அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! இந்த முக நூலில் பலர் பல வேஷம் போட்டு தவ்ஹீத் வாதிகளை எதிர்த்தார்கள் .அசிங்கமா திட்டினார்கள் சிலர் விமர்சனம் பண்ணினார்கள் தரீக்கா வழிகேடர்கள் பண்ணின தொல்லைகள் ஏராளம். தவ்ஹீத் வாதிகளின் புகைப்படங்களையும் பெண்களின் செக்ஸ் போட்டகளையும் சமந்தபடுத்தி பொய்யான பீதியையும் கிளப்பி விட்டு பார்த்தார்கள் நம் தவ்ஹீத் வாதிகள் கொஞ்சம் கூட அசராமல் அவர்களின் முகத்திரைகளை கிழித்தார்கள் அவர்களின் கொக்கரிப்பு நம் தவ்ஹீத்வாதிகளிடம் எடுபடாமல் போயிட்டது. இன்னும் பலர் தவ்ஹீத் வளர்ச்சி பிடிக்காமல் தவ்ஹீத் வாதிகளின் மீது சேற்றை வாரி பூசினார்கள்.அண்ணன் பீஜே அவர்கள் மீது சுமத்திய ஆதாரமில்லாத குற்றங்கள் தவிடி பொடியா ஆனது.பலர் தவ்ஹீதை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் வாதிகளின் முகவரிலும் வந்து குழப்பினார்கள் அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட பட்டது.சிலர் நடு நிலைவாதி என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீத் வாதிகளை கண்டித்தார்கள்.அதற்கும் நம் தவ்ஹீத் வாதிகள் அஞ்சாமல் அவர்கள் யார் என்பதை இந்த முக நூலில் அடையாளம் காட்டினார்கள்.பலர் நான் எந்த இயக்கத்தை சாராதவன் என்றும் நாம் ஒற்றுமையா இருக்கணும் என்றும் போராடினார்கள் அவர்களும் ஒரு சாரார் என்பதை இந்த தவ்ஹீத் வாதிகள் நிருபித்தார்கள்.அவர்களின் பொய்யான முகத்திரையும் கிழிக்கப்பட்டது. பொய்யான முக மூடி போட்டுக்கிட்டு நாங்கள் நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் பலர் தமுமுகவை சேர்ந்தவர்கள்.என்பதை வெட்கத்துடன் சொல்லிகொள்கிறேன். தவ்ஹீத் வாதிகளை எதிர்க்க கூடியவர்கள் பலர் இந்த முக நூலில் காணமல் போனார்கள்.அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! எதிர்ப்பு இருந்தால்தான் ஏகொத்துவம் (தவ்ஹீத்) வளரும்! தவ்ஹீத் மீண்டும் மீண்டும் வீறு நடை போடும்! இன்ஷா அல்லாஹ்!

புதன், 30 மார்ச், 2011

கடைசி நேரத்தில் வந்து சீன் போட்ட பொய்யன்

எல்லாம் ஒரு விளம்பரம் தான் என சொல்வார்கள். அதே போல அந்த மாதிரி தான் வந்திருக்கிறது பொய்யன் தளத்தில் பள்ளி மீட்ட செய்தியும்.
சென்னை பாரிமுனையில் உள்ள பள்ளியில் என்ன நடந்தது என்பதை ததஜ தளத்தில் விலாவாரியாக எழுதியிருக்கிறார்கள். அதாவது இந்த சம்பவம் திங்கள் கிழமை லுஹர் தொழுகை நேரம் துவங்கியது முதல் ததஜ சகோதரர்கள் களத்திலே நின்றார்கள். இந்தப் பள்ளி சுன்னத் வல் ஜமாத் முறைப்படி நடந்த தொழுகை நடந்த பள்ளி. எனவே பள்ளி பூட்டப்பட்ட தகவல் அனைத்து ஜமாத்தினருக்கும் தான் போயிருக்கிறது. ஆனால் யாருமே களமிறங்காத போது தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கு இந்த செய்தியை கொண்டு வந்திருக்கிறார்கள். சமுதாய மானம் காக்க புறப்பட்டு கேவலப்பட்டு நிற்கின்ற தமுமுகவினர் தேர்தல் வேலைகளில் மட்டும் குறியாக இருப்பதால் இதை அவர்கள் துளியும் கண்டுகொள்ளவில்லை.
மற்ற ஜமாஅத்தினருக்கும் தகவல் போய் யாருமே வராத நிலையில் தான் போனா போகுது தவ்ஹீத் ஜமாத்காரனுக்கு சொல்லி விடுங்க என்று தகவல் கொடுத்திருக்கிறார்கள். பள்ளிவாசலுக்கு ஒரு பாதிப்பு என்றதும் உடனடியாக அந்தப் பகுதி பூக்கடை கிளை உறுப்பினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, வடசென்னை செயலாளர் ஆலம், தென்சென்னை செயலாளர் கமர்தீன், மாநில செயலாளர் சாதிக் ஆகியோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அடுத்த நிமிடம் அவர்கள் அங்கே களத்தில் ந்ன்றார்கள். அப்போது எங்கே போனார் டிரஸ்ட் சமாத்தின் தலைவர்.
இரவு வரை காவல் இருந்து அதன் பின்னர் 11 மணிக்கு மேல் அவர்கள் பள்ளியை இடிக்க களமிறங்கிய போது எங்கே போனார் பொய்யன் சமாத்தின் தலைவர்? அதெல்லாம் பரவாயில்லை மறுநாள் காலை அந்த இடம் கொந்தளிப்பாக இருந்ததே! அப்போது எங்கே போனார் இந்த சீன் போடும் ராசா! எஸ்டிபியை களத்திற்கு வந்தார்கள் என்பது உண்மை. அதேநேரம் பொய்யன் சமாத்தின் மாவட்டத்தலைவர்களும், தமுமுக சகோதரர்களும் வந்தார்கள் என்பது பச்சைப் பொய்.
அதெல்லாம் இருக்கட்டும் டிரஸ்ட்டு சமாத்தின் தலைவரின் அலுவலகம் ஏறத்தாழ( ஏற்கனவே ஏறத்தாழவுல வாங்கின அடியால ஒரு அரைலூசு ஒழிஞ்சே போயிடுச்சி) 3 கிலோ மீட்டர் இருந்தும் இரண்டு நாட்களாய் அங்கே நடக்கும் பிரச்சனைகள் தெரியாமலா இருந்தது இந்த சமாத்து டிரஸ்ட் தலைவருக்கு. மற்ற "வேலைகளுக்கெல்லாம்" கூடவே செல்லும் சமாத்து டிரஸ்ட் தலைவர் வலது இடது கரங்கள் எங்கே போனார்கள்? ஆமாம். எல்லாம் முடிந்து செவ்வாய்கிழமை லுஹர் தொழுகை நேரத்தில் குண்டர்களை கைது செய்யச்சொல்லி ததஜ மாவட்ட, மாநில‌ நிர்வாகிகளும், SDPI தொண்டர்களும் சாலையிலே தொழுகை நடத்தி காவல்துறையை முற்றுகையிட்ட போது ஜெயா டிவி காரர்களுக்கு திடீரென இஸ்லாமியர்களின் மீது பாசம் பொங்கி அவர்கள் அதை கவரேஜ் செய்த போது அந்த இடத்தில் ஜெயா டிவிக்கு பேட்டி கொடுத்தது எஸ்டிபிஐ காரரும், வடசென்னை ததஜ செயலாளர் ஆலமும் தான்.
அப்போதெல்லாம் எங்கே போனார் என தெரியவில்லை இந்த டிரஸ்ட் தலைவர். பொதுமக்கள் கும்பலாக கூடி காவல்துறையினரோடு வாக்குவாதம் செய்து கொண்டிருபோது அங்கே வந்த‌ கருப்பு கலர் ஸ்கார்பியோ காரில் தான் சூனா பானா வந்து இறங்கினார். கையில் கேமிரா சகிதமாக இன்னிக்கு வின்டிவிக்கு அரைமணி நேர ஸ்லாட் கிடைத்துவிட்டது என மனதுக்குள் நினைத்து சீன் போட ஆரம்பித்தார். யாரோ கத்துகிறார்கள் என மக்கள் திரும்பிப்பார்க்க உடனே அவரோடு வந்த போட்டோ கிராபர் ஒரு தடவை கிளிக் செய்தார். ஆனால் பாக்கரை யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. யாருமே கண்டுகொள்ளாத போது அங்கே ஏற்கனவே சமாதானக்கூட்டம் நடந்து கொண்டிருந்த சேரில் வந்து அமர்ந்தார். இது தான் நடந்தது.
இதைவிடுத்து என்னவோ இவர் தான் இரவு முழுவதும் கால் கடுக்க நின்றது போல கதை விடுகிறார். இவர்கள் கடும் பொய்யர்கள் என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி வேண்டும்.
“களத்திற்கு வந்து மக்களை கட்டுப்படுத்திய பாக்கருக்கு காவல் துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். நீண்ட நாளுக்குப்பின் பாக்கரின் பேச்சுக்கு த.த.ஜ.வினர் உற்சாகமாக தக்பீர் முழக்கம் இட்டதும், அவரோடு கை குலுக்கி ஸலாம் சொன்னதும் நெகிழ்ச்சியான சம்பவமாக அமைந்தது.
இதெல்லாம் எந்த ஊரில் நடந்தது என்று சொன்னால் விசாரிக்க நன்றாக இருக்கும். வெலாசம்... வெலாசம்...
பள்ளியை மீட்டது யார் என்பதிலே யாருக்கும் பெருமையோ தலைக்கணமோ இல்லை. இருக்கவும் கூடாது. எல்லாப்புகழும் இறைவனுக்கே! ஆனால் கல்யாண‌ வீட்டில் இரவுமுழுவதும் காய்கறி வெட்டி, பாத்திரம் கழுவி, விறகுவைத்து அடுப்பெரித்து அந்தப்புகையோடு கிடந்து செத்து மதியம் சாப்பாடு செய்து முடித்தவுடன், வெள்ளையும் ஜொல்லையுமா ஒருத்தன் வருவான். வந்தவன் சும்மா இருக்க மாட்டான். இரவு பூரா வேலை பார்த்தவர்களே சும்மா நிற்பார்கள். ஆனால் சரியா மதியம் 1 மணிக்கு வரும் இவன் ஆடும் ஆட்டம் தாங்காது. அதை எடுத்து இங்க வை. இதை எடுத்து அங்க வை. சமயல்னா அந்த புளி இருக்கே புளி, அதைக்கரைத்து அதில இஞ்சி பூண்ட போட்டு, அப்றம் கொஞ்சம் நெய்ய ஊத்தி, என்னப்பா சமயக்காரரே! நான் சொன்ன மாதிரி தானே எல்லாம் பண்ணி இருக்கே! என்னப்பா நான் சொல்றது சரிதானே! ஹூம்..சூனா பானா..உன்ன அசசிக்க முடியாதுடா.. கெளம்பு.. கெளம்பு..
உனக்கு ஏன் இந்த வேல?
குறிப்பு: பின்னூட்டம் இடும் பொய்யனின் அடிவருடிகள் அல்லது மாமாகாரர்கள் தங்களின் உண்மையான பெயரில் வந்து பின்னூட்டமிட்டால் வெளியிட நன்றாக இருக்கும். நீங்களே கள்ளத்தனம் செய்து கொண்டு நாங்கள் கள்ளத்தனம் செய்கிறோம் என்றால் உங்களை லூசு என்பார்கள். என்ன மிஸ்டர். செங்கி. ஓகே தானே!

கேடுகெட்ட தானம் தானே இது?

பொய்யன் "பெர்சனல்" உதவியாளர் தளத்திலும் அதை அப்படியே காப்பி எடுத்து மறுவாந்தி எடுக்கும் பொய்யன் தளத்திலும் இன்றைக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது.
"கேடுகெட்ட தானம் இது தானோ?" என்ற பெயரில் செய்தி வெளியாகி உள்ளது. அது என்ன கேடு கெட்ட் தானம் என்று நாமும் இன்று காலை முதல் எங்க ஏரியாவில் இருக்கும் அனைத்து தமிழாசிரியர்களையும், தமிழறிஞர்களையும் கேட்டுவிட்டோம். ஆனால் அவர்கள் இப்படி ஒரு வார்த்தையை நாங்கள் கேள்விப்பட்டதில்லை என சொல்லிவிட்டார்கள். அப்பறம் தான் தெரிந்தது அது கேடு கெட்ட தானம் இல்லையாம். கேடு கெட்ட தனமாம். எல்லாத்துக்கும் கால் போடுவது போல இதற்கும் கால் போட்டு விட்டார் "பெர்சனல்". கால் போடுவது தான் அவர்களுக்கு பிரச்சனையே இல்லையே!
செய்திக்கு வரலாம். அதாவது கழுதை கூட திங்க யோசிக்கும் மக்கள் ரிப்போட் பத்திரிக்கையில் வந்த ஒரு காணமல் போனவர் பற்றிய அறிவிப்பு செய்தியை நாம் கிண்டல் செய்து விட்டோமாம்
காணாமல் போனவர் பற்றிய செய்தி போடும் போது ஏம்பா இவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்தவர்னு போட்டிருக்கியேன்னு நாம கேட்டால் அது ஒரு அடையாளமாம். ஒரு கூட்டத்தில் தெரியாத ஒருவரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்தவர் என எந்த அடையாளத்தை வைத்து கண்டுபிடிப்பது. ததஜவில் இருப்பர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது. அப்படி முளைத்திருந்தால் வேண்டுமானால் சொல்லலாம். இவர் தவ்ஹீத் ஜமாத்தில் இருந்தவர் என்று போட்டால் கூட்டத்தில் கொம்பு முளைத்தவர்களையா பார்த்து தேடலாம்.
இப்ப உதாரணத்திற்கு பாக்கர் காக்கா காணாமல் போய்விட்டார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு மக்கள் ரிப்போர்டில் எப்படி விளம்பரம் போடுவீர்கள்?
இப்படித்தான் போடவேண்டும்
இந்த மாதிரி போட்டால் லூசு என்பார்கள்
ஒரு நல்ல டாக்டரா பாருங்க மிஸ்டர். செங்கி.

திங்கள், 28 மார்ச், 2011

அடாடா! இம்ச தாங்கமுடியலடா!!!

அவதூறு பரப்புவதையும் அண்ணன் ஜமாத்துக்குப்பின்னாடி பூதக்கண்ணாடி கொண்டு அலைவதையுமே தங்களின் முழு நேரத்தொழிலாகக் கொண்டுள்ள மன்மதனும் மன்மதனின் சேனைகளும் குவைத்திலிருந்து கும்மியடிக்கும் சின்ன மன்மதனும் மறுபடி மறுபடி பலகேள்விகளைக் கேட்டு அவர்களுக்கு போதிய பொழுதுபோக்கு இல்லை என்பதை மீண்டும் நிறுபித்திருக்கிறார்கள். அவர்கள் கேட்கும் ஒவ்வொரு டப்பா கேள்விக்கும் ஏற்கனவே பதில் கொடுத்திருக்கிறோம். ஆனாலும் இவர்களின் சொத்தை வாதங்களை கொத்தி எடுத்தால் தான் நன்றாக இருக்கும் என்பதால் நாமும் வேலை மெனக்கெட்டு இவர்களுக்கு பதில் கொடுக்க வேண்டியிருக்கிறது.
திமுகவிற்கு அண்ணன் ஜமாத்தினர் திடீர் என ஆதரவு என்று பொய்யன்டிஜே டிரஸ்ட் தளத்திலும், எல்லா செய்திகளையும் தின்று மறுவாந்தி எடுக்கும் மன்மதனின் "பெர்சனல்" ஆலோசகர் தளத்திலும் செய்திகள் வந்திருக்கின்றன.
அண்ணன் ஜமாத்தைப் பொருத்தவரை எல்லாரிடமும் இருந்து 100% மாறுபட்டது என்பது அங்கிருக்கும் அடிப்பொடிகள் முதல் அடிவருடி சேணைகள் வரை எல்லாருக்குமே நன்கு தெரியும். இருந்தாலும் எதையாவது சொல்லி கிண்டி விட்டால் தான் அவர்களுக்கு பொழுது போகும் என்ற அடிப்படையில் தான் மறுபடி மறுபடி வாயைக்கொடுத்து புண்ணாக்கிக் கொள்கிறது இந்த பொய்யன் கூட்டம்.
திமுகவை ஆதரிக்க என்ன காரணம்? என அண்ணன் ஜமாஅத் தெளிவாக விளக்கி விட்டார்கள். ஆனாலும் நாங்க புடிச்ச நாயிக்கு 3 கால் தான் என விடாப்பிடியாக இயங்கும் இயக்கத்திற்கு அதையே பதிலாக கொடுத்து விட்டு, அவர்கள் கேட்டுள்ள எக்ட்ரா கேள்விகளுக்கு இங்கே நாம் விடையளிக்கிறோம்.
* மத்தியில் இட ஒதுக்கீடு விஷயத்தில் தொடர்ந்து துரோகமிழைக்கும் காங்கிரஸ் விஷயத்தில் இவர்களின் நிலை என்ன?
மத்தியில் துரோகமிழைக்கும் காங்கிரஸ் துரோகி தான் என்பது தான் எங்கள் நிலையும். ரோஸ்டர் முறையிலு குழப்பம் இருக்கிறது என கருணாநிதியே சொல்லியும் கூட, அதெல்லாம் இல்லை ரோஸ்டர் முறை தான் சிறந்தது என நியாயப்படுத்தினார்களே உங்கள் சகாக்கள் அவர்களைப் போல இவர்கள் நியாயப்படுத்த மாட்டார்கள். மத்திக்கு காங்கிரஸ் ஓட்டுக் கேட்டு வரும் போது அவர்களுக்கு வேட்டுவைக்கும் செயல்திட்டங்கள் அவர்களிடம் தயாராகவே இருக்கிறது. ஆனால் முன்பைவிட குறைந்த‌ மைனாரிட்டியில் போட்டியிடும் கருணாநிதியை மட்டும் ஆதரித்தால் அவர் படுதோல்வி அடைய வாய்ப்பு இருப்பதால் கூட்டணிக்கு ஆதரவு என்ற முடிவை எடுத்துள்ளது ததஜ. கலைஞரை ஆதரிக்கும் போது அவரிடம் சென்று ஈஈஈஈஈஈஈஈ என இளிக்கவில்லை. அவர்களின் துரோகங்களை அவர்களிடமே பட்டியலிட்ட பிறகு தான் அவர்களிடம் இந்த நிலையே அறிவிக்கப்பட்டது.
* ஜெயலலிதா இரு முஸ்லிம்களை மட்டுமே நிறுத்தியுள்ளார் என முறுக்கிக்கொண்ட இவர்கள், ஒரு முஸ்லிமை கூட நிறுத்தாத பாமக விஷயத்தில் நிலை என்ன?
அறிவுச்சுடர் அப்பாஸின் ஆற்றலைக்கண்டு வியப்பாகத்தான் இருக்கிறது. நாம ஏற்கனவே கேட்டதுமாதிரி உங்களில் யாருக்கும் கொஞ்சம் கூட சிந்திக்கும் அறிவையும், சுயமாக முடிவெடுக்கும் திறனையும் இறைவன் கொஞ்சம் கூட வைக்கவில்லையா என மீண்டும் கேட்கிறோம். பாமக என்பது முழுக்க முழுக்க வன்னியர்களுக்காக அமைக்கப்பட்ட ஜாதிய சங்கம், பின்னர் அது கட்சியாக மாற்றப்பட்டது. அந்த அமைப்பின் நோக்கம் முழுக்க முழுக்க வன்னியர்களின் இடஒதுக்கீடு சம்பந்தமாக துவக்கப்பட்ட கட்சியில் எப்படி முஸ்லீம்களுக்கு இடமளிப்பார்கள்? முஸ்லீம் லீக்கில் மாற்றுமதத்தவரை ஏன் நிறுத்தவில்லை என கேட்க முடியுமா? பாமகவில் முஸ்லீம்கள் உறுப்பினராக இருப்பதும், முஸ்லீம்களுக்கு சீட்டை எதிர்பார்ப்பதும் முட்டாள் தனம் என்பது பைத்தியக்காரர்களுக்கே தெரியும் போது மன்மதன் ஜமாஅத்தினருக்கு தெரியாமல் போனது ஏனோ? நல்ல பிஞ்சி வெண்டக்காயை வாங்கி மோர்குழம்பு செஞ்சி சாப்பிட்டா அறிவு நல்லா வளருமாம். அதே மாதிரி தயிரில் சக்கரை கலந்து
* சிறுத்தைகள் மற்றும் இதர கட்சிகள் விசயத்தில் இவர்களின் நிலை என்ன?
சிறுத்தைகள் வேகமாக ஓடும். வண்டலூர் ஜூவில் இருக்கிறது. அதைப்போய் பார்ப்பதில் எவ்விதமான குற்றமும் இல்லை என்பது அவர்களின் நிலைபாடு.
* மமக மற்றும் முஸ்லிம் லீக் கட்சியை ததஜ கணக்கிலேயே எடுப்பது கிடையாது என்று எழுதிய இவர்கள், முஸ்லிம்லீக் விசயத்தில் எடுக்கும் நிலை என்ன?
ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு சொல்லிய பதில் இதற்கும் பொருந்தும்.
* முஸ்லிம் லீக்கை கணக்கிலெடுக்க இப்போது இவர்கள் முன் வந்தால் அதே நிலையில் உள்ள மமகவை மட்டும் புறக்கணிப்பது ஏன்?
முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளின் அடிமைத்தனத்தை ஒழிக்கப்போகிறோம் சமுதாய மானம் காக்கப்போகிறோம் என சொல்லி சந்தி சிரிக்கும் மமகவினரை ஒப்பிடும் போது முஸ்லீம் லீக் எவ்வளவோ பரவாயில்லை. அட இன்னமும் சொல்லனும்னா, சுன்னத் ஜமாத்காரர்கள் விவரம் தெரியாமல் பேசுகிறார்கள் எனலாம், ஆனால் நீங்கள் எல்லாம் தெரிந்து கொண்டே அதை மறைத்துவிட்டு தவ்ஹீதை ஒழிக்க வேண்டும் என களமிறங்குகிறீர்கள். அதுபோலத்தான் லீக்குக்கும் மாமாவுக்கும் உள்ள வேறுபாடு
ஆக, தனிநபர் ஜமாஅத்தின் முடிவு, வேறு வழியின்றி எடுக்கப்பட்டதாகவும், வலிமையான சமுதாய நலன் புறந்தள்ளப் பட்டதும் உள்ளங்கை நெல்லிக்கனியாக 'சிந்திப்பவர்களுக்கு' புலப்படும்.
அப்படியா! இப்ப நான் கேக்குற கேள்விக்கு பதில அடிச்சிவிடுங்க பார்க்கலாம்
* இட ஒதுக்கீடு 7 சதவிகிதம் வேண்டும் என கேட்ட நீங்கள் திடீரென அந்தர்பல்டி அடித்து அமைப்பின் பெயர், கொடி என எல்லாவற்றிலும் ததஜவை காப்பியடித்தது போல இந்த தேர்தல் நிலைப்பாட்டிலும் ததஜவை காப்பியடித்த காரணம் என்ன? ஒருவேளை 5 சதவிகித இட ஒதுக்கீடு கிடைத்தால், நாங்கள் தான் கடிதம் எழுதினோம், நாங்கள் தான் போன் பேசினோம், நாங்கள் தான் எஸ்எம்எஸ் அனுப்பினோம் என சொல்லிக்கொள்ளும் உங்களையும் நம்பி சில அப்பாவிகள் நிற்கிறார்களே அவர்களின் நிலை என்ன?
* நீங்கள் அம்மாவுக்கு எழுதிய கடிதம் தவிர்த்து வேறு எந்த வகையில் அதிமுகவை தொடர்பு கொண்டீர்கள்?
* எந்த கட்சி தருகிறதோ என சொன்ன நீங்கள் அதிமுகவிற்கு மட்டும் கடிதம் எழுதிய காரணம் என்ன? கலைஞருக்கு உங்களால் எழுதப்பட்டதாக நீங்கள் வெளியிடப்பட்டிருக்கும் கடித்ததில் தேதி இல்லையே! அது எப்படி ஒரு முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் தேதி இல்லாமல் போகும். அதை நீங்கள் அனுப்பினீர்களா அல்லது எழுதி நீங்களே வைத்துக்கொண்டீர்களா?
* அவ்வாறு எழுதிய கடிதத்திற்கு இன்று வரை எந்த விதமான பதிலோ தகவலோ வராத நிலையில் அதிமுகவுக்கு ஆதரவு என்ற நிலையை எடுப்பதற்கு என்ன காரணம்?
* அஇஅதிமுக உங்கள் கோரிக்கையான(?) 5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த ஒப்புதல் தெரிவித்து விட்டார் என சொல்லுக்கொள்ளும் நீங்கள் அதற்கான ஆதாரத்தை வெளியிடத்தயாரா? எத்தனைமுறை உங்களை அதிமுக பிரமுகர்கள் சந்தித்தார்கள் அல்லது நீங்கள் எத்தனை முறை அவர்களைச் சந்தித்தீர்கள் என்ற விபரங்களை வெளியிடத்தயாரா? அப்பறம் என்ன காரணத்திற்காக அதிமுகவை ஆதரிக்கிறீர்கள என விவரம் சொல்ல தயாரா?
(திருச்சி பிரச்சாரத்தில் சொல்வதற்கு முன்னரே நீங்கள் அம்மாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டியது குறிப்பிடத்தக்கது)
* அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு குறித்து எதுவுமே வெளிவராத நிலையில், இடஒதுக்கீடும் தேவையில்லை ஒரு மண்ணாங்கட்டியும் தேவையில்லை. இப்போதைய தேவை கழகத்தின் நிரந்தர தலைவரும், துணைப்பொதுச்செயலாளரும் எம்மெல்லே ஆனால் போதும் என வாய்மூடி மௌனித்து இருக்கும் மானங்கெட்ட மாமா கட்சியை நீங்கள் ஆதரிப்பது ஏன்?
* முஸ்லீம்களை திட்டமிட்டு கொன்று குவித்த விடுதலை பிலிகளை கேவலம் ஓட்டுப்பிச்சைக்காக ஆதரிக்கும் மாமாக்களும் அவர்களுக்கு விளக்குப்புடிக்கும் உங்களுக்கும் சிறுத்தைப் பற்றி பேச என்ன அறுகதை இருக்கிறது?
* முஸ்லீம் வேட்பாளர்களை ஆதரிப்போம் என்று வாய்கிழிய சொல்லும் நீங்கள் ராமநாதபுரத்தில் போட்டியிடும் மமகவை விட வலுவான கட்சியான எஸ்டிபியை ஆதரிக்கப்போகிறீர்களா அல்லது மமகவுக்குத் தான் உங்கள் ஆதரவா? காரணம் மமகவிற்கு முன்பாகவே எஸ்டிபிஐ அங்கே மணுத்தாக்கல் செய்துவிட்டார்கள்.
* ஏற்கனவே எஸ்டிபிஐ ராமநாதபுரத்தில் நின்றுவிட்டதாம் முஸ்லீம் சமுதாயத்தின் நன்மை கருதி வாத்தியாரை வாபஸ் வாங்கச்சொல்வீர்களா?
இந்த கேள்விகளுக்கெல்லாம் இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே உங்களால் பதில் தர முடியாது. ஏற்கனவே அப்துல் முஹைமீன் என்ற அரைலூசு குவைத் விவகாரத்தில் மூச்சித்தினறி கதவிடுக்கில் மாட்டிய எலியாய் தவிக்கும் போது அதே மாதிரி இன்னொரு எலி மாட்டிக்கொண்டு முழிக்கப்போகிறது

வெள்ளி, 25 மார்ச், 2011

சாயம் வெளுக்கும் மமக‌

கொஞ்சம் கொஞ்சமாய் வெளுக்க ஆரம்பித்து விட்டது மமகவின் சாயம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக‌ அரசியலில் இறங்கமாட்டோம் என தமுமுக வழி களம் கண்டவர்கள் இன்றைக்கு சைத்தானின் ஆசையில் மதிமயங்கி எப்படியாவது ஒரு பதவியைப் பிடித்து விடவேண்டும் என கொஞ்சம் கொஞ்சமாக தாங்கள் பூசியிருந்த இஸ்லாமிய சாயத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பித்து விட்டார்கள். ஏற்கனவே எஸ்டிபிஐ அமைப்பு தங்களுக்கு கொள்கை குத்துப்பாடல்களை அமைத்து பீப்பி ஊதி ஊர்வலம் வருவதைப் போல இவர்களும் தங்களுக்கென ஒரு கொள்கைப்பாடல்களை வடிவமைத்து கொஞ்சமாக தங்களின் முகத்திரையை விளக்கினார்கள்.
கலைஞரிடம் 2 சீட்டு வாங்குவதற்காக அவருக்கு நன்றி அறிவிப்பு என்ற பெயரில் பாராட்டு விழா நடத்தி அவருக்கு சோப்பு போட்டு வக்ஃப் வாரியத்தையும் வளைத்துக்கொண்டு அம்மா தான் இஸ்லாமியர்களின் துரோகி, மோடியின் தோழி என பேட்டி கொடுத்து வந்தவர்கள் கடைசியாக 2 சீட்டு கொடுக்காமல் கலைஞரால் கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளப்பட்டு நிர்கதியாக நின்ற போது தான் அவர்களுக்கு நினைவுக்கு வந்ததாம் கலைஞரின் இஸ்லாமிய துரோகங்கள்.
பின்னர் அம்மா செய்த துரோகங்கள் எல்லாம் மறந்து போய் இன்றைக்கு அன்புச்சகோதரி ஆகிவிட்டார் அம்மா. அன்றைக்கு சமுதாயக் காவலராக இருந்த கலைஞர் இன்றைக்கு சமுதாய துரோகி ஆகிவிட்டார். கலைஞர் தான் கைது செய்தார், கலைஞரின் துரோக வரலாறு என ஏகப்பட்ட செய்திகளை தங்களின் அதிகாரப்பூர்வ தளத்திலும், பத்திரிகையிலும் இப்போது போட்டு கிழிகிழி என கிழிக்கிறார்கள். கலைஞர் செய்ததாக இவர்கள் சொல்லும் துரோகம் அனைத்தும் இவர்கள் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தி பாராட்டு விழா நடத்தி பல்லைக்காட்டியதற்கு முன்பே, கலைஞர் தான் சமுதாயக் காவலர் என ஊர் ஊராய் போஸ்டர் ஒட்டி பேனர் வைப்பதற்கு முன்பே நடந்த நிகழ்ச்சிகள் தானே! அதெல்லாம் அப்போது எப்படி மறந்து போனது? இரண்டு சீட்டு தரவில்லை என்றதும் இஸ்லாமிய இன காவலர் என உங்களால் அடையாளம் காணப்பட்ட கலைஞர் இப்போது துரோகியாகிவிட்டார். துரோகியாகக் காட்டப்பட்ட அம்மா இன்றைக்கு அன்புச்சகோதரி ஆகிவிட்டார்.
இப்படியே இவர்களின் பச்சை அரசியல் கொஞ்சம் கொஞ்சமாக வெளுத்து இன்றைக்கு முழுமையான அரசியல்வாதிகளாக ஆகிவிட்டார்கள். இவர்கள் தேர்தல் செலவுகளைச் செய்வதற்கு அப்பாவி மக்களிடம் கட்டாய வசூல் செய்ய உத்தரவிட்ட இந்த கட்டப்பஞ்சாயத்துக் கழகம் இப்போது நிர்ணயித்து இருக்கும் தொகை ஒரு கிளைக்கு குறைந்த பட்சம் 10 ஆயிரம் ரூபாய். இதை கழகத்தின் நிரந்தரத்தலைவரே நிதி தாரீர் என்ற பெயரில் அவரின் கழக அப்பாவித்தொண்டர்களுக்கு பகிரங்கமாக தெரிவித்து விட்டார். பாவம் இவர்கள்! பத்தாயிரத்துக்கு குறையாமல் நிதி சேகரிக்க சாதாரண கிராமப்புற கிளைகள் என்ன செய்வார்கள்?.
இந்த இடியைத் தாங்கிய மமகவின் அப்பாவித்தொண்டர்களின் இதயங்களுக்கு மேலும் ஒரு பேரிடியாக இன்றைக்கு வந்து விழுந்து மமக தலைவர்களின் சாயத்தை முழுமையாக நீக்கிய செயல். அது அவர்கள் தளத்தில் வெளியிட்டுள்ள தலைவர்களின் ஆளுயர பிரம்மாண்ட போஸ்கள். இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை. அப்பாவி மமகவினரே! அவர்கள் போட்டோக்களை வெளியிட்டு உங்களை பிரம்மாண்ட பேனர் வைக்குமாறு பணித்திருக்கிறார்கள். இதோ இவர்கள் தங்களுடைய முழு கட் அவுட்களை வைக்க, சொல்லாமல் சொல்லி வந்துள்ள புகைப்படங்களை அப்படியே கட் அவுட்டாக வைக்காமல் நாமும் கொஞ்சம் அதிலே வசனம் கலந்து வைத்தால் நன்றாக இருக்கும் என்ற சிந்தனையின் விளைவு தான் கீழ்கண்ட வசனப்படங்கள். அப்பாவி மமக தொண்டர்கள் இதையும் கட் அவுட் வைக்க பயன்படுத்திக்கொள்ளலாம்.










புதன், 23 மார்ச், 2011

மமகவின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு - ஒரு சிறப்பு பார்வை


கலைஞரை விட்டு வெளியேறி தனித்து நின்று ஜெயா டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அம்மா துதிப்பாடல் பாடியது முதல் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் மூன்று சீட்டுக்களைப் பெற்றுக்கொண்டு பல்லைக்காட்டியது வரை மமகட்சியின் மானங்கெட்டத்தனத்தைப்பார்த்து ஊரே சிரிக்கிறது. பச்சை அரசியல்வாதிகளைக் கூட வென்று விட்டார்கள் இவர்கள். கலைஞர் தான் நம் சமூக காவலர் என நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தியது முதல் (கோவையில் இருந்து தனி ரயிலே வந்தது தனிக்கதை) அதைக் காட்டி கலைஞரிடம் பேரம் பேசி, ஜெயலலிதா மோடியின் தோழி, அராஜகக்காரி என அள்ளிவிட்டு கலைஞரிடம் நற்சான்றிதழ் பெற முயற்சித்து வக்ப் போர்டை வாங்கி கொண்டை வைத்த சிவப்புக் காரில் சுற்றிவந்து ஒரு சீட்டுத்தான் தருவோம் என கலைஞர் சொல்ல, முடியாது முடியாது அப்பறம் அந்த ஒரு சீட்டுல யார் போட்டியிடுவது என எங்களுக்குள் சண்டை வந்து விடும், எனவே இரண்டு சீட்டாவது தாருங்கள் என கெஞ்சிக் கூத்தாடி கலைஞர் இவர்களை கழுத்தைப்பிடித்து தள்ளி கதவைச்சாத்தியது வரை,
இன்றைக்கு அம்மாவிடம் சரணாகதி அடைந்தது முதல் அம்மான்னா சும்மா இல்லடா, கலைஞர் தான் கைது செய்தார், கலைஞரின் துரோக வரலாற்றுத் தொடர் என கலைஞரைக் கஞ்சி காய்ச்சுவது வரை
மக்கள் இவர்களின் ஈனச்செயல்களை உன்னிப்பாக பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்கள் இரண்டு சீட்டு வாங்குவதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற ரீதியில் அனைத்துக்கும் தயாராய் களமிறங்கிவிட்டார்கள்.
3 சீட்டு பெற்றவுடன் என்ன செய்திருக்க வேண்டும்? ஏம்பா! மமக தொண்டர்களில் யாருக்கு போட்டியிட விருப்பம் இருந்தாலும் மணு செய்யலாம் என அறிவித்திருக்க வேண்டும். ஆனால் செய்தார்களா? செய்யவில்லை. என்ன காரணம்? மமகவில் அல்லது தமுமுகவில் இவர்களை விட்டால் ஆளே இல்லையா?
தமிழிலே ஒரு பழமொழி இருக்கிறது.
கல்யாண வீடாக இருந்தால் நான் தான் மாப்பிள்ளையா இருப்பேன்,
எழ‌வு வீடா இருந்தா நான் தான் பொணமா இருப்பேன்.,
எங்க போனாலும் மாலையும் மரியாதையும் எனக்குத்தான்
இந்தப் பழ்மொழி யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ! கழகத்தின் நிரந்தரத்தலைவருக்கும் நிரந்தரப் பொதுச்செயலாளருக்கும் நன்றாகப் பொருந்தும். தலைவர் பதவியா? எனக்குத்தான், வக்ப் வாரிய பதவியா? எனக்குத்தான், சவூதி அரேபிய தூதர் பதவியா? அதுவும் எனக்குத்தான். எம்பி பதவியா அதுவும் நான் தான். கக்கூஸ் திறப்பு விழாவா? அதுக்கும் நான் தான்
என தான் தான் என ஆடி ஓடி திரிந்து பதவிவெறி பிடித்து அலையும் இவர்களை என்னவென்று சொல்ல? இவர்கள் தேர்தலில் போட்டியிட்டு பவுசு காரில் பவனி வருவதற்கு சாதாரண ஆட்டோ ஓட்டும் என் சகோதரன் ஏன் அவன் வேலையை விட்டு உழைக்க வேண்டும்? இவர்களுக்கு போஸ்டர் ஒட்டுவதற்கும் கட் அவுட் வைப்பதற்கும் சுண்டல் விற்கும் என் சகோதரன் ஏன தன் 5 நாள் உழைப்பைத் தரவேண்டும்? இவர்களை அரியாசனம் ஏற்றுவதற்கு அடுப்பங்கரையில் இருந்து இடியாப்பம் சுட்டு விற்கும் என் சகோதரி ஏன் இவர்களுக்கு காசு தரவேண்டும்? இவர்களுக்கு தேவைப்பட்டால் காசே இல்லாமல் பிரச்சாரம் ஊர் ஊராய் பஸ்ஸில் போய் செய்யுங்கள். அல்லது ஜவாஹிருல்லாவும், ஹைதரும் தங்களின் பூர்வீகச்சொத்துக்களை விற்று விட்டு இவர்களுக்கு போஸ்டர் அடிக்க காசு கொடுங்கள். இவர்கள் குதிரை ஓட்டுவதற்கு கடிவாளம் வாங்கிக்கொடுக்க வக்கில்லாத சமுதாயத்திடம் எங்களுக்கு குதிரையே உங்கள் காசில் இருந்து வாங்கித்தாருங்கள், அதிலே ஏறி நாங்க எப்படி ஓடுறோம்னு மட்டும் பாருங்க, கிளைக்கு 10 ஆயிரம் ரூபா கண்டிசனா வந்துடனும் என கட்டளை போடும் இந்த கர்மவீரர்களை வெற்றியடையச் செய்ய நாம் ஏன் உழைக்க வேண்டும்?
மமகவில் யாருமே வேட்பாளர்கள் இல்லையா? இவர்களை விட்டால் மமகவில் இருப்பவர்கள் எல்லாம் முட்டாள்களா? பயந்தாங்கொள்ளிகளா? கோழைகளா? இவர்களை ஏனப்பா எல்லாவற்றிற்கும் முன்னிறுத்துகிறீர்கள். எல்லாவற்றிற்கும் முன் நிற்க வேண்டும் என ஆசைப்படும் நிரந்தர தலைவரும், நிரந்தர பொதுச்செயலாளரும் திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸில் அப்பாவி மமக தொண்டர்கள் குமுறக்குமுற அடிவாங்கிய போது அந்த தகவல் உடனடியாக அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போதும் நிரந்தரத்தர பொதுச்செயலாளர் தன் பாதையையே மாற்றிக்கொண்டு தாம்பரம் பக்கம் தாவிச்சென்றாரா இல்லையா? கலாட்டா நடக்கும் இடத்திலே தகவல் கொடுத்தும் கழகத்தின் பொதுச்செயலாளர் கடைசிவரை அந்தப்பக்கமே தலைவைத்துப் படுக்காமல் அந்தி சாயும் நேரத்துல ஆஸ்பத்திரிக்கி போய் ஆறுதல் சொன்னாரா இல்லையா? எல்லாவற்றிலும் முன் நிற்போம் என சொல்லக்கூடியவர்கள் அடிவாங்குவதில் மட்டும் பின் நிற்க காரணம் என்ன? பாவம் அப்பாவி தமுமுக தொண்டர்கள்.
சரி விசயத்திற்கு வரலாம். என்னவோ 1200 பேர் தேர்தலில் போட்டியிட மணுச்செய்த மாதிரி இன்னும் கொஞ்ச நேரத்தில் மாமா கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிடப்போவுதாம். மொத்தம் இருப்பது 3 சீட்டு , அதுல போட்டியிட 2 பேருன்னு உலகுக்கே விசயம் தெரிந்து இருக்கும் போது என்னத்தய்யா புதுசா வேட்பாளர் பட்டியலை விடப்போறீக? அந்த மூனாவது நபர் யாருன்னு வேணுமினா காத்திருக்கலாம். மற்றபடி உண்மையிலேயே 1200 பேர் தேர்தலில் மமக சார்பில் போட்டியிட விண்ணப்பம் செய்திருந்தாலும் அவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்போம் என சொல்லி 1200 பேர் பெயரையும் சீட்டில் எழுதி ஒரு அண்டாவில் போட்டு குலுக்கி அதிலிருந்து 3 பேரைத் தேர்ந்தெடுப்பார்கள். அதிலும் இந்த இரண்டு பேர் இருப்பார்கள். அய்யா! மமக தமுமுக தொண்டர்களே! கொஞ்சமாவது சிந்திங்கப்பா! உங்கள் உழைப்பைச் சுரண்டி இவர்கள் ஏறி நிற்க முயற்சிக்கிறார்கள். உஷார் ஆகுங்கள்
மமக செய்த சமுதாய நன்மைகளும், வக்ஃப் சொத்துக்களை பாதுகாத்த லட்சனமும் குறித்த விரிவான அலசல் மிக விரைவில்
பரிசுக்கேள்வி:
மமகவினர் மீது கொலைவெறி தாக்குதல், ஹைதர் அலி உள்ளிட்டவர்கள் கள்ள ஓட்டுப்போடுபவர்களை அடையாளம் காட்டிய போது ஹைதர் அலி உள்ளிட்ட கழகத்தொண்டர்கள் மீது திமுகவினர் கொலை வெறி தாக்குதல் நடத்தினார்கள் என்பது அன்றைய தட்ஸ்தமிழின் செய்தி. அடையாளம் காட்டும் போது நின்ற ஹைதர் அலி, அடிவாங்கும் போது எங்கே சென்றார்? அங்கு நின்ற அப்பாவி தொண்டர்கள் எல்லாம் ரத்தம் சொட்டச்சொட்ட அடிவாங்கிய போது ஹைதர் அலி மட்டும் ஒரு சிறு கீற‌ல் கூட இல்லாமல் தப்பியது எப்படி?
இந்தக் கேள்விகளுக்கு சரியான விடையளிப்பவர்களுக்கு மமகவுக்கு பாண்டிச்சேரியில் ஒதுக்கப்பட்ட ஒரு சீட்டில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும்,








அடிவாங்கி ஆஸ்பத்திரியில் இருந்தவர்களிடம் நலம் விசாரிக்க சென்ற ஹைதர் அவர்கள் ஒருவரிடம் சென்று, அடிவாங்கும் போது என் பேர சொன்னீங்களா? என் பேர சொன்னா விட்டு இருப்பாங்கள்ல! என்று கேட்டாராம், அதற்கு டென்சனான அவர், அட ஏங்க! உங்கப்பேர சொன்ன பெறகு தான் அடியே பலமா விழுந்துச்சின்னாராம்.

செவ்வாய், 22 மார்ச், 2011

தவ்ஹீத் சகோதரர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ABCD (SDPI PFI etc..) ரவுடி கும்பல்

ஜிஹாத் எனும் பெயரால் இளைஞர்களை வழிகெடுத்து வரும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியாவின் போக்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் குமரி மாவட்ட நிர்வாகிகள் நோட்டீஸ் விநியோகம் செய்து வந்தனர்.
அந்த நோட்டீஸில் உள்ள உண்மைச் செய்திகள் மக்களுக்கு சென்று விட்டால் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியா, எஸ்.டி.பி.ஐ என பலர் பெயர்களில் உலா வரும் இவர்களின் சுயரூபம் வெளிப்பட்டு விடுமென்பதால் வெலவெலத்துப் போன அவர்கள் டி.என்.டி.ஜே நிர்வாகிகளை கொலை செய்ய திட்டமிட்டு நடுரோட்டில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
நோட்டீஸ் விநியோகிக்க சென்றவர்கள் இரண்டே இரண்டு பேர் தான். இரண்டு பேர் மட்டும் தான் நோட்டீஸ் கொடுப்பதை அறிந்து கொண்ட இந்த ரவுடிகள் கூட்டமாக சேர்ந்து இருவரை கோழைத்தனமாக தாக்கி உள்ளனர்.
விமர்சனத்தை விமர்சனத்தால் எதிர்கொள்ள தயங்கும் இந்த கோழைகள், அந்த இரண்டு நிர்வாகிக்ளையும் அடித்து உதைத்த பின்னர் இறந்து விட்டதாக நினைத்தார்களோ அல்லது இறந்துவிட்டால் பிரச்சனையாகிவிடும் என நினைத்தார்களோ அப்படியே போட்டுவிட்டு சென்று விட்டனர்.
கொலைவெறி தாக்குதலுக்குள்ளான இரண்டு முஸ்லிம் சகோதரர்களும் நாகர்கோவில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிட்சை பெற்று வருகின்றனர். இறைவனின் கருணையால் ஜாஃபர், நாசர் என்ற அவர்கள் இருவரின் உயிருக்கு ஏதும் பாதிப்பு ஏற்படவில்லை. அல்ஹம்துலில்லாஹ்!
ஆனால் கொலைமுயற்சியில் ஈடுபட்ட ரவுடிகளான பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியாவின் கொள்கைவாதிகள் இப்போது தலைமறைவாகி விட்டனர்.
டி.என்.டி.ஜே நிர்வாகிகள் வெளியிட்ட அந்த நோட்டீஸில் ‘இவர்கள் முஸ்லிம் சகோதரன் என்று கூட பார்க்காமல் அடிப்பார்கள், தாக்குவார்கள். ஆனால் பாதிப்படைந்தவர் புகார் கொடுத்தால் அதை எதிர்கொள்ள திராணியின்றி தலைமறைவாகி விடுவர்’ என்று போடப்பட்டிருந்தது. அதை இவர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.
இவர்களின் இந்த கீழ்த்தரமான செயலினால் குமரி மாவட்ட முஸ்லிம்கள் ‘சொந்த சகோதரனை கொல்ல துடிக்கும் இவர்கள் ரவுடிகக் கும்பல் தான் என்று உணர ஆரம்பித்துள்ளனர்.
இவர்கள் பிற மாவட்டங்களில் முஸ்லிம்களை கொல்வதும் அடித்து உதைப்பதும் அராஜக செயல்கள் செய்வதும் குமரி மாவட்ட முஸ்லிம்களுக்கு இதுநாள் வரை தெரியாமல் இருந்தது.
இந்த சம்பவத்தின் மூலம் இவர்கள் முஸ்லிம்களுக்கு பகிரங்க எதிரிகள், இவர்கள் தீவிரவாதிகள் தான் என்பதை ஊருக்கு காண்பித்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!
குறிப்பு : கொலைவெறி தாக்குதலுக்குள்ளாகி மூன்று நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நிலை சற்று தேறிவரும் அந்த இரண்டு சகோதரர்களுக்காக துஆ செய்யவும்.

பைலா தான் இல்ல! கொள்கை கூட இல்லையா?

                                                         மார்ச் 30 ஆம் தேதி பொதுக்குழு lஎன பதிவுசெய்யப்படாத‌ பொய்யன் சமாத்தார்களால் அறிவிக்கப்பட்டு பின்னர் அவசர அவசமாக 15ஆம் தேதி என . ஆனால் பொதுக்குழுவிற்கு எதிர்பார்த்த கூட்டம் வராத காரணத்தால் அது செயற்குழுவாக ஆக்கப்பட்டது. அடிப்படை உறுப்பினர் கூட செயற்குழுவில் கலந்து கொள்ளலாம் என்ற விதி பொய்யன் சமாத்தில் மட்டும் தான் இருக்கிற‌து போலும். சரி அப்படியே நடந்தாலும் எடுக்கப்பட்ட முடிவுகள் சரியானதா என்றால் அதுவும் முரணோ முரண். ஆமாம். கடந்த ஜனவரி மாதம் கோவையில் இதஜடியின் மர்க்கஸ்ஸை திறந்து வைத்து வீர உரையாற்றிய தலைவர் யார் மாநிலத்தில்7 சதவிகிதமும்மத்தியில் 10சதவிகிதமும் இடஒதுக்கீடு தருபவர்களுக்குத் தான் எங்கள் ஆதரவு என அறிவித்தார்.


ஆனால் பதிவுசெய்யப்படாத‌ டிரஸ்டு சமாத்தை யாருமே சீண்டிப்பார்க்காத நிலையில் என்ன செய்வது என தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஒரு நிலைப்பாட்டை எடுத்தது. அதாவது மாநிலத்தில் இருக்கும் 3.5 இடஒதுக்கீட்டை 5 சதவிகிதமாக ஆளுங்கட்சி சட்டமியற்றினால் திமுகவுக்கும்,எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தாலே போதும் அவர்களுக்கு ஆதரவு என்றும் நிலைப்பாட்டை எடுத்தது. இதை அறிந்து கொண்ட பொய்யன் சமாத்தினர் நெல்லையில் வைத்து ஒரு புது நிலைப்பாட்டை அறிவித்தார்கள். அதாவது ததஜ எடுத்த அதே நிலைபாடு. காரணம் ஒருவேளை அது சட்டமாக்கப்பட்டால் நாங்கள் தான் கேட்டோம் என சொல்லிக்கொள்ளலாம் என்ற நப்பாசையில் அந்தர் பல்டி அடித்தது இந்த சர்க்கஸ் கூடாரம்.
சரி அந்த நிலைப்பாட்டின் படியாவது இப்போது முடிவெடுத்தார்களா என்றால் அதுவும் இல்லை. அதாவது ஒரு கோரிக்கையை முன்வைத்து கேட்பதாக இருந்தால் இரண்டு புறமும் தான் பேச்சு நடத்த வேண்டும். ஆனால் பதிவுசெய்யப்படாத‌ இந்திய‌ சமாத்தினர் அம்மாவுக்கு மட்டும் ஒரு கடிதம் எழுதிவிட்டு அப்போதே அவர்களின் அரசியல் நிலைபாட்டை வெளிப்படுத்தினார்கள். ஆனால் அப்பொழுதும் கூட அம்மாவின் கரிசனம் கிடைக்கவில்லை. 3சீட்டு முன்னேற்றக்கழகமாவது தூதுவிட்டு தூதுவிட்டு 3 மாசம் காத்திருந்து ,எங்களை பன்னீர் தொடர்பு கொண்டார்வெண்ணீர் தொடர்பு கொண்டார் என இவர்களாகவே சொல்லிக்கொண்டார்க‌ள்.
ஆனால் பதிவுசெய்யப்படாத‌ இந்திய சமாத்து டிரஸ்டினருக்கு அந்த பாக்கியம் கூட கிடைக்கவில்லை. கடைசிவரை அம்மாவிடம் இருந்து அழைப்பும் வரவில்லை ஆளும் வரவில்லை. சிக்னல் இழந்த செல்போன் போல ஆனார்கள் பதிவுசெய்யப்படாத‌ இந்திய சமாத்தினர். இனி சும்மா இருந்தால் சோலியாகாது என நினைத்து வேறு வழியில்லாமல் பொதுக்குழு என அறிவித்து செயற்குழுவாக்கினார்கள்.
அதற்கு முன்னதாக எந்த கட்சி முஸ்லீம்களுக்கு பிரதிநிதித்துவம் தருகிறதோ என அறிவித்து விட்டு இப்போது அதிமுகவுக்கு ஆதரவு என கொடி தூக்கத் தயாராகிவிட்டார்கள். இப்போது நாம் கேட்கும் கேள்வி.
 நீங்கள் அம்மாவுக்கு எழுதிய கடிதம் தவிர்த்து வேறு எந்த வகையில் அதிமுகவை தொடர்பு கொண்டீர்கள்?
* “எந்த கட்சி தருகிறதோ என சொன்ன நீங்கள் அதிமுகவிற்கு மட்டும் கடிதம் எழுதிய காரணம் என்ன?கலைஞருக்கு உங்களால் எழுதப்பட்டதாக நீங்கள் வெளியிடப்பட்டிருக்கும் கடித்ததில் தேதி இல்லையே! அது எப்படி ஒரு முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் தேதி இல்லாமல் போகும். அதை நீங்கள் அனுப்பினீர்களா அல்லது எழுதி நீங்களே வைத்துக்கொண்டீர்களா?
அவ்வாறு எழுதிய கடிதத்திற்கு இன்று வரை எந்த விதமான பதிலோ தகவலோ வராத நிலையில் அதிமுகவுக்கு ஆதரவு என்ற நிலையை எடுப்பதற்கு என்ன காரணம்?
அஇஅதிமுக உங்கள் கோரிக்கையான(?) 5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த ஒப்புதல் தெரிவித்து விட்டார் என சொல்லுக்கொள்ளும் நீங்கள் அதற்கான ஆதாரத்தை வெளியிடத்தயாராஎத்தனைமுறை உங்களை அதிமுக பிரமுகர்கள் சந்தித்தார்கள் அல்லது நீங்கள் எத்தனை முறை அவர்களைச் சந்தித்தீர்கள் என்ற விபரங்களை வெளியிடத்தயாராஅப்பறம் என்ன காரணத்திற்காக அதிமுகவை ஆதரிக்கிறீர்கள என விவரம் சொல்ல தயாரா?
 
இட ஒதுக்கீடு 7 சதவிகிதம் வேண்டும் என கேட்ட நீங்கள் திடீரென அந்தர்பல்டி அடித்து அமைப்பின் பெயர்கொடி என எல்லாவற்றிலும் ததஜவை காப்பியடித்தது போல இந்த தேர்தல் நிலைப்பாட்டிலும் ததஜவை காப்பியடித்த காரணம் என்னஒருவேளை 5சதவிகித இட ஒதுக்கீடு கிடைத்தால்நாங்கள் தான் கடிதம் எழுதினோம்நாங்கள் தான் போன் பேசினோம்,நாங்கள் தான் எஸ்எம்எஸ் அனுப்பினோம் என சொல்லிக்கொள்ளும் உங்களையும் நம்பி சில அப்பாவிகள் நிற்கிறார்களே அவர்களின் நிலை என்ன?
இடஒதுக்கீடும் தேவையில்லை ஒரு மண்ணாங்கட்டியும் தேவையில்லை. இப்போதைய தேவை கழகத்தின் நிரந்தர தலைவரும்,பொதுச்செயலாளரும் எம்மெல்லே ஆனால் போதும் என வாய்மூடி மௌனித்து இருக்கும் மானங்கெட்ட மாமா கட்சியை நீங்கள் ஆதரிப்பது ஏன்?
இந்த கேள்விகளுக்கெல்லாம் இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே உங்களால் பதில் தர முடியாது. ஏற்கனவே அப்துல் முஹைமீன் என்ற அரைலூசு குவைத் விவகாரத்தில் மூச்சித்தினறி கதவிடுக்கில் மாட்டிய எலியாய் தவிக்கும் போது அதே நிலைதானே இப்போது உங்களுக்கும்.
உறங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களெல்லாம் சமுதாயப் பணியாற்றும் இயக்கம் என நீங்கள் தான் சொல்லிக்கொள்ள வேண்டும். நீங்கள் உறங்கும் நேரம் தான் மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருப்பார்கள.

திங்கள், 21 மார்ச், 2011

பா.ஜ.க வின் இரட்டை நாக்கு ! விக்கீலீஸ்.

இந்தியாவின் எதிர்க்கட்சியான பாஜக ஆட்சியில் இருக்கும் போது ஒரு நிலைப்பாட்டுடனும், எதிர்கட்சியாக இருக்கும்போது வேறொரு நிலைப்பாட்டுடனும் செயல்படுவதாக விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அத்வானியின் பேச்சுக்கள் மற்றும் அவர் நடந்து கொண்ட முறையை மேற்கோள்காட்டி, அமெரிக்க தூதரக ஆவணங்களில் பகிரப்பட்டிருப்பதை 'தி ஹிந்து' நாளிதழ் வெளிப்படுத்தியுள்ளது (கேபிள் எண் 48692). கடந்த 2009-ம் ஆண்டு மே 13-ம் தேதி (மக்களவைத் தேர்தல் முடிவுக்கு முந்தைய தினம்) பிஜேபி பிரதமர் வேட்பாளர் அத்வானியைச் சந்தித்தித்துள்ளார் அமெரிக்க தூதரக உயர் பொறுப்பில் இருந்த பீட்டர் பர்லீக்.
அப்போது, 'பிஜேபி ஆட்சியில் அமர்ந்தால், அமெரிக்கா - இந்தியா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது,' என்று தன்னிடம் அத்வானி கூறியுள்ளார். இதனை அதே நாளில் வாஷிங்டனுக்கு அனுப்பிய கேபிளில் குறிப்பிட்டுள்ளார் பீட்டர்.
"எவ்வித பதற்றமுமின்றி நம்பிக்கையுடன் காணப்பட்ட பிஜேபி தலைவர் எல்.கே.அத்வானி, பிஜேபி தலைமையிலான அரசு அமைந்தாலும் அமெரிக்கா - இந்தியா இடையிலான வலுவான உறவு தொடரும் என்று கூறினார்," என அதில் குறிப்பிட்டிருந்தார்.

இரட்டை நாக்கு...
அமெரிக்காவுடனான உறவு தொடர்பான பிஜேபி நிலைப்பாட்டின் தன்மையை 2005-ம் ஆண்டு டிசம்பரில் வாஷிங்டனுக்கு அனுப்பப்பட்ட கேபிளில் விவரிக்கப்பட்டுள்ளது. 'மும்பையில் 2005 டிச.26 மற்றும் 27-ல் நடந்த பிஜேபி தேசிய செயற்குழு கூட்டத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசானது, அமெரிக்காவின் அடிமையாக இயங்குகிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மறுநாள் டிச.28-ல் தன்னிடம் தனிப்பட்ட முறையில் பேசிய பிஜேபி தேசிய செயற்குழு தலைவர் சேஷாத்திரி சாரி, "பாஜகவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான தீர்மானத்தை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அது சும்மா ஒரு பேருக்காக வெளியிடப்பட்டது" என்று கேட்டுக்கொண்டதாக அமெரிக்க தூதரக அதிகாரி ராபர்ட் பிளேக் அனுப்பிய கேபிளில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியலுக்காக மட்டுமே காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை பாஜக எதிர்ப்பது உறுதியாகிறது என்றும், உண்மையில் காங்கிரஸ், பாஜக இரண்டுமே ஒரே விதமான சிறகுகள் கொண்ட பறவைகள்தான் என்றும் விக்கிலீக்ஸ் வர்ணித்துள்ளது.

பன்முக அமைப்பினரின் மார்க்க விரோத செயல்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் சிறுத்தொண்டநல்லூர் கிளை சார்பாக 13.3.2011 அன்று நடைபெற இருக்கும் மார்க்க விளக்கக் கூட்ட வால்போஸ்டர்கள் வியாழன் அன்று கிளையில் ஒட்டப்பட்டது.
ABCD (SDPI,DPI,PFI, MNP etc..) அமைப்பான பலமுகங்களோடு மக்கள் மத்தியில் உலாவந்து கொண்டு இருக்கும் SDPI MNP  யினர் சனிக்கிழமை இரவு இந்த வால்போஸ்டரின் மீது  போஸ்டர்களை ஒட்டியுள்ளார்கள்.
அழைப்புபணி செய்வதற்காக ஒட்டப்பட்ட  வால்போஸ்டர் மீது போஸ்டரை ஒட்டி அராஜகம் செய்துள்ளனர் இவர்களெல்லாம் எமஎல்ஏ ஆகினால் அது சமுதாயத்திற்கு கேடுதான்.
சிந்தியுங்கள் சகோதரர்களே நமக்கு முதல் குறிக்கோள் மறுமையாகதான் இருக்கவேண்டும் பிறகுதான் இம்மை கொடிக்கு சல்யுட் அடிக்கும் இந்த மார்க்க விரோதிகள் சமுதாய காவலர்களாம் அல்லாஹ்வே இத்கையோர்களிடமிருந்து சமுதாயத்தை  காப்பாற்றவேண்டும்

புதன், 16 மார்ச், 2011

பாசிச ஜெயாவிற்கு பாடம் புகுட்ட தி,மு.க தலைமையிலான கூட்டணியை ஆதரிப்போம் த.மு.மு.க!!

கருணாநிதி - ஜெயலலிதா: யாரை ஆதரிக்கப் போகிறோம்?
 அன்பார்ந்த சகோதர சகோதரிகளே...
எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக முஸ்லிம் சமுதாயம் திமுக - காங்கிரஸ் - கம்யூனிஸ்டு கட்சிகள் பங்கேற்றிருக்கும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

முஸ்லிம்கள் வாழுமிடங்களில் அதிமுக எதிர்ப்பு அலை வீசிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தின் அனைத்து மக்களும் ஜெயலலிதாவின் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என்று தீவிரமாகப் போராடிக் கொண்டிருக்கின் றனர்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வு ஆட்டம் கண்டிருக்கிறது. அதனால் சிறுபான்மை சமூக மக்களின் ஆதரவைப் பெற நாடகமாடுகிறார்.
தேர்தல் நேரத்தில் மட்டுமே பரபரப்பாய் இயங்கும் ஓரிரு முஸ்லிம் அமைப்புகள் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மேடைதோறும் 'கச்சேரி' நடத்திக் கொண்டிருக் கிறார்கள். தனியார் டி.வி. மூலமாக போயஸ் தோட்டத்தில் பெற்றுக் கொண்ட 'சூட்கேஸ்'களுக்கு விசுவாசமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லிம்களுக்கு திமுக என்ன செய்தது?

சிலர், திமுக ஆட்சியில்தானே கோவைக் கலவரம் நடந்தது என்று குற்றம் சுமத்துகிறார்கள். நாம் அதனை மறுக்கவில்லை. அதேசமயம், திமுக ஆட்சி நடைபெற்ற 1960-71, 1971-76, 1989-91, 1996-2001 ஆகிய காலக்கட்டங்களில் முஸ்லிம் சமூகம் பல நன்மைகளைப் பெற்றுள்ளதை மறந்துவிட முடியாது.

1971லிருந்து 1976வரை நடைபெற்ற திமுக ஆட்சியில்தான் கலைஞர் கருணாநிதி அவர்கள், உருது பேசும் முஸ்லிம்களை பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்தார். இதனால் 94.5 சதவீத தமிழக முஸ்லிம்களுக்கு ஓரளவு சமூக நீதி கிடைத்தது.
சென்னை காயிதே மில்லத் கல்லூரி, மதுரை வக்பு வாரியக் கல்லூரி ஆகியவை தொடங்குவதற்கு அரசு சார்பில் நிலங்கள் வழங்கப்பட்டன.
உருதுமொழி வளர்ச்சிக்காக உருது அகாடமி தொடங்கப்பட்டது.
ஜெயலலிதாவின் 1991 முதல் 1996 வரையிலான ஆட்சியில் பாபர் மஸ்ஜித் இடிப்பை தட்டிக்கேட்ட முஸ்லிம்கள் மீது 'தடா' கறுப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டது. அவர்களையெல்லாம் 1996லில் மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு கலைஞர் அரசு தான் விடுதலை செய்தது.
கோவையில் நடைபெற்ற சம்பவங்களில் முஸ்லிம்கள் சாதாரண கிரிமினல் வழக்குகளில் மட்டும் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் மீது வேறு பயங்கர சட்டங்கள் ஏதும் பதிவு செய்யப்பட வில்லை.. மாறாக 2005லில் ஜெயலலிதாவின் ஆட்சியில் முத்துப்பேட்டையில் நடைபெற்ற கலவரத்தில் பஷீர் என்பவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா எப்படிப்பட்ட மதவெறியர் என்பது உலகம் அறிந்த உண்மை
சென்னையில் 1991லில் ஜெ. ஆட்சியில் நடைபெற்ற மீலாது விழா கலவரத்தை முஸ்லிம்கள் யாரும் மறக்க முடியாது. அந்தக் கலவரத்தில் இரண்டு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இக்கலவ ரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நிவாரண உதவிகள் மறுக்கப்பட்டது.

* பாபரி மஸ்ஜித் இடத்தில் கரசேவை நடத்த வேண்டும் என்று தேசிய ஒருமைப்பாட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய பாஜக அல்லாத ஒரே முதலமைச்சர் என்ற 'விருதை' ஜெயலலிதாவுக்கு சங்பரிவாரங்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

* 1992 டிசம்பர் 6லில் பாபரி மஸ்ஜித் இடிக்கப் பட்டபோது ஜெயலலிதாவின் அரசு கடுமையாக நடந்து கொண்டது. அதிராம்பட்டினம், மேலப் பாளையம். கோவை போன்ற இடங்களில் பாபரி மஸ்ஜித் இடிப்பைக் கண்டித்து அமைதி வழியில் போராடிய முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்

ஜெயலலிதாவின் 1991லி1996 ஆட்சியில் முஸ்லிம்கள் மீது அடக்குமுறை தடாச் சட்டம் பாய்ச்சப் பட்டது. காயல்பட்டினத்தில் 'எச்சில் துப்பினார்' என்ற காரணத்தை(?) சுமத்தி ஒருவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தார். 14 வயது முஸ்லிம் சிறுவன் மீதெல்லாம் 'தடா' சட்டம் பாய்ச்சப்பட்டது.
ஜெயலலிதாவின் 1991லி1996 ஆட்சியில் கோவை பள்ளிவாசல் இமாம் ஜியாவுதீனும், திண்டுக்கல்லில் பள்ளிவாசல் இமாம் காஸிமும், இராமநாதபுரத்தில் இஸ்லாமிய அழைப்புப் பணி செய்த கூரியூர் ஜின்னாவும் படுகொலை செய்யப்பட்டனர். கொலையாளிகள் மீது சாதாரண கிரிமினல் வழக்குகளே பதிவு செய்யப்பட்டன. ஆனால் மதுரையில் ராஜகோபாலனை கொன்றதாகக் கூறி கைது செய்யப்பட்டவர்கள் மீது 'தடா' சட்டத்தைப் பாய்ச்சி அநீதியாக நடந்து கொண்டார் ஜெயலலிதா.
அதே வழக்கில் இன்று 'ஜெயா'வின் புதிய கொள்கை பரப்புச் செயலாளர் பாக்கர் என்பவரும் ஜெயலலிதாவால் 'தடா'வில் கைது செய்யப்பட்டார். அடுத்து ஜெயினுலாபிதீனும் கைது செய்யப்படும் சூழல் வந்தது. அப்போது அவரைக் காப்பாற்றியது த.மு.மு.க. என்ற கேடயம்தான்.
ஜெயலலிதாவின் ஆட்சியில் முஸ்லிம்கள் குற்றப்பரம்பரையாக சித்தரிக்கப்பட்டனர். கோவையில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் கோட்டைமேடு பகுதியில் 'போலீஸ் செக்போஸ்ட்' அமைத்து முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்தார் ஜெயலலிதா. 1996லில் மீண்டும் கலைஞர் முதல்வராக பொறுப்பேற்ற போதுதான் அந்த 'செக்லிபோஸ்ட்'கள் அகற்றப்பட்டன.

இன்றைய ஜெயலலிதா அரசின் முஸ்லிம் விரோத நடவடிக்கைகள்

2002ஆம் ஆண்டில் சங்பரிவார் கும்பல் திருப்பூரில் கலவரம் செய்து முஸ்லிம்களின் பள்ளிவாசலை தீவைத்துக் கொளுத்தியது. 70 லட்சம் மதிப்புள்ள பனியன் கம்பெனிகளும் கொளுத்தப்பட்டன. 10 அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர்.
2002லில் அதிராம்பட்டினத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்துகளில் முஸ்லிம்கள் மீது பழிபோட்டு, பொய் வழக்கு போட்டது ஜெயலலிதா அரசு.
2003லில் ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்காவுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்த முஸ்லிம் கள் மீது ஜெயலலிதா அரசின் காவல்துறை அத்துமீறி தாக்குதலை நடத்தியது. அதில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். 200க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டது.
3,000 முஸ்லிம்களைக் கொன்ற நரேந்திர மோடிக்கு நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களையும் வேதனைப்படுத்தினார் ஜெயலலிதா. பிறகு 2004ல், குஜராத்தில் முஸ்லிம்களைக் கொன்று குவித்த பாஜகவுடன் தேர்தல் கூட்டு வைத்தார்.
2002லில் குஜராத்திற்குச் சென்று நரேந்திர மோடிக்கு பூங்கொத்து கொடுத்த ஜெயலலிதா, 2003லில் நரேந்திர மோடி கோவைக்கு வருகை தந்தபோது, முன்னெச்சரிக்கை என்ற பெயரில் தமுமுக நிர்வாகிகளை சிறைப் பிடித்தது.
2005லில், முத்துப்பேட்டையில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி பாஜகவினர் விநாயகர் ஊர்வலம் நடத்தினர். உயர்நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள் ளதை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பஷீர் என்பவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை பிரயோகித்த ஜெயலலிதா அரசு, கலவரத்தில் நேரடியாகப் பங்குகொண்ட பாஜகவின் மாவட்டச் செயலாளர் கறுப்பு (எ) முருகானந்தத்தை அதே சட்டத்தின் கீழ் கைது செய்யாமல் பாரபட்சம் காட்டியது.
2005ல் பழனி பாலசமுத்திரம் பகுதியில் முஸ்லிம் களின் ஜனாஸாக்களை அடக்கவிடாமல் தகராறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் முஸ்லிம்களைத் துன்பத்தில் ஆழ்த்தியவர் ஜெயலலிதா.
இஸ்லாத்தை மனமுவந்து ஏற்கும் மக்களைத் தடுக்கும்விதமாக இந்தியா விலேயே முதன் முறையாக 'மதமாற்ற தடைச் சட்டத்தை'க் கொண்டு வந்து சங்பரிவாரின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றார் ஜெயலலிதா. ஜெயலலிதாவைப் பின்பற்றி பாஜக ஆளும் மாநிலங்களில் தற்போது மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா ஆட்சியில் கோவையில் சுல்தான் மீரான், அப்துல் சத்தார், சர்தார், கவுண்டம்பாளையம் அப்பாஸ் ஆகியோரும், விழுப்புரத்தில் பள்ளிவாசல் இமாம் உசேன் அவர்களும் படுகொலை செய்யப்பட்டார்கள். கோவையில் இமாம் ஒருவர் பயங்கரமாக தாக்கப்பட்டார். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கையை ஜெயலலிதா எடுக்கவில்லை.
பழனிபாபாவைக் கொன்றவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவிட்டவர் ஜெயலலிதா.
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை கடுமையாக எதிர்த்தவர்.
ஜெயலலிதா ஆட்சியில் முஸ்லிம் அதிகாரிகள் பழிவாங்கப்பட்டனர்.
''அயோத்தியில் பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டியே தீரவேண்டும், பொதுசிவில் சட்டம் கட்டாயம் அமல்படுத்த வேண்டும்'' என்று ஜெயலலிதா கூறினார்.
முஸ்லிம், கிறித்ஸ்வ மற்றும் மதச்சார்பற்ற இந்துக்களுக்கு எதிராக திரிசூலம் வழங்கும் நிகழ்ச்சியை பிரவீண் தொகாடியா திருச்சியில் நடத்திட அனுமதி தந்தார் ஜெயலலிதா.
மார்ச் 2006ல் ''தமிழ்நாட்டை குஜராத் ஆக்குவோம்'' என்று வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கால் பேசியதற்கு நடவடிக்கை எடுக்காதவர் ஜெயலலிதா.
மார்ச் 2006லில் கடையநல்லூரில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் ஏற்பட்ட சிறிய பிரச்சினைக்கு சட்டரீதியாக தீர்வு காணாமல் அங்கு நிரந்தரமாக தொழுகை நடைபெறுவதைத் தடுக்கும் வண்ணம் ஜெயலலிதா அரசு பூட்டு போட்டது.

குஜராத்தில் 3,000 முஸ்லிம்களைப் படுகொலை செய்த மாபாதகர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்த ஜெயலலிதாவுக்கு வாக்கு அளிக்கலாமா?

கோவை சம்பவங்களை இப்போது சிலர் நினைவுபடுத்தி, திமுகவிற்கு நாம் வாக் களிக்கலாமா? என்று கேள்வி கேட்கிறார்கள். கோவை சம்பவத்தைத் தொடர்ந்து 1998லில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக கூட்டணியை ஆதரித்ததை ஜெய்னுலாபுதீன் வட்டாரம் திட்டமிட்டே மறைத்து வருகிறது. அதைத் தொடர்ந்து 2001 சட்டமன்றத் தேர்தலில் கலவரம் நடைபெற்ற கோவை உள்ளிட்ட 100 தொகுதிகளில் அதிமுகவை எதிர்த்து திமுகவுக்கு ஆதரவாக வேலை செய்ததையும் 'ஜெய்னுலாபுதீன்' வட்டாரம் வசதியாக மறைக்கிறது! மேலும் 2004லில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் திமுகவை ஆதரித்ததையும் அவர்களால் மறைக்க முடியாது.

அப்போதெல்லாம் திமுகவை ஆதரித்தவர்கள், இப்போது திடீரென திமுகவுக்கு எதிராகப் பேசுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்கள் பெற்றுக் கொண்ட 'கமிஷன்'தான். தங்களின் சுயநல வாழ்வுக்காக சமுதாயத்தைக் கூறு போடு பவர்கள், அதற்காக அதிமுக செய்த கொடுமைகளை மறைத்துவிட்டனர்.

1999 ஜூலை 4ல் தமுமுக நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில் ஜெயலலிதா இருந்த போது, ''ஜெயலலிதா இருக்கும்வரை அந்த மேடைக்கே வரமாட்டேன்'' என்று கூறிய ஜெய்னுலாபுதீன், இன்று ''அதிமுகவுக்கு உயிரைக் கொடுத்து வேலை செய்வேன்'' என்று சபதமெடுத்தது போல் பிரச்சாரம் செய்கிறார்,

முஸ்லிம்களுக்கு துரோகம் செய்கிறார். அவரை அதிமுகவினர் தேர்தல் பிரச்சாரங் களில், ''அம்மாவின் போர்ப்படை தளபதி'' என்றே அறிமுகப்படுத்துகின்றனர். இதில் திரைமறைவில் நடந்த 'ரகசியம்' என்ன என்பதை சமுதாயம் சிந்திக்க வேண்டும்.
கருணாநிதி - ஜெயலலிதாவைப் போல் சங்பரிவார் சிந்தனைக் கொண்டவர் அல்ல என்று கூறியவர்கள், இன்று ஜெயலலிதாவிடம் வாங்கிய கமிஷனுக்காக 'பிரச்சார வேலை' செய்து கொண்டிருக்கிறார்கள்.
பாஜகவின் பினாமி ஆட்சியாக நடந்துவரும் ஜெயலலிதா அரசை ஆதரிப்பதற் காக 3,000 முஸ்லிம்களைக் கொன்றொழித்த நரேந்திர மோடியின் செயலைக்கூட ஆதரித்துப் பேச முஸ்லிம் அரசியல் வியாபாரிகள் துணிந்து விட்டனர். இதைத்தான் சகிக்க முடியவில்லை.
 
சிந்திப்பீர்! வாக்களிப்பீர்!

கலைஞர் கருணாநிதி மீது நமக்கு விமர்சனங்கள் உண்டு. அதை நியாயப் படுத்தவில்லை. அவற்றை அன்றும் கண்டித்தோம், இன்றும் கண்டிக்கிறோம். அதேசமயம் இன்று கலைஞரின் நிலைப்பாடு மாறியிருக்கிறது. தனது தவறை ஒத்துக்கொள்ளும் விதமாக விருதுநகரில் நடைபெற்ற திமுக மண்டல மாநாட்டில் ''நாம் போகக்கூடாத இடத்திற்குப் போனது தவறுதான்'' என்று பேசினார். அதில் உறுதியாகவும் உள்ளார். அவரது செயல்பாட்டில் பல மாறுதல்கள் உள்ளன. ஆனால் ஜெயலலிதாவோ ''பாஜகவுடன் கூட்டு சேர மாட்டேன்'' என்று கூறிவிட்டு, மீண்டும் கூட்டு சேர்ந்து வாக்குறுதியை மீறி முஸ்லிம்களை வேதனைப்படுத்தினார்.

ஜெயலலிதா நம்பிக்கைக்குரியவர் அல்ல, அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆர்எஸ்எஸ்லின் எண்ணங்களைத்தான் அமல்படுத்துவார் என்பதை சமுதாயம் சிந்தித்து செயல்பட வேண்டும்.

ஜெயலலிதா அரசினால் எல்லோருக்கும் துன்பம்!

வெள்ள நிவாரண நிதி என்ற பெயரில் 50க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோகக் காரணமாக இருந்தது
ஏழை விவசாயிகளை எலிக்கறி உண்ணும் நிலைக்குத் தள்ளியது
லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை வஞ்சித்தது
போலீஸ் இலாகாவைப் பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டியது

என எல்லாத் தரப்பு மக்களையும் துன்பத்தில் ஆழ்த்தியவர் ஜெயலலிதா.

எனவே அன்பிற்கினிய சமுதாயமே... நமது சமுதாயத்திற்கு இடஒதுக்கீடும் தராமல், 8 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களுக்கு ஜாமீனும் வழங்காமல் ஆட்சியின் இறுதியில் நாடகமாடும் ஜெயலலிதா அரசை வீட்டுக்கு அனுப்புவோம்.

மத்திய மாநில அரசுகளில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு
சிறைவாசிகளுக்கு ஜாமீனில் விடுதலை

ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி கொடுத்திருக்கும் திமுக தலைமை யிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு நமது வாக்குகளை அளிப்போம்.
(சத்தியமா இது த.மு.மு.க வின் கட்டுரைதான் ஆனா படிச்சிட்டு மறந்துடணும் ஏன்னா இது போன தேர்தல் இது இந்த தேர்தல்)