தலைப்பைப் பார்த்தவுடன் இது ஏதோ திகில் சினிமாவின் டைட்டில் போல இருக்கலாம். ஆனால் மக்களிடம் திகிலை ஏற்படுத்த வேண்டும் என முயற்சித்து அது முடியாமல் தொடர்ந்து அசிங்கப்படும் பொய்யன் கூட்டத்தின் அடுத்த ஆயுதம் தான் இந்த 4 மாதம் 16 நாட்கள். ஆனால் இந்த ஆயுதமும் அவர்களுக்கெதிராகவே பாயப்போகிறது என அவர்கள் அறிந்திருப்பார்கள். ஆனால் தெரியாதது மாதிரி காட்டிக்கொண்டு மறுபடியும் மூக்குடைப்புக்கு ஆளாகப் போகிறார்கள். எத்தனை முறை அடிவாங்குகிறோம் என்பது முக்கியமல்ல. நாம படுகேவலப்பட்டாலும் கொஞ்சமாவது எதிரணியினர் மீது கொஞ்சம் களங்கத்தை சுமத்திவிட வேண்டும் என்ற ஆசை. பாவம்.. நாங்கள் தான் ஆண்மை உள்ளவர்கள், அவர்களுக்கு ஆண்மை கிடையாது என ஆரம்பமே அமர்க்களமாக துவங்கி உள்ளனர். இவர்களுடைய ஆண்மை பற்றி நமக்குத்தெரியவில்லை. ஆனால் உங்களுடைய ஆண்மை கண்டு தான் ஊரே சிரித்ததே! உங்களுடைய ஆண்மையை நிறுபிக்க நீங்கள் செய்த செயல்கள் கொஞ்சமா நஞ்சமா? ஜமாத்திற்கு உதவி நாடி வரும் பெண்களுக்கு வலை விரிப்பது, அவர்களோடு தனித்திருப்பது, திட்டமிட்டே சொகுசுப் பேரூந்தில்
பவுசு பயணம் மேற்கொள்வது இப்படி ஏகப்பட்ட சில்மிசங்களையும், சேட்டைகளையும் செய்து அதிகமான மக்கள் நம்பிக்கையில் திகழந்த, திகழ்ந்து கொண்டிருக்கிற சத்திய இயக்கத்தை களங்கப்படுத்த முயற்சித்ததன் விளைவு, கழிவுகளை வெளியேற்றியது போல வல்ல இறைவன் உங்களை மொத்தமாக இங்கிருந்து வெளியேற்றி இந்த இயக்கத்தை தூய்மைப்படுத்தினான். ஆக நீங்களெல்லாம் கழிவிலே புரளும் கழிவுகள் என்பதற்கு நீங்களே உதாரணம்.
சரி எண்ணெய் வயல் விசயத்திற்கு வரலாம். அண்ணனின் அடிவருடி அப்துல் முஹைமீன் என்ற அல்லக்கை கொஞ்சம் கூட சிந்தனை திறன் இல்லாமல், பார்த்தீர்களா! சம்பவம் நடந்து 4 மாசம் 16 நாள் 126 மணி நேரம் தான் ஆச்சி. ஆனால் இவர்கள் 5 மாதம் என கணக்கு காட்டுகிறார்கள். பாருங்கள் இவர்கள் மோசடியை என வீர முழக்கம் பேசியிருக்கிறார். அடப்பாவிகளா! இறைவன் மனிதனை சிந்திப்பவனாக படைத்திருக்கிறான்.
ஆனால் அதை கொஞ்சமும் பயன்படுத்தாமல் எந்நேரமும் "அதே" சிந்தனையாய் இருந்தால் இப்படித்தான். நாம என்ன சொல்லியிருக்கிறோம். ஏறத்தாழ 5 மாதங்கள் என்று. உடனே இதற்காக எகிறி குதித்து ஏதோ ஒரு பெரிய உண்மையை கண்டுபிடித்தது போல. உங்களுக்குத் தான் வேற வேலையே இல்ல. ஒரு நாளை விடாமல் விரல்விட்டு எண்ணி காலண்டரில் குறித்து வைத்து கக்குகிறீர்கள். அதை தின்று மறுமடியும் வாந்தி எடுப்பவர்கள் என இரண்டு நபர்கள் இருப்பதால் அவர்களுக்கு கவலையில்லை. எதையாவது பரப்ப வேண்டும் என்பது மட்டும் தான் இவர்களின் நோக்கம். ஏறத்தாழ 5 மாதங்கள் என்று சொன்னால் அதெல்லாம் இல்லை, பாருங்கள் பொய்யை 4 மாதம் 16 நாள் தான் ஆச்சி என சொல்லும் அரைகுறைகளை என்னவென்று சொல்வது?
உத்தப்புரத்தில் கிருஷ்ணசாமியோடு இணைந்து உங்கள் தலைவர் ஆலய நுழைவு போராட்டம் மேற்கொண்டார். அதைப்பற்றி ஒரு மேடையில் பேசிய ததஜவின் தாயி ஒருவர் அவர் திருமாவளவனோடு சேர்ந்து ஆலய நுழைவு போராட்டம் மேற்கொண்டார் என தவறுதலாக தெரிவித்து விட்டார். உடனே அதை கெட்டியாக பிடித்துக் கொண்ட பொய்யன் ஜமாத்தே டிரஸ்டினர் பார்த்தீர்களா! இவர்களது புளுகுமூட்டையை எங்கள் மீதுள்ள காழ்ப்புணர்வால் தான் இப்படி இட்டுக்கட்டுகிறார்கள். எங்கள் தலைவர் என்ன திருமாவளவனுடனா ஆலய நுழைவு பிரவேசம் நடத்தினார்? ,கிருஷ்ணசாமியுடன் தானே ஆலய நுழைவுக்குச் சென்றார் என பதில் தாக்குதல்(?) நடத்தினார்கள். இதே நிலைதான் இந்த குவைத் எண்ணெய் வயல் சம்பவமும்.
ஏன் அவர் அடிப்படை உறுப்பினராக நீடிக்கிறார் என கேட்கிறார்கள். கோவில்பட்டி நாயகன் 14 மணி நேர பயணம் மேற்கொண்டு அது புகாராக வந்து அதை அவர் மழுப்பி, குழப்பி கடைசியில் ஒப்புக்கொண்டு 44 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போது அவர் அடிப்படை உறுப்பினராக நீடித்தாரா இல்லையா? ஆனால் தான் செய்தது தவறு என்று தானே முன்வந்து கடிதம் கொடுத்து மேலாண்மை பதவியிலிருந்து விலகிக் கொண்ட வளைகுடாகாரர் மட்டும் எப்படி அடிப்படை உறுப்பினராக நீடிக்கலாம் என கேட்பது அறியாமைத் தனம் அன்றி வேறேன்ன?
அடுத்து களவாடிய பத்திரிகையில் ஏன் வெளியிடவில்லை என கேட்டிருக்கிறார்கள். உணர்வு என்பது களவாடப்பட்ட பத்திரிகை என்பது உண்மையானால் அதை முன்னின்று களவாடிய செயலில் உங்கள் தலைவனுக்கும் பங்கு இருக்கிறதா இல்லையா? உங்கள் தலைவனின் பஸ்பயணம் மிகவும் கஷ்டப்பட்டு நிறுபிக்கப்பட்ட ஒன்றாகும். எவ்வளவு சொன்னாலும் நான் செய்யவில்லை என நியாயப்படுத்தி, இவர்கள் உண்மையை அவர் வாயாலேயே நிறுபித்து மக்களுக்கெல்லாம் தெரிந்து அவர் மீது என்ன நடவடிக்கை என பரவலாக தகவல் வர ஆரம்பித்து மக்கள் கொந்தளித்த காரணத்தால் தான் உங்கள் தலைவனின் உல்லாச பயணம் காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை உணர்விலே வெளியிடப்பட்டது. அதுவும் அந்த சம்பவத்தை குறிப்பிடாமல் நீக்கம் என தான் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த ஜமாத்தின் ஒழுங்கு நடவடிக்கை என்பது, முதல்தவறு கண்டிக்கப்படும். அவர் தானாக முன்வந்து தவறை ஒப்புக்கொண்டால் ஏற்றுக்கொள்ளப்படும். அடுத்தடுத்து தொடர்ந்து அதே தவறை அவர் செய்தால் அவர் யாராக இருந்தாலும் தூக்கி வீசப்படுவார்.ஆனால் இது வரை யாரும் முதல் தவறு கண்டிக்கப்பட்டு தொடர்ந்து அதே விசயத்தில் அதாவது பெண் விசயத்தில் தவறிழைத்துக் கொண்டிருந்தது இல்லை. எனவே கழிவுகளும் அதிலே புரளுபவைகளுக்கும் அங்கு அடிக்கும் நாற்றம் வேறெங்கிருந்தோ வருவது போலத் தெரியும். மிக நன்றாக கவனியுங்கள். நாற்றம் அங்கிருந்து தான் வருகிறது.
இதெல்லாம் சரி! வீரன் அழகுமுத்து கோனாரின் சிலை திறப்பு விழாவுக்கு சென்று சிறப்புரை ஆற்றிய நாயகனுக்கு எதிராக எப்போது நடவடிக்கை. அதைப்பற்றியே யாரும் பேசுவதாக தெரியவில்லை. என்ன ஆச்சி ஆண்மை(?) புகழ் அப்தும் முஹைமீன்? அதைப்பற்றி பேசினால் தூக்கி வீசப்படும் எலும்புத்துண்டுகள் நின்று போய் விடும் என்பதாலா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக