அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! இந்த முக நூலில் பலர் பல வேஷம் போட்டு தவ்ஹீத் வாதிகளை எதிர்த்தார்கள் .அசிங்கமா திட்டினார்கள் சிலர் விமர்சனம் பண்ணினார்கள் தரீக்கா வழிகேடர்கள் பண்ணின தொல்லைகள் ஏராளம். தவ்ஹீத் வாதிகளின் புகைப்படங்களையும் பெண்களின் செக்ஸ் போட்டகளையும் சமந்தபடுத்தி பொய்யான பீதியையும் கிளப்பி விட்டு பார்த்தார்கள் நம் தவ்ஹீத் வாதிகள் கொஞ்சம் கூட அசராமல் அவர்களின் முகத்திரைகளை கிழித்தார்கள் அவர்களின் கொக்கரிப்பு நம் தவ்ஹீத்வாதிகளிடம் எடுபடாமல் போயிட்டது. இன்னும் பலர் தவ்ஹீத் வளர்ச்சி பிடிக்காமல் தவ்ஹீத் வாதிகளின் மீது சேற்றை வாரி பூசினார்கள்.அண்ணன் பீஜே அவர்கள் மீது சுமத்திய ஆதாரமில்லாத குற்றங்கள் தவிடி பொடியா ஆனது.பலர் தவ்ஹீதை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் வாதிகளின் முகவரிலும் வந்து குழப்பினார்கள் அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட பட்டது.சிலர் நடு நிலைவாதி என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீத் வாதிகளை கண்டித்தார்கள்.அதற்கும் நம் தவ்ஹீத் வாதிகள் அஞ்சாமல் அவர்கள் யார் என்பதை இந்த முக நூலில் அடையாளம் காட்டினார்கள்.பலர் நான் எந்த இயக்கத்தை சாராதவன் என்றும் நாம் ஒற்றுமையா இருக்கணும் என்றும் போராடினார்கள் அவர்களும் ஒரு சாரார் என்பதை இந்த தவ்ஹீத் வாதிகள் நிருபித்தார்கள்.அவர்களின் பொய்யான முகத்திரையும் கிழிக்கப்பட்டது. பொய்யான முக மூடி போட்டுக்கிட்டு நாங்கள் நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் பலர் தமுமுகவை சேர்ந்தவர்கள்.என்பதை வெட்கத்துடன் சொல்லிகொள்கிறேன். தவ்ஹீத் வாதிகளை எதிர்க்க கூடியவர்கள் பலர் இந்த முக நூலில் காணமல் போனார்கள்.அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! எதிர்ப்பு இருந்தால்தான் ஏகொத்துவம் (தவ்ஹீத்) வளரும்! தவ்ஹீத் மீண்டும் மீண்டும் வீறு நடை போடும்! இன்ஷா அல்லாஹ்!

ஞாயிறு, 29 மே, 2011

வேலூரில் பொய்யன் ஜமாத் செய்த வசூல் மோசடி ஆதாரத்துடன் அம்பலம்


பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்:
பொதுமக்களின் நம்பிக்கையையும் நாணயத்தையும் பெற்று மக்களின் ஆதரவுடன் இறைவனின் பேரருளுடனும் இயங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திலிருந்து பாலியல் மற்றும் பணமோசடி காரணமாக குற்றச்சாட்டு நிறுபிக்கப்பட்டு இங்கிருந்து தூக்கி வீசப்பட்டவர்கள் சும்மா இருக்க முடியாமல் தங்கள் மோசடிகளை தொடர்ந்து செய்வதற்காக மட்டும் இந்திய தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரில் ஜமாத்தாக பதிவுசெய்யாமல் டிரஸ்டியாக பதிவு செய்து கேட்பவர்களிடமெல்லாம் நாங்களும் தவ்ஹீத் ஜமாத் தான் என்று சொல்லி வெளிநாடுகளில் பித்ரா காசுகளை சுருட்டியது இந்தக்கூட்டம்.
ததஜவினர் இரத்த தானம் செய்யும் இடங்களில் தங்களின் நோட்டீஸூகளைக் கொடுத்து நாங்கள் தான் தவ்ஹீத் ஜமாத் என்று சொல்லி மக்களை ஏமாற்ற நினைத்தது. இதனால் பல ஊர்களிலும், வெளி நாடுகளிலும் இருந்து இவர்கள் மீது புகார்கள் வரவே இந்திய தவ்ஹீத் ஜமாத் என்ற பெயர் பதிவு செய்யப்படாமல் இருக்கவே அந்தப் பெயர் சங்கமாக பதிவு செய்யப்பட்டு தமிழகம் மற்றும் வளைகுடா நாடுகளில் பதிவுசெய்யப்பட்ட இந்திய தவ்ஹீத் ஜமாத் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.
நாங்கள் தான் உண்மையான இந்திய தவ்ஹீத் ஜமாத் என சொல்லி வந்த இந்த பொய்யர்கள் கூட்டத்திற்கு எதிராக இனி அவர்கள் யாரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கான செய்தி.
வழக்கின் காரணமாக மக்களுக்கு உண்மை தெரிந்து போனதும், இனி நாங்கள் இந்திய முஸ்லிம் தவ்ஹீத் ஜமாத் என்று செயல்படுவோம் என்று சொன்னார்கள். அதை சில நாட்கள் அமுல்படுத்தினார்கள். ஆனால் அதன்மூலம் தங்களுக்கு பைசா பேராது எனத் தெரிந்தும் அதை நைசாக மாற்றிக் கொண்டு மீண்டும் இந்திய தவ்ஹீத் ஜமாத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வண்ணம் பழையபடி இந்திய தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரை பயன்படுத்தத் துவங்கிவிட்டார்கள்.
ஆனால் டிரஸ்டியாக பதிவு செய்துவிட்டு கள்ளத்தனமாக சங்க பைலாவை வைத்து காலத்தைக் கடத்தி வந்தார்கள் இவர்கள். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அதிகாரப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்ட பிறகு தங்களிடம் இருந்த கள்ள பைலாவை நைசாக தூக்கி விட்டார்கள். இன்றுவரை கள்ளத்தனமான இந்திய தவ்ஹீத் ஜமாத்திற்கு பைலா இல்லை. தேவைப்படுபவர்கள் சோதனை செய்து கொள்ளலாம்.
தவ்ஹீத் ஜமாத் பெயரைப் பயன்படுத்தி பல மோசடிகளை செய்துவந்த இந்தக் கள்ளக்கூட்டம், சமீபத்தில் வேலூரில் செய்த ஒரு மோசடி பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூரில் நடந்த இந்த மோசடி சம்பந்தமாக 3 மாதங்களுக்கு முன்பே நமக்கு தகவல் கிடைத்தது. ஆனால் வசூல் செய்தது தான் மோசடி மற்றபடி அவர்களின் நோக்கம் நல்லதாக இருக்கும், எனவே கொஞ்சம் பொருத்திருந்து பார்ப்போம் என நமது செய்தியாளர்கள் குழு காத்திருக்க ஆரம்பித்தது.
அதாவது இவர்களின் மோசடியின் சாராம்சத்தை கீழ்க்கண்ட நோட்டீஸில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அதாவது வக்ப் நில மீட்பு என்பது தான்
இவர்களின் நோக்கம்.

இதற்காக அவர்கள் அடித்த நன்கொடை ரசீது இது தான்.
இந்த ரசீதைப் பயன்படுத்தி அப்பாவி பொதுமக்களிடம் 1000 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை வசூல் ஜரூராக நடந்து முடிந்தது. நாம் கேட்பதெல்லாம் வேலூரில் துவங்கிய இந்த வக்ப் நில மீட்புக் குழு இப்போது எங்கே இருக்கிறது? அப்படி ஒரு குழு இருக்கிறதா இல்லையா? இந்த மோசடி தலைமையில் இருந்து துவங்கியது உறுதியாகிறது. எனவே இந்த மோசடி வேலூரில் மட்டும் நடந்ததா? அல்லது குவைத் உள்ளிட்ட எல்லா நாடுகளிலும் நடந்ததா? நாம் 3 மாதம் காத்திருந்தது இவர்கள் அந்த வக்ப் நில மீட்பு குழு சம்பந்தமாக ஏதாவது செய்திகள் வெளியிடுவார்கள் என்று தான். ஆனால் இன்று வரை இப்படி ஒரு குழு இருப்பதாக தகவலே இல்லை,
அப்படியானால் மக்களிடம் செய்த வசூல் பணம் எவ்வளவு? அது எங்கே? என எந்தக் கேள்விகளுக்கும் இன்றுவரை பதில் இல்லை.
இவர்களின் கள்ளத்தனம் குறித்து அன்றைக்கே காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வ இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. புகார் அளிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை வக்ப் சொத்து மீட்புக்குழு சம்பந்தமாக எந்தவிதத் தகவலும் இல்லை. இதுபோன்ற பலமோசடிகளை பள்ளிவாசல் பெயரில் இவர்கள் அறங்கேற்றி வருகிறார்கள் என்பது தான் உண்மை.
ஆக இதன் மூலம் நாம் விடுக்கும் எச்சரிக்கை என்னவென்றால் இவர்கள் செய்யும் கள்ள மோசடி வேலைகளுக்கு இஸ்லாம், பள்ளிவாசல் என எதை வேண்டுமானாலும் பயன்படுத்துவார்கள் என்பது தான் நிதர்சனம். மக்களே! தாங்கள் தான் நியாயவான்கள் என்பது போல இவர்கள் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லை. இதை ஒரு எச்சரிக்கையாகக் கொண்டு செயல்படுங்கள். இனி இவர்கள் எதற்காவது காசு கேட்டால் உடனடியாக அவர்களைப் பற்றி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். அது மட்டுமின்றி இந்த வேலூர் விவகாரம் சம்பந்தமாக அவர்களிடம் கேள்வி கேளுங்கள்.
இன்னும் பதில்வராத கேள்விகள்:
1) காரைக்குடி விவகாரத்தில் நாங்கள் தான் யோக்கியர்கள் என வரிந்து கட்டியவர்கள் அதற்கு இன்றுவரை பதில் சொல்லவில்லை.
2) அட்சய திருதியை சம்பந்தமாக தலையங்கம் எழுதியவர்கள், பாத்திமா ஜூவல்லர்ஸூக்கு அட்சய திருதியை சம்பந்தமாக விளம்பரம் கொடுத்தது சரியா எனக் கேட்டோம். அதற்கும் பதில் இல்லை.
3) பித்னாக்களின் தலைவன் செங்கி எழுதிய கடிதம் சம்பந்தமாக இன்றுவரை பதில் இல்லை
4) KNTJ உதயம் என தலைப்புச்செய்தி போட்டவர்கள் அது சம்பந்தமாக வாய்திறக்கவில்லை
5) அதிமுக பதவியேற்பு விழாவிற்கு தங்களுக்கு அழைப்பிதழ் வந்தது என்று சொன்னார்கள். நாம் அதெல்லாம் பொய் என நிறுபித்த பிறகு, அழைப்பு தொலைபேசியில் வந்தது என்று சொன்னார்கள். ஆனால் தொலைப்பேசியில் யாருக்கும் அழைப்பு வராது என ஆதாரத்தோடு கேள்வி கேட்டோம். அதற்கும் பதில் இல்லை.
6) உணர்வு பத்திரிகையில் இருந்து காப்பியடித்த செய்தியைப் போட்டோம். அதற்கும் பதில் இல்லை.
7) இப்போது வேலூர் மோசடி சம்பந்தமாக செய்தி தந்திருக்கிறோம். இதற்கும் பதில் வேண்டும்.
எனவே மக்களே! தயவுசெய்து இதற்கெல்லாம் என்ன பதில் என கேளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக