"எவ்வித பதற்றமுமின்றி நம்பிக்கையுடன் காணப்பட்ட பிஜேபி தலைவர் எல்.கே.அத்வானி, பிஜேபி தலைமையிலான அரசு அமைந்தாலும் அமெரிக்கா - இந்தியா இடையிலான வலுவான உறவு தொடரும் என்று கூறினார்," என அதில் குறிப்பிட்டிருந்தார்.
இரட்டை நாக்கு...
அமெரிக்காவுடனான உறவு தொடர்பான பிஜேபி நிலைப்பாட்டின் தன்மையை 2005-ம் ஆண்டு டிசம்பரில் வாஷிங்டனுக்கு அனுப்பப்பட்ட கேபிளில் விவரிக்கப்பட்டுள்ளது. 'மும்பையில் 2005 டிச.26 மற்றும் 27-ல் நடந்த பிஜேபி தேசிய செயற்குழு கூட்டத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசானது, அமெரிக்காவின் அடிமையாக இயங்குகிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மறுநாள் டிச.28-ல் தன்னிடம் தனிப்பட்ட முறையில் பேசிய பிஜேபி தேசிய செயற்குழு தலைவர் சேஷாத்திரி சாரி, "பாஜகவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான தீர்மானத்தை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அது சும்மா ஒரு பேருக்காக வெளியிடப்பட்டது" என்று கேட்டுக்கொண்டதாக அமெரிக்க தூதரக அதிகாரி ராபர்ட் பிளேக் அனுப்பிய கேபிளில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியலுக்காக மட்டுமே காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை பாஜக எதிர்ப்பது உறுதியாகிறது என்றும், உண்மையில் காங்கிரஸ், பாஜக இரண்டுமே ஒரே விதமான சிறகுகள் கொண்ட பறவைகள்தான் என்றும் விக்கிலீக்ஸ் வர்ணித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக