிறப்பு. அதற்கு மிகச் சிறந்த உதாரணம், சேப்பாக்கத்தில் வேட்பாளர் ஜெ.அன்பழகனை வைத்துக் கொண்டு திமுக முன்னாள் அமைச்சர் .ராசா செய்த ஸ்பெக்ட்ரம் ஊழலைச் சுட்டிக் காட்டியது தான்.
அது மட்டுமின்றி யாரையாவது எதிர்ப்பது என்ற நிலைப்பாட்டையும் சமுதாய நலன் கருதி மட்டுமே எடுக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். அவர்களுடன் கூடிய சொந்தப் பகையை கருதாமல் அவர்களால் ஏற்படும் சமுதாய துரோகங்களின் அடிப்படையில் மட்டுமே முடிவெடுக்கப்படுகிறது. அந்த வகையில் தான் சென்ற தேர்தலில் மமகவினர் இஸ்லாமிய சமூகத்திற்குச் செய்த துரோகங்களைச் சொல்லி சொல்லி வாக்குக் கேட்டது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். அதுவே போதுமான பிரச்சாரம் ஆகும். அதைவிடுத்து வாக்களார்களுக்கு காசு கொடுத்து ஓட்டுக் கேட்டால், மக்கள் மத்தியில் தனி இடம் பிடித்திருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் மற்றவர்களைப் போல பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற தரங்கெட்ட அமைப்பு தான் என மக்கள் முத்திரை குத்தி விடுவார்கள். இதற்கு பயந்து கூட இந்த வேலையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்றைக்குமே செய்யாது. செய்யவும் இல்லை.
ஆனால் ஒரு காலத்தில் கருணாநிதி தான் நம் சமுதாயக் காவலர் அவர் தான் நமக்கு இடஒதுக்கீடு தந்தார் எனவும், ஜெயலலிதா மோடியின் தோழி, பாஜகவின் ஊதுகுழல் என்றும் சொன்னவர்கள் சர்க்கஸில் போடும் அந்தர் பல்டியைப் போல அப்படியே மாறி அம்மா அம்மா என பெற்ற தாயை அழைப்பது போல அழைத்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கிறார்கள். பொது மேடைகளிலும், நோட்டீஸ்களிலும் ஜெயலலிதா என்று சொல்லக் கூட திராணியற்றவர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பற்றி பேச பரப்ப என்ன தகுதி இருக்கிறது?
ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு குறித்து எதுவும் சொல்லவில்லை என செய்தி பரவிய உடன் பல நடுநிலையாளர்கள் மமக வேட்பாளர்களுக்கு போன் செய்து நீங்கள் கூட்டணியை விட்டு வெளியேறிவிடுங்கள் என அழைப்பு விட்டபோதும் கூட அதையெல்லாம் நாங்கள் காதில் வாங்கிக் கொள்ள மாட்டோம், சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு கிடைத்தால் என்ன கிடைக்கா விட்டால் என்ன? எங்களுக்கு இடஒதுக்கீட்டை அம்மா தந்து விட்டார். அம்மா! அம்மா! அம்மா! என அடம்பிடிக்கும் பிள்ளைகள் போல அல்லாஹ்வை மறந்து அம்மாவுக்கு பாராட்டு பாமாலை பாடிய இவர்களும், பாலியல் மற்றும் பொருளாதார குற்றச்சாட்டு காரணமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களும் ஒன்று சேர்ந்துகொண்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் பணம் கொடுத்ததாக பரப்பிய குறுந்தகவல்களை அவர்களின் தொண்டர்களே நம்பவில்லை என்பது தான் உண்மை.
1 சீட்டுக் கலாச்சாரத்தை மீட்டெடுக்க புறப்பட்டு கடைசியில் அரை சீட்டுக்கு ஒப்புக் கொண்டு சமுதாய மானத்தை விற்றவர்கள், எக்காரணம் கொண்டும் எங்களின் சொந்தப் பணத்தை தேர்தலுக்கு செலவு செய்ய மாட்டோம் என மக்களின் காசுகளை வசூல் செய்து அந்தக் காசை வைத்து ஏசி கார்களில் பவனி வந்து, ஏசி ஹோட்டல்களில் ரூம் எடுத்து தங்கி, தன் தொண்டர்கள் தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை விற்றவர்கள், அம்மா இட ஒதுக்கீட்டை அறிவிக்காத போதும் கூட அதிமுக கூட்டணியில் தான் நீடிப்போம் எனக் கூறி சமுதாய முன்னேற்றத்தை விற்றவர்கள், பதவி சுகத்திற்காக மட்டுமே சமுதாய நலனை விற்றவர்கள், தன் தலைவியின் முன்னால் இன்ஷா அல்லாஹ் சொல்ல மனம் வராமல் அதை மென்று முழுங்கி ஈமானை விற்றவர்கள் சொல்கிறார்களாம் கற்பை விற்றுப் பிழைக்கலாம் என்று! மக்களுக்கே தெரியும் கற்பை விற்றுப் பிழைப்பதை விட கேவலமான செயல்படுபவர்கள் யார் என்று?
நன்றி: உணர்வு வார இதழ்

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

தமுமுகவின் சமுதாய துரோக வரலாறு..பாகம் - 2


தமுமுக - விடுதலைப் புலிகள் அரசியல்கூட்டு
பதவிப்பசி வந்துவிட்டால் கொள்கைகளும் கோட்பாடுகளும் சமூக நலன்களும் அடியோடு காணாமல் போய்விடும் என்பது தான் அரசியல் அரிச்சுவடி. சீர்திருத்தவாதிகள் என்று தங்களை இஸ்லாமிய சமூகத்தில் முன்னிறுத்தி,அதனடிப்படையில் மக்களிடையே ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி பின்னர்அரசியலில் மண்டிய இருளை அகற்ற போகிறோம் என்று சொல்லி சாக்கடையாகி போனவர்கள் தமுமுகவின் அரசியல் கட்சியான மனிதநேய மக்கள் கட்சியினர். இஸ்லாமிய சமூக நலனை விட தம் இயக்க நலனே பெரிதென்று நினைத்து மூன்று சீட்டுக்களுக்காக மொத்த சமூகத்தையும் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை அதிகரிக்க மறுக்கும் அ.தி.மு.க விடம் அடகு வைத்ததோடு மட்டுமின்றி மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்வதற்காக முஸ்லிம் விரோதிகளுடன் கை கோர்த்திருக்கின்றனர் தமுமுகவினர்கள்.
இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரங்கள் எப்படி முஸ்லிம் வெறுப்பை வெளிப்படுத்தி முஸ்லிம்களின் உயிர் உடமைகளை சூரையாடுகிறதோ அதற்கு சற்றும் குறையாமல் இலங்கையில் விடுதலைப் புலிகள் என்னும் பாசிச வெறியர்கள் பிரபாகரன் தலைமையில் இலங்கை முஸ்லிம்களின் சொத்துக்களையும் உயிர்களையும் சூறையாடியவர்கள். முஸ்லிம்கள் தமது உயிரையும் விட மேலாக மதிக்கும் பள்ளிவாசல்களை தொழுகையாளிகளுடன் உயிருடன் வைத்து தீயிட்டு கொளுத்தியவர்கள் விடுதலைப் புலிகள். ஆனால் விடுதலைப் புலிகளின் தமிழக பிரதிநிதிகளுடன் சேர்ந்து கொண்டு தமுமுகவின் ஜவாஹிருல்லாஹ்வும் தமிமுன் அன்சாரியும் இலங்கை முஸ்லிம்களின் படுகொலைகளை தமிழக இஸ்லாமிய சமுதாயத்திடமிருந்து மறைக்க பார்க்கின்றனர். தமிழக முஸ்லிம் மக்களை ஏமாற்றவும் துடிக்கின்றனர். கடற்கரையோர முஸ்லிம் கிராமங்களில் இலங்கையுடன் வர்த்தக தொடர்பை வைத்திருந்த முஸ்லிம்பெரியவர்கள் உயிருடன் இருந்தால் அவர்களிடம் கேட்டுப் பாருங்கள் விடுதலைப் புலிகளின் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறை வெறியாட்டத்தை. கண்ணில் கண்ணீரும் வற்றிப் போகும் சோக வரலாற்றை சொல்வார்கள்.
1990 இல் இலங்கையின் கிழக்கு மாகாண மண்ணில் முஸ்லிம்களின் இரத்தம் வெள்ளமாக பாய்ந்தோடியது. பள்ளிவாசல்களிலும், முஸ்லிம் கிராமங்களிலும் ஜனாசாக்கள் மலைபோல குவிந்து கிடந்தன. ஆடு மாடுகளை போல முஸ்லிம்களை கண்ட இடத்தில் முஸ்லிம்களை சுட்டுக் கொன்றும் தீயிட்டு கொளுத்தியும் மகிழ்ந்தனர் விடுதலைப் புலிகள். ஆகஸ்ட் 3 ஆம் தேதி,காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசல், ஹுஸைனிய்யாப் பள்ளிவாசல்களில் இஷாத் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்த 103முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.தொழுகைக்கு குனிந்த தலைகள் குருதியில் சரிந்தன. படுகொலை செய்யப்பட்டவர்களில் சுமார் 30 நபர்கள் பன்னிரண்டு வயதை தாண்டாத பாலகர்கள். ஈவிரக்கமற்ற இந்த பள்ளிவாசல் படுகொலை உலக முஸ்லிம் சமுதாயத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. ஏறாவூரை அண்டிய ஜயன்கேணி, சதான் உசைன் கிராமம் போன்றவற்றில் உறக்கத்திலிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் எல்லோருமாக 116 பேர் விடுதலைப் புலிகளினால் வெட்டியும் கொளுத்தியும் சுட்டும் கொல்லப்பட்டனர்.இந்த கொடிய நினைவுகளின் மையமான ஆகஸ்ட் மூன்றாவது நாளை இலங்கை முஸ்லிம்கள் ஸுஹதாக்கள் தினமாக பிரகடனப்படுத்தி இன்றுவரை நினைவு கூர்ந்து வருகிறார்கள்.
12-07-1990 அன்று மக்காவிற்கு ஹஜ் புனித யாத்திரை சென்று கொழும்பில் இருந்து கல்முனைவழியாக காத்தான்குடி திரும்பிக் கொண்டிருந்த 68முஸ்லிம்களை குருக்கள் மடம் பகுதியில் வைத்து விடுதலைப் புலிபயங்கரவாதிகள் வெட்டியும் சுட்டும் கொன்றனர். இறைக்கடமையை நிறைவேற்றி விட்டு தாயகம் திரும்பியவர்களை வீட்டுக்கு கூட செல்ல விடாமல் கண்டம் துண்டமாக வெட்டி தமது முஸ்லிம் எதிர்ப்பை காட்டியவர்கள் விடுதலைப் புலிகள். சங்கபரிவாரங்களும் செய்ய பயப்படும் பயங்கர செயலை படு எதார்த்தமாக செய்தவர்கள் விடுதலைப் புலிகள். அதனால தான் மராட்டிய பயங்கரவாதி பால் தாக்கரே விடுதலைப் புலிகளை ஆதரிக்கின்றார்.

1992 ஏப்ரல் 29 ம் நாள் அழிஞ்சிப் பொத்தானை கிராமத்தில் 69 முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப்பட்டனர். 1992 ஜூலை 15 ம் நாள் கிரான்குளத்தில் மறிக்கப்பட்ட பஸ்ஸிலிருந்து இறக்கப்பட்ட 22 முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப்பட்டனர். 1990 களில் கிழக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்புச் செய்ய புலிகள், முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலைகளும் அழிவுகளும் வரலாற்றுப் பதிவுகளுக்குரிய பேரவலமாகும். பொத்துவில் தொடக்கம், அக்கரைப்பற்று, ஒலுவில், சாய்ந்தமருது, காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிண்ணியா, மூதூர் என புலிகள் முஸ்லிம்கள் மீது மிகப்பெரியளவிலான பாசிச பயங்கரவாதத்தை ஏவி அவர்களை வெளியேற்ற முயன்றனர். கிழக்கின் பல முஸ்லிம் கிராமங்கள் பல வருடங்களாக புலிகளின் பாசிச பயங்கரவாத முற்றுகைக்குள்ளேயே இருந்தன. ஆனால் இவற்றையெல்லாம் முஸ்லிம் சமுதாயம் மறக்க வேண்டுமென தமுமுக எண்ணுகிறது. வரலாற்றை மறைக்கவும் முயல்கிறது.
விடுதலைப் புலிகளின் தமிழக பிரதிநிதியாய், பிரபாகரனை தானைத் தலைவனாய் ஏற்று வலம் வருபவர் சீமான் என்னும் கூத்தாடி. அந்த சீமானுடன் கூட்டு சேர்ந்திருக்கின்றனர் தமுமுக - மமகவினர்கள். இவருடன் சேர்ந்து தான் மாற்று அரசியலை முன்னெடுக்க போகிறோம் என்று விளக்கமும் கொடுக்கின்றனர். பின்னர் எந்த அடிப்படையில் தமுமுகவினர்கள் முஸ்லிம் சமூகத்தின் நலனை காப்பாற்ற போகிறார்கள்? சில ஆயிரம் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் ஒட்டு வேண்டுமென்பதற்காக பயங்கரவாத விடுதலைப்புலிகளுடன் கூட்டு சேர்ந்திருக்கிறார்கள். முஸ்லிம்களை கருவறுத்து படுகொலை செய்ததோடு மட்டுமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை துரத்தியடித்து முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாடி, சொந்த நாட்டில் அகதிகளாக்கிய விடுதலைப் புலிகள் என்னும் பயங்கரவாதிகளுடன் கூட்டு சேர்ந்த தமுமுக - மமக வினர்கள் எவ்வாறு முஸ்லிம் சமுதாயத்திற்கு குரல் கொடுப்பார்கள்? இன்று விடுதலைப்புலிகளுடன் அரசியல் ஆதாயத்திற்காக உறவை வைத்துக்கொள்ளும் தமுமுகவினர்கள், விடுதலைப் புலி பயங்கரவாதிகளால் அநியாயமாக தமது உயிரை இழந்த முஸ்லிம்களின் ஜனாசாக்களுக்கு என்ன பதிலை சொல்ல போகிறார்கள்? அறிவுடைய ஒவ்வொரு முஸ்லிமும் இதை சிந்திக்க வேண்டும். இதையும் மீறி தமுமுக- மமக வினர்களுக்கு போடும் ஒட்டு இலங்கையில் விடுதலைப்புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட ஒவ்வொரு முஸ்லிமின் ஜனாஸாவின் மேல் ஏறி நின்று போடுகிற ஓட்டுக்கள் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
நன்றி: உணர்வு வார இதழ்
சைத்தானிய போராளிகள் காத்தான்குடியில் நிகழ்த்திய சமூக அழிப்பு படுகொலையை பாருங்கள்!


முஸ்லீம்களை கொத்தாக கொன்று குவித்த விடுதலைப்புலிகளின் தலைவரை தன் அண்ணன் என்று சொல்லிக்கொள்ளும் சீமானுடன் சேர்ந்து கேவலம் ஓட்டுக்காக இந்த மாமா கட்சியின் இனதுரோகிகள் இணைந்து சிரிக்கும் காட்சியை பார்க்கும் சமுதாயமே! இந்த சமுதாய துரோகிகளுக்கா நீங்கள் வாக்களிக்கப்போகிறீர்கள்?
இதை காப்பி செய்து அனைத்து சகோதரர்களுக்கும் பரப்புங்கள்

தமுமுகவின் சமுதாய துரோக வரலாறு..பாகம் - 1

ஒவ்வொரு தேர்தலின் பொழுதும் முஸ்லிம் சமுதாயத்திற்கு நன்மை செய்யக்கூடிய கட்சி எது என்பதை பொறுத்து முஸ்லிம்களின் வாக்குகள் அமைய வேண்டும் என்பதில் மிகுந்த உறுதியுடனும் வீரியத்துடனும் செயல்பட்டு வந்துள்ளது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். தேர்தலில் போட்டியிட்டு தமக்காக எந்த சீட்டும் பெறுவதில்லை என்பதை தன் அடிப்படை கொள்கையாகவே கொண்டுள்ள தவ்ஹீத் ஜமாத்தின் பின்னால் மக்கள் அணியணியாக திரண்டு வந்ததை கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இந்த சமூகம் கவனித்து வருகிறது.

சமுதாய மக்களிடையே விழிப்புணர்வும் செயல்திறனும் அதிகரித்திருப்பதற்கு இது போன்ற சமூக மாற்றங்கள் ஒரு அத்தாட்சியாகவும் உள்ளன.
இதை கண்டு பொறுக்க இயலாத தமுமுகவினர், இந்த சமுதாயத்தை தன் பக்கம் இழுத்துக்கொள்ள பல வகையான முயற்சிகளை செய்து பார்த்தாலும் எந்த முயற்சிக்கும் அவர்களுக்கு அல்லாஹ் பலன் அளிக்கவில்லை என்பதையும் நாம் அறிவோம்.
ஒரு காலத்தில் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பதையே கொள்கையாக கொண்டு செயல்பட்ட இந்த இயக்கம், தவ்ஹீத் ஜமாத்திற்கு கிடைத்திருக்கும் அபரிவிதமான வளர்ச்சியை கண்டு கொதிப்படைந்து , நேரடி அரசியலில் பங்கு கொண்டு அதன் மூலம் மக்களை கவர்ந்து தன் பக்கம் இழுதுக்கொள்ளலாம் என்று தப்புக்கணக்கு போட்டனர்.
தங்களின் சுய லாபத்திற்காகவும், பணம் சம்பாதிப்பதற்காகவும், புகழ் அடைவதற்காகவும், அரசியல் அதிகாரத்தை பெற்று சமூகத்தை சுரண்டிப்பிழைப்பதற்காகவும் அரசியல் களம் கண்டுள்ளனர் இந்த தமுமுகவினர்.
ஏற்கனவே இறைவன் மீது ஆணையாக அரசியலில் நுழைவதில்லை என்று இந்த சமுதாயத்திடம் சத்தியம் செய்ததையும், இன்று அந்த சத்தியத்தை அவர்களே மீறி, தாங்கள் எந்த கொள்கையும் அற்றவர்கள் என்பதை தாங்களே நிரூபித்துக்கொண்டனர் என்பதையும் பல முறை நாம் விரிவாக விளக்கியுள்ளோம்.
அது ஒரு பக்கம் இருக்க, தாங்கள் எந்த நோக்கத்திற்காக அரசியலில் நுழைந்தோமோ, அந்த நோக்கத்தை வெளிக்காட்டினால் இந்த சமூகம் காறித்துப்பும் என்பதால், நாங்களும் சமுதாய போராளிகள் தான் என்ற நாடகத்தை அரங்கேற்றும் விதமாக தவ்ஹீத் ஜமாஅத் ஒவ்வொரு தேர்தலின் போதும் சமுதாய கோரிக்கை ஒன்றை முன்வைத்து போராடுவதை போன்று இந்த கும்பலும் போராட்டங்களை அறிவிக்க துவங்கியது.
கடந்த 2005 - 2006 ஆம் ஆண்டுகளில் தமிழக அளவில் முஸ்லிம்களுக்கான தனி இட ஓதிக்கீட்டுக்கான அவசியத்தை தவ்ஹீத் ஜமாத்தின் பிரச்சாரங்கள் வாயிலாக அனைத்து மக்களும் மிக துல்லியமாக விளங்கிக்கொண்டனர்.
2006
இல் ஆட்சி மாற்றத்திற்கு காத்திருக்கும் அரசியல் கட்சிகளின் முன்னால் இட ஒதிக்கீட்டை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி, அதை நிறைவேற்றி தருபவர்களுக்கே முஸ்லிம் சமுதாயத்தின் வாக்கு, என்ற உறுதியான நிலையை உருவாக்கி, மொத்த இந்தியாவின் அரசியல் பார்வையை தமிழக முஸ்லிம்களை நோக்கி திருப்பியதில் தவ்ஹீத் ஜமாஅத் தனது பங்களிப்பை வெகு சிறப்பாக செய்திருந்தது.
முஸ்லிம் சமூகத்தின் இத்தகைய விழிப்புணர்வை கண்டு கொண்ட இந்த தமுமுகவினர், இதே போன்ற ஆயுதத்தை நாமும் கையில் எடுத்தால் எளிதாக மக்கள் மனதில் இடம் பிடித்து விடலாம், இதன் மூலம் அரசியல் பிரவேசத்திற்கு தேவையான மக்கள் செல்வாக்கையும் மிக எளிதாக சம்பாதித்து விடலாம் என்ற நப்பாசையில் தங்கள் இயக்கம் சார்பாக இட ஒதிக்கீடு கோஷங்களை செய்ய துவங்கினர்.
தேர்தலில் போட்டியிடாதவர்கள் போராட்டத்திற்கு அழைத்தால் மக்கள் வருவார்கள், தேர்தலில் போட்டியிட்டு தங்களுக்காக சீட்டு பெறும் நோக்கில் செயல்படுபவர்களின் பின்னால் மக்கள் அணி திரள மாட்டார்கள் என்ற சாதாரண உண்மையை கூட விளங்காத இவர்கள், தங்கள் நோக்கம் நிறைவேறி விடும் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருந்தனர்.
இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை கூட மறந்து, இவர்கள் நிகழ்த்திக்கொண்டிருந்த நாடகத்தை அம்பலப்படுத்தும் விதமாக அல்லாஹ் இவர்களை அன்றே சந்தி சிரிக்க வைத்தான்.
இட ஒதிக்கீட்டை தருபவர்களுக்கு தான் ஓட்டு, அதை தராமல் ஏமாற்றும் எந்த கட்சியானாலும் தயவு தாட்சணியமற்ற எதிர்ப்பு என்ற மிக உறுதியான நிலையில் தவ்ஹீத் ஜமாஅத் ஒரு பக்கம் போராடிக்கொண்டிருந்த வேளையில், தாங்கள் அப்போது சார்ந்துள்ள திமுகவின் தயவை இழந்து விடக்கூடாது என்ற காரணத்திற்காக, தாங்கள் நடத்திய இட ஓதிக்கீட்டு போராட்டத்தை கூட மென்மையாக்கி கொண்டனர் இந்த தமுமுகவினர்.
மாநில அரசுக்கு இட ஒதிக்கீடு வழங்குகின்ற அதிகாரமே இல்லை என்று கூறி, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கருணாநிதியை எதிர்த்து தமிழகத்தில் போராட துப்பில்லாமல் டில்லி சென்றனர் இந்த கும்பல்.
இந்த சமுதாயம் அன்றே இவர்களை அடையாளம் கண்டு கொண்டது !
இருந்தாலும், பேராசையும் பணத்தாசையும் ஒருவனுக்கு வந்து விட்டால், அவன் எந்த இழி நிலைக்கும் செல்வான் என்பதை இந்த சமூகம் உணர வேண்டும் என்பதற்காக இந்த கும்பலின் பச்சோந்தித்தனத்தை அன்று முதல் இன்றைய தேதி வரை அல்லாஹ் நமக்கு அம்பலப்படுத்தி தந்து கொண்டே இருக்கிறான் என்பது தான் வேடிக்கை!
இட ஒதிக்கீட்டை வழங்குகின்ற அதிகாரம் கருணாநிதிக்கு இல்லை என்றார்கள்.
கருணாநிதியை அவராகவே இட ஒதிக்கீட்டை வழங்க வைத்து , இட ஒதிக்கீட்டை வழங்கும் அதிகாரம் கருணாநிதிக்கு உள்ளது என்றும், இந்த போலிகள் கூறுவது தான் பொய் எனவும் அல்லாஹ் உடனடியாக நிறைவேற்றிக்காட்டினான்.
அடுத்ததாக, இந்த அளவிற்கு போராடி கிடைத்த இட ஓதிக்கீட்டில் குளறுபடி என்று மக்கள் மீண்டும் வெம்ப துவங்க, இட ஒதிக்கீடு என்றால் இப்படி தான், இது ஒரு "சைக்கிள்" , ரோஸ்டர் முறையில் பல வருடங்கள் கழித்து தான் மக்களுக்கு கிடைக்கும் என்று மீண்டும் கருணாநிதிக்கு முட்டுக்கொடுத்து தங்கள் அரசிய சுயநலத்தை வெளிப்படுத்தியது இந்த கூட்டம்.
உண்மையில், இது ரோஸ்டர் முறையோ, 'cyclic ' முறையோ அல்ல, இது நிர்வாக குறையால் தான் ஏற்படுகிறது என்று அன்றே தவ்ஹீத் ஜமாத மக்களிடையே பிரசாரம் செய்து, இதற்காகவும் பல போராட்டங்களை நடத்தியது.
முடிவு என்ன? அல்லாஹ் இந்த செயலிலும் அந்த கும்பலுக்கு செருப்படி கொடுத்தான்.
மக்களின் முழு வீச்சான போராட்டங்களை கண்டு கொண்ட முதல்வர், இது ரோஸ்டரும் இல்லை சர்கிளும் இல்லை, இது அதிகாரிகள் கவனக்குறைவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தான் என்றும், உடனடியாக இது சரி செய்யப்படும் என்று தன் வாயாலேயே உறுதி கொடுத்தார்.
எவருக்காக இந்த கும்பல் வக்காலத்து வாங்கியதோ, அவரே இந்த கும்பலுக்கு மூக்குடைப்பு கொடுத்தார் எனும் போது, இதை விடவும் சமுதாயத்தில் அவமானப்பட்டவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது .
தங்களின் நோக்கம் பதவியும் பணமும் தான் என்றாலும், அந்த நோக்கத்தை வெளிக்காட்டாமல் அரசியல் செய்ய இவர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் இறுதியில் இறைவனால் கேவலப்படுதப்பட்டன!
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் வந்தது.
தொடர்ந்து அவமானப்பட்டதால் , இனியும் கருணாநிதியிடம் இருந்து வந்தால் தங்களுக்கு போதிய மதிப்பும் அந்தஸ்தும் , தேவையான பணமும் கிடைக்காது என்று எண்ணிய இவர்கள், அவரை விட்டு விலகி தனியாக தேர்தலை சந்தித்து ஓட்டு பொறுக்கலாம் என்று முடிவு செய்தனர்.
அன்றைய தேதி வரை கலைஞரை புகழ்ந்து வந்தவர்கள், திடீரென அவை விட்டு விலகுகிறார்களே என்று மக்கள் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காக இவர்கள் இன்னொரு பொய்யை சொன்னார்கள்.
கலைஞர் பாராளுமன்றத்திற்கு எங்களுக்காக ஒரு தொகுதி மட்டுமே ஒதிக்கீடு செய்துள்ளார். அது எங்களுக்கு போதுமானதாக இல்லை, ஆகவே நாங்கள் அவரை விட்டு விலகுகிறோம், என்றனர்.
2006
இல் இட ஓதிக்கீட்டுக்காக போராட்டங்கள் பல செய்த நிலையில் , அதை நிறைவேற்றி தந்த கலைஞருக்கு நன்றி செய்யும் முகமாக பாராளமன்ற தேர்தலில் கலைஞருக்கு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவளித்த நிலையில், தங்களுக்கும் இட ஓதிக்கீட்டு போராட்டங்களுக்கும் துளி கூட சம்மந்தமில்லை என்பதை மக்களுக்கு புரிய வைக்கும் முகமாக, தங்களின் சுய லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு முடிவு செய்தனர் இந்த தமுமுகவினர்.
மக்களை ஏமாற்றி நயவஞ்சக செயலில் ஈடுபடுகிற எவரையும் அல்லாஹ் விட்டு வைக்க மாட்டான் என்பதற்கு அந்த தேர்தலின் முடிவே பாடமாக அமைந்தது!
ஆம்!, அந்த தேர்தலில் தனியாக, சிறு சிறு சில்லறை கட்சிகளின் ஆதரவோடு பதவி ஆசையை நிறைவேற்றுவதற்காக போட்டியிட்டவர்கள், தாங்கள் செலுத்திய முன்பணத்தை கூட திரும்ப பெற திராணியற்று டெபாசிட் இழந்தனர்!!
உண்மையில் அவர்கள் இழந்தது டெபாசிட்டா? இல்லை!! தங்களின் மானம் தான் அன்று அவர்களால் இழக்கப்பட்டது !!!!

ஒரு முமின் ஒரு முறை தவறு செய்வான். பின்னர் திருந்திக்கொள்வான். அது முமினின் பண்பு தான், எங்களின் பண்பல்ல என்பதை வெளிக்காட்டும் முகமாக, இதோ, இந்த வருடத்தின் சட்ட மன்ற தேர்தலில் அவர்கள் மீண்டும் படையெடுக்க துவங்கியுள்ளனர்.
அது சரி, மானம் உள்ளவர்களுக்கு தானே அவமானம் என்ற ஒன்று ஏற்படும், அவர்கள் தான் அனைத்தையும் அன்றே இழந்து விட்டார்களே, இனியும் அவர்களுக்கு மானம் போய் விட்டது என்று நம்மால் சொல்ல முடியாது தான்!

இந்த சட்டமன்ற தேர்தலை பொறுத்த வரையிலும், தவ்ஹீத் ஜமாஅத் அதே சமுதாய அக்கறையை மையப்படுத்தி தேர்தலை சந்திக்கிறது என்பதும் அனைவரும் அறிந்ததே.
கலைஞர் முன்பு தந்துள்ள இட ஓதிக்கீட்டுக்கான நன்றியை முந்தைய பாராளமன்ற தேர்தலிலேயே காட்டி விட்ட நாம், இப்போது அடுத்த கோரிக்கையை முன் வைக்க வேண்டும் என்று பிரசாரம் செய்தனர்.
கிடைத்த இட ஓதிக்கீட்டின் அளவு போதுமானதாக இல்லை. நம் விகிதாச்சார அடிப்படையில் பார்த்தால் 3 .5 % என்பது மிக குறைவான அளவு என்பதால், இதை மேலும் அதிகரித்து தருபவர்களுக்கு இந்த முறை முஸ்லிம்கள் வாக்களிக்கலாம் என்ற முடிவை தவ்ஹீத் ஜமாஅத் எடுத்து, அதையே கோரிக்கையாக கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் வைத்தது!
வழக்கம் போல, இந்த மானமிழந்த தமுமுகவினர், அவர்கள் பங்குக்கு வேறு கோரிக்கை ஒன்றை வைத்தனர். தங்களுக்கென்று அதிகமாக சீட்டையும் நோட்டையும் யார் தருகிறாரோ, அவர்களுக்கு ஆதரவு என்பது அந்த கோரிக்கை.
இட ஓதிக்கீட்டின் அளவு மிகக்குறைவு எனவும், கிடைத்த ஒதிக்கீடு கூட முறையாக செயல்படுத்தப்படவில்லை எனவும் பல பிரச்சனைகளை மையப்படுத்தி தவ்ஹீத் ஜமாஅத் போராடிக்கொண்டிருக்கும் அதே வேளையில், எதை பற்றியும் கவலைப்படாமல்
தங்களுக்கு சீட்டு தான் முக்கியம் என்று போராடியது இந்த மானங்கெட்ட கூட்டம்!
இவர்கள் மானத்தின் லட்சணத்தை அறிந்து கொண்ட கருணாநிதி, முஸ்லிம் சமுதாய மக்களின் மத்தியில் கூட இந்த கும்பல் ஒரு கேலிப்பொருளாக, மானமிழந்த பேடிகளாக காட்சி தருகிறார்கள் என்பதை அறிந்து, அவர்களால் திமுகவிற்கு துளியும் நன்மை இல்லை என்பதால் அவர்களை துரத்தியடித்தார்.
தவ்ஹீத் ஜமாத்தின் இட ஒதிக்கீடு கோரிக்கைக்கு செவி சாய்த்தார். ஆணையம் அமைத்தார். இருக்கின்ற இட ஒதிக்கீடு இனி இந்த ஆணையத்தின் மூலம் முறையாக செயல்படுத்தப்படும் என்று சட்டமியற்றினார்.
அடுத்து ஆட்சிக்கு வந்தால், இதே இட ஒதிக்கீட்டை இன்னும் அதிகமாகி தருவேன் என்று தன் தேர்தலில் அறிக்கையில் வாக்களித்தார்.
தேர்தல் அறிக்கையில் வாக்களித்ததை முறையாக செயல்படுத்தி பெயர் வாங்கிய கருணாநிதி அடுத்த முறையும் இன்ஷா அல்லாஹ் செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்டுள்ளதால், அவர்கள் திமுகவிற்கு ஆதரவளிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.
ஜெயலலிதாவோ, வழக்கம் போல, தனது காவி சிந்தனை வெளிக்காட்டும் விதத்தில் இட ஒதிக்கீடு குறித்த எந்த வாக்குறுதியும் அளிக்காமல் முஸ்லிம்களை வஞ்சித்தார்.
கடந்த 2006 இல், தோல்வி பயத்தின் காரணமாக, வேறு வழியின்றி முஸ்லிம் வாக்குகளையாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இட ஓதிக்கீட்டுக்கான ஆணையத்தை அமைத்த ஜெயலலிதா, இன்று தமக்கென்று பலமான கூட்டணி அமைந்து விட்டது என்பதால் முஸ்லிம்களை ஏமாற்றி விடலாம் என்று எண்ணினார்.
இந்த மானகெட்ட கூட்டத்திற்கு அதை பற்றிய கவலையோ அக்கறையோ இல்லையே! கலைஞர் சீட்டு தராமல் துரத்தி விட்டதால் இன்று ஜெயலலிதாவின் பக்கம் சாய்த்துள்ளனர்.
அவர் இட ஓதிக்கீட்டுகான எந்த வாக்குறுதியும் தரவில்லை என்றாலும் , அதை பற்றி துளி கூட கவலையில்லாமல் தங்கள் சுய நலனை மையப்படுத்தி அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளனர்.
இட ஒதிக்கீடு குறித்த எந்த அக்கறையும் இல்லாமல் நடந்து கொண்ட இவர்களை நோக்கி இந்த இடத்தில் சமுதாயம் இன்னொரு கேள்வியையும் முன்வைக்கிறது.
ஏற்கனவே பல முறை மானகெட்ட நீங்கள், கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் கருணாநிதி தந்த ஒரு சீட்டு (அதாவது ஆறு சட்டமன்ற தொகுதி) போதுமானதில்லை, நாங்கள் எங்களின் மானத்தை காத்தாக வேண்டும் என்று அறிவித்தீர்களே, இன்று இந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவிடம் மூன்று சீட்டை மட்டும் பெற்று மானம் காத்த லட்சணத்தை கொஞ்சம் விளக்குங்களேன் என்று மக்கள் கேட்கின்றனர்.
வழக்கம் போல, மானமாவது மண்ணாங்கட்டியாவது .. காசே தான் கடவுளடா என்ற பாடலை முணுமுணுத்துக்கொண்டு வீர நடை போடுகின்ற இவர்கள், இட ஒதிக்கீடு கோரிக்கை நாடகங்கள் இனி பயன் தராது என்ற நிலை ஏற்பட்டு விட்டதால், நாங்கள் முஸ்லிம் என்பதால் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று அடுத்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.
இட ஒதிக்கீடு கோரிக்கையை வைக்ககூடிய தார்மீக உரிமையை இழந்த இவர்கள், இப்போது இந்த இன உணர்வை தூண்டுவதிலாவது நியாயம் இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை.
தமிழகத்தில் இந்த முறை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பத்து இடங்களிலும், சுயேட்சையாக முப்பது, நாற்பது இடங்களிலும் முஸ்லிம்கள் போட்டியிடுகிறார்கள்.
இந்த நிலையில், இந்த மானமிழந்த கூட்டம் முன்வைக்கும் இன உணர்வு நாடகம் உண்மை என்றால், மேலே குறிப்பிட்ட அனைத்து முஸ்லிம்களுக்கும் இவர்கள் தங்களை ஆதரவை முதலில் தெரிவித்திருக்க வேண்டும்.
"
கட்சி வேறுபாடு பாராமல், நாங்கள் இதோ, முஸ்லிமுக்கு ஆதரவளிக்கிறோம், அதே போன்று நீங்களும் ஆதரவளியுங்கள், நாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் எங்களுக்கு வாக்களியுங்கள்", என்று இவர்கள் சொல்லியிருந்தால், இந்த விஷயத்திலாவது இவர்கள் நேர்மையுடன் நடக்கிறார்கள் என்று மக்கள் எடுத்துக்கொள்வார்கள்.
நேர்மைக்கும் தங்களுக்கும் துளியும் சம்மந்தமில்லை என்று கூறும் வகையில், மற்ற மற்ற தொகுதிகளில் முஸ்லிமை எதிர்த்து காபிரை ஆதரிக்கும் இவர்கள், தங்கள் தொகுதியில் மட்டும் முஸ்லிம் என்ற முறையில் தங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்பது இன உணர்வா அல்லது நயவஞ்சகத்தனமா? என்பதை இனியும் விளக்க வேண்டியதில்லை.
அடி மேல் அடி வாங்கி இனியும் இழப்பதற்கு கொஞ்ச நஞ்ச மானம் கூட இல்லை என்ற நிலையில் அல்லாஹ் இவர்களை புறந்தள்ளி விட்ட நிலையில், "நாங்கள் முஸ்லிம்கள்" என்று கோரிக்கை வைப்பதை, எந்த ஒரு முஸ்லிமும் காறி உமிழாத குறையாக வெறுப்பார்கள் என்பது, மானமிழந்த இவர்களுக்கு புரிய வாய்ப்பில்லை..
தொடரும்....