தன் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்ட நிலையில் கேவலப்பட்ட பாக்கருக்கு இன்னும் புத்தி வரவில்லை. பலரிடம் பண மோசடி, பல பெண்களின் வாழ்க்கையைச் சூறையாடிய்து என கேடு கெட்ட செயலுக்குச் சொந்தக்காரரான பாக்கர் மீது கூறப்படும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் உண்மை இல்லை என்று கருதினால் அது குறித்து விவாதிக்கத் தயாரா என்று ஹாமீம் சவால் இட்டு மாதங்கள் பல் ஓடி விட்டன. ஆனால் பொய்யன் பாக்கர் இதற்குப் பதில் சொல்லவில்லை.
ஆனால் அதற்கு பதில் சொல்ல வக்கில்லாத பொய்யன் பாக்கரும் பொய்யன் ஜமீலும், மற்றும் அவர்களுடன் உள்ள பொய்யர்களும் பீஜே மீது இப்போது சில குற்றச்சாட்டுக்களை பரப்பி வருகின்றனர்.
அவர்கள் பரப்பிவரும் குற்றச்சாட்டுக்களைக் கீழே தந்துள்ளோம்.
பொய்யன் பொதுச் செயலாளராக இருந்த போது நடந்ததாக பொய்யன் கூறும் கீழ்க்கண்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து பீஜேயிடம் கேட்ட போது
பொய்யன் பாக்கர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தே பொய் சொல்வதை வழக்கமாகக் கொண்டவர். எனவே அவர் என்ன வேண்டுமானாலும் சொல்வார். அவருக்கு மானம் ரோசம் சூடு சொரனை இருந்தால் இந்தக் குற்றச் சாட்டுக்களை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். நான் இதற்குத் தயாராக இருக்கிறேன். பொய்யன் பாக்கர் தயாரா என்று நெஞ்சை நிமிர்த்தி பீஜே இதை எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாக கூறுகிறார். மேலும் ஜமாஅத்தைப் பயன்படுத்தி நான் சம்பாதித்ததை நிரூபித்தால் எனது எல்லாச் சொத்தையும் பாக்கர் எடுத்துக் கொள்ளலாம் என்றும் பீஜே கூறுகிறார். பாக்கரைப் போல் ஓடி ஒளியவில்லை. மேலும் இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு முன்னரே எனது இணைய தளத்தில் பதில் சொல்லி விட்டதையும் பீஜே சுட்டிக் காட்டுகிறார்.
பொய்யன் பாக்கர் இதை எதிர் கொள்ளத் தயாரா?
தொழுகையில்லாத, ஒழுக்கமில்லாத இவரிடம் வரும் தவ்ஹீத் சகோதரர்களிடம் எப்படி பேசுவது என்ற மரியாதையும் தெரியாத மைத்துனர்கள் இவருக்கும் சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தி கொடுத்தள்ளார். சன் பிரிண்டிங் ஏஜென்ஸியும், மூன் பப்ளிகேஷன் தான் ! அவைகள். இந்த சன் பிரிண்டிங் ஏஜென்ஸிதான் ஜமாஅத்தின் பெரும்பாலான பிரிண்டிங் வேலைகளை எடுக்கும் தேர்தல் வந்துவிட்டால் இவர்கள் பாடு கொண்டாட்டம் தான் ! ஏனென்றால் அரசியல் வாதிகளிடம் நேரடியாக காசு வாங்க மாட்டோம் செலவு செய்துவிட்டு பில் தருவோம் நீங்கள் கொடுத்து விடவேண்டும் என பேரம் பேசி பெருந்தொகையை பிரிண்டிங்க்கு கறந்து விடுவர். இப்படித்தான் கடந்த முறை பன்னீர் மூலம் ஜெ தந்த பல லட்சம் பணம் ஜெகவீ மூலமாக தேர்தல் பிரசார செலவாக காண்பிக்கப்பட்டது. இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு தேதி வேண்டும் என்றால் குண்டு வைத்தது யார் ? என்ற பிரசுரத்தை 3000 பிரிண்டிங் செய்ய வேண்டும் என்று நிர்பந்தம் செய்த கொடுமை எல்லாம் பெரிய குளம் சகோதரர்கள் நிகழ்ச்சி நடத்தியபோது வெளிப்பட்டது. பாக்கர் ஜமாஅத் பேரை பயன்படுத்தி சம்பாதிக்கிறார் என குய்யோ முறையோ என குதித்த ஹாமிம் இப்ராஹிம் ஜமாஅத் பெயரை பயன்படுத்தி இவரது மைத்துனர்கள் அப்பட்டமாக காலண்டர் போட்டு சம்பாதிக்கிறார்கள் என நாம் குற்றம் சாட்டிய போதும் பொதுச் செயலாளரே அது தவறு என்று ஒப்புக் கொண்ட பிறகும் கூட கண்டு கொள்ளவில்லை.
இது (சன்) சூரியத் தொல்லை என்றால், (மூன்) சந்திர தொல்லைக்கு எல்லேயே இல்லை ! மூன் பப்ளிகேசன் என்ற பெயரில் குர்ஆனில் அடிக்கும் கொள்ளயோ குடும்பக் கொள்ளை ! தமிழகத்தில் யாரும் வைக்காத விலை வைத்து குர்ஆனை 300 ரூபாய்க்கு விற்று வருடத்திற்கு 10,000 குர்ஆன் மற்ற வியாபாரங்களை எல்லாம் பார்த்து வாங்குங்கள் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகி என்பதற்காக வாங்கி விடாதீர்கள். என்று விளம்பரம் செய்யும் இவர்கள் மற்ற தர்ஜமாக்களை விட இவர் தர்ஜமாவின் தரம் குறைந்து இருக்கலாம் என விளம்பரம் செய்யாதது ஏன்? மற்ற வியாபாரங்களை பற்றி வந்த புகார்களை விட இவரது குர்ஆன் விலை குறித்து வந்த புகார் அதிகமல்லவா ! மற்ற வியாபாரத்தில் நடந்த தவறுகள் குறித்து வந்த புகாரைவிட தர்ஜமா தவறுகள் குறித்து உலக முழுவதும் உள்ள மார்க்க அறிஞர்களிடத்தில் இருந்து புகார் அதிகமல்லவா. இதைபற்றிக்கேட்டால் பிர்தவ்ஸியை வைத்து கையை மடக்கி டிவியில் விளக்கம் வேறு ! உயர்தர பிரிண்டிங், உயர்தர பைண்டிங், என்று சப்பைக்கட்டு அதுவும் ஜமாஅத் காசை பயன்படுத்தி மக்கள் பயான் பார்க்கும் நேரத்தில். ரஹ்மத் டிரஸ்ட் புகாரி தமிழாக்கம் எவ்வளவு தெரியுமா? என்று வியாக்யானம் பேசுகின்றனர். ரஹ்மத் டிரஸ்ட் உண்மையில் பெரும் பணத்தை செலவழித்து டிரஸ்ட் வைத்து, அலுவலகம் வைத்து,மொழிபெயர்ப்பு குழு அமர்த்தி, அதில் பல மவ்லவிகளுக்கு சம்பளம் கொடுத்து, பணியார்கள் வைத்து, லட்சக்கணக்கில் விளம்பரம் செய்து தங்களின் தாய் தந்தையருக்கு நன்மை சேர்க்க பணத்தை இழக்கின்றனர். நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு பணம் சேர்க்க, ஜமாஅத் ஆலிம்களை இலவசமாக பயன்படுத்தி ஜமாஅத் பணியாளர்களையும், தாவா சென்டர் மாணவர்களையும் பயன்படுத்தியுள்ளீர்கள் யாருக்காவது சம்பளம் கொடுத்ததுண்டா ? சம்பளம் வேண்டாம் ! டிவியில் தினமும் வருகிறதே விளம்பரம் அதற்கு எப்போதாவது கொடுத்ததுண்டா ? சாதாரண கிளை நிகழ்ச்சி விளம்பரத்திற்கு நச்சரித்து காசு வாங்கும் தலைமை, குடும்ப கொள்ளை கூட்டத்திடம் காசு வாங்கிய துண்டா? 2005ல் இருந்து கணக்கு வழக்கை காட்ட துணிவுண்டா? ஜமாஅத்தின் அவ்வளவு வசதி வாய்ப்புகளையும் பயன்படுத்தி சுரண்டும் நீங்கள் ரஹ்மத் டிரஸ்ட்க்கு ஒப்பிட தகுதி உண்டா? இதில் மற்றவர்களை வழிகேட்டில் உள்ளவர் என சொல்கின்றீர்கள். கோவை குர்ஆன் அறக்கட்டளை 45,000 குர்ஆனை இதுவரை முஸ்லிம்மல்லாத நபர்களுக்கு இலவசமாக கொடுத்துள்ளது. ஆறே மாதத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் 5000 குர்ஆனை மாற்றுமதத்தவருக்கு இலவசமாக வழங்கியுள்ளது. தமிழகத்தின் பெரிய ஜமாஅத் என மார்தட்டும் நீங்கள் எத்தனை குர்ஆனை இலவசமாக கொடுத்துள்ளீர்கள் ? 50,000 குர்ஆனை இலவசமாக கொடுத்தவர்கள் வழிகேடர்கள். 50,000 குர்ஆனை ரூ.300க்கு விற்று லாபம் சம்பாதிக்கும் இவர்கள் நேர்வழி பெற்றவர்களா? சிந்திக்க வேண்டாமா !
மைத்துனர்கள் கதை இதுவென்றால் மகன் கதை அதைவிட மோசம் ஒரு பெண்ணை காதலித்து அவளோடு கலந்துறவாடி, இவரை நம்பி இஸ்லாத்தை ஏற்ற பெண்னை அவளது தந்தையோடு ஜென்டில்மேன் அக்ரிமென்ட் போட்டு துரத்தியவர் அப்படிப்பட்ட மகனுக்கு ரிக்கார்டிங், எடிட்டிங் என ஜமாஅத்தை வைத்து சம்பாத்தியம். ரீசார்ஜ் கூட இவரது மூன் கடையில் தான். மாநில நிர்வாகிகளுக்கு ! மாதம் ஒன்றுக்கு எடிட்டிங் வகையில் இருந்த குடும்பத்திற்கு 30,000 போய்ச் சேருகிறது. சிடி போட்டு பாக்கர் சம்பாதித்தார் என குற்றம் சாட்டும் ஹாமிம் இப்ராஹிக்கு ரிக்கார்டிங்போட்ட குடும்பம் நினைவுக்கு வராதது ஏனோ ? இப்போது புதிய கடையில் வாடிக்கையாளரை கவர தந்தையே கடையில் நின்று வியாபாரம் செய்து கொண்டுள்ளார். (எதிர் கடைகாரர் இவர் ஏன் எந்த வக்துக்கும் தொழபோகவில்லை என நம்மிடம் கேட்கிறார்.)
ஆக மற்றவர்கள்ளை எல்லாம் “இப்ராஹிம் நபி வழியில் குருதிச் சொந்தங்களை புறக்கணிப்போம் ! எனச் சொல்லிவிட்டு இவர் மட்டும் தொழுகையில்லாத, ஒழுக்கமில்லாத, ஏன் கொள்கையில்லாத, சொந்தங்களை புறக்கணிக்காமல் இருப்பதோடு, அப்பாவி தவ்ஹீத் கொள்கைச் சொந்தங்களை கொள்ளை அடித்து குடும்ப ஆட்சி நடத்துகிறார். ஏஜென்ஸி, சிடி, புக்ஸ், குர்ஆன், எடிட்டிங் ரிக்கார்டிங், ரீசார்ஜ் பிரிண்டிங்க ஏகத்துவ சகோதர்களிடம் சுரண்டி கொழுக்கிறார். கருணாநிதியை விட கேவலமாக தன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் வைத்து ஜமாஅத்தை உறிஞ்சுகிறார். அப்பாவி தவ்ஹீத் சகோதரன் பார்த்தால் அண்ணன் சிடி, படித்தால் அண்ணன் புக், மாட்டினால் சன் காலண்டர், நோட்டிஸ் போட்டால் சன் பிரிண்டிங், மிட்டாய் வாங்கினால் மூன், ரீசார்ஜ் பண்ணினால் மூன் என கொண்டு போய் கொட்டி விட்டு இன்னும் நடுத்தெருவில் நிற்கிறான்! இதற்காகவா ஏகத்துவம் பேசினோம். இதற்காகவா தவ்ஹீத்தை வளர்த்தோம் ! இவருக்காகவா குடும்பத்தை பகைத்தோம். ஊரை பகைத்தோம். உறவை வெறுத்தோம். நினைத்தால் வேதனையாக இருக்கிறது. இது கேவலமாக இல்லையா அடிவாங்கி உதைவாங்கிய தியாகம் செய்தது எல்லாம் ஒரு குடும்பம் பிழைக்கவா ? வேறுயாராவது இப்படி இந்த ஜமாஅத்தில் குடும்பத்தோடு பிழைக்க ஜமாஅத் அனுமதிக்குமா? ஜமாஅத் நிர்வாகிகள் உண்மையிலேயே நியாய வான்களாக இருந்தால் இது குறித்து நடவடிக்கை எடுக்கட்டும் ! இல்லையேல் பரிசுத்தமான ஜமாஅத், என்றெல்லாம் கூறுவதை விட்டு பிஜே அன்டு கோ என பேரை மாற்றட்டும்.
பொய்யனுக்கு திராணி இல்லாவிட்டால் பொய்யன் சார்பில் அவரது கும்பலின் முக்கியஸ்தர்களும் ஆதாரங்களுடன் நிரூபிக்க முன்வரலாம்