கடந்த சில வாரங்களுக்கு முன்பு உணர்வு பத்திரிகையில் ஜாக் சம்பந்தமான ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அதாவது இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் இருக்கும் ஜாக் கிளையில் இருந்து காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் ராமவன்னியிடம் தவ்ஹீத் ஜமாஅத் பெயரைப் பயன்படுத்தி,
பள்ளிவாசல் கட்டுவதற்கு பணம் கேட்டு மாட்டிக்கொண்ட விசயம் அனைத்துப் பகுதிகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தின் சில பகுதிகளில் ஜாக் சார்பாக உணர்வு மற்றும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக மிகக் கீழ்த்தரமான வாசகங்களை கொண்டு நோட்டீஸ்கள் வெளியாகின. சில பகுதிகளில் உணர்வு பத்திரிகையை விற்காதே! என கடைக்காரர்கள் மிரட்டப்பட்டார்கள். இந்தச் செய்தி வெளியாகி விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தினர் ஜாக் சகோதரர்கள்.
ஒரு சில இடங்களில் ஜாக் வெளியிட்டிருந்த நோட்டீஸ்களில் பாம்பனில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை, தவ்ஹீத் ஜமாஅத் எங்கள் மீது அபாண்டம் சுமத்துகிறது என்றும், கோவையில் வெளியிடப்பட்டிருந்த நோட்டீஸில் மட்டும், அந்த சம்பவம் உண்மைதான், ஆனால் அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரைப் பயன்படுத்தி காசு கேட்கவில்லை; ஜாக், தங்களுடைய பெயரில் தான் ராமச்சந்திர ராமவன்னியைத் தொடர்பு கொண்டார்கள்., அவர் மாற்று மத சகோதரர் என்பதால் தான் ஜாக்கிற்கும், தவ்ஹீத் ஜமாத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை என சொல்லி இருந்தார்கள்.
இவர்களால் தமிழகத்தின் சில பகுதிகளில் உணர்வுக்கு எதிராக வெளியிடப்பட்ட நோட்டீஸ்களில் மிக முக்கியமாகக் குறிப்பிட்டிருந்த ஒரு விசயம், அரசியலில் அன்றைக்கு என்ன நிலைப்பாடு இருந்ததோ, அதே நிலைப்பாடு தான் இன்றைக்கும் இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தனர். அதாவது அரசியலை சார்ந்திருப்பதே ஷிர்க், அரசியல் என்பது நாற்றமெடுக்கும் சாக்கடை, நாங்களெல்லாம் வாசமடிக்கும் பூக்கடை என பக்கம் பக்கமாக அவர்களின் இதழ்களில் எழுதிவந்த அவர்களின் நிலைப்பாடுகள், இன்றைக்கும் அப்படியே இருக்கின்றன என்பது தான் அவர்கள் வெளியிட்ட நோட்டீஸ்களில் குறிப்பிட்டிருந்த செய்தியின் சாராம்சம்..
அரசியல் இருக்கட்டும் . முதலில் கொள்கையில் சரியாக இருக்கிறதா ஜாக்? ஜம்மியத்து அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ் என்பது தான் இவர்கள் இயக்கத்தின் விரிவாக்கம். அதாவது குர்ஆனையும், ஹதீஸையும் மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையில் இருந்த ஜாக், இப்போது சகாபாக்களையும் பின்பற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு மாறிவிட்டது. அதாவது ஜாக், இப்போது ஜாக்ஸ் ஆக மாறிவிட்டது. கொள்கையில் ஜாக்ஸ் ஆக மாறிவிட்ட ஜாக், அரசியல் நிலைப்பாட்டில், காலிலிருந்து கழற்றிப்போட்ட நாற்றமெடுத்த சாக்ஸ் ஆக மாறிப்போயிருக்கிறது.
அரசியலே எங்களுக்கு ஆகாது, அது ஷிர்க் என்று சொல்லிக்கொள்ளும் ஜாக்ஸ் இயக்கத்தினர், மேலப்பாளையத்தில் என்ன செய்தார்கள் தெரியுமா? 2006 ஆம் மேலப்பாளையத்தில் திமுக சார்பில் வேட்பாளராக மைதீன்கான் நிறுத்தப்படுகிறார். ஆனால் அரசியலே இணைவைப்பு என்று சொன்ன ஜாக்ஸ் கூட்டத்தினர், அவரை எதிர்த்து, அவர்களின் பிரதான அபிமானியான பசுலுல் இலாஹியை வேட்பாளராக நியமிக்க வேண்டும் என, நடுரோட்டில் நின்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இது இவர்களின் அரசியல் நிலைப்பாட்டு பித்தலாட்டத்திற்கு ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.

2006 ஆம் ஆண்டு, தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டுக்காக கமிஷன் அமைத்த நேரத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அதிமுகவை ஆதரித்தது. இந்த நிலையில் கோட்டாறு அஷ்ரப் பள்ளியில் ஜூமுஆ உரை நிகழ்த்திய ஜாக்ஸ்’சின் துணை தலைவர் செய்யது அலி பைஜி, டிஎன்டிஜேவை மிக மோசமாக விமர்சனம் செய்தார். தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் சிலர், கொடி பிடிக்கிறார்கள், அரசியல்வாதிகளின் பின்னால் செல்கிறார்கள், தவ்ஹீதை விட்டு விட்டு ஷிர்க்வாதிகளுடன் இணைந்து செயல்படுகிறார்கள். நம் ஜாக் அமைப்பினர் இது போன்ற எந்த செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது, பிரச்சாரம் செய்யக்கூடாது, அரசியல் என்ற நவீன இணைவைப்பிலிருந்தும், இதுபோன்ற வழிகேட்டிலிருந்தும் அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும் என உரை நிகழ்த்தினார்.
அந்த ஜூமுஆவில் கலந்து கொண்ட டிஎன்டிஜே சகோதரர் ஒருவர், ஜூமுஆ முடிந்த பின் அவரிடம், மேலப்பாளையத்தில் திமுக வேட்டபாளராக பஸ்லுல் இலாஹியை நிறுத்தக் கோரி ஜாக்ஸ் நடத்திய போராட்டத்தின் பத்திரிகை செய்தியை அவரிடம் காண்பித்து, அரசியலே ஷிர்க் என்று சொல்கிறீர்களே! அப்படியானால் இது என்ன? என்று கேட்க, அதற்கு எவ்விதமான பதிலும் சொல்லாமல் வெளியேறிவிட்டார் செய்யது அலி. டிஎன்டிஜே, ஆதரவு பிரச்சாரம் மட்டும் தான் செய்யும், ஆனால் ஜாக்ஸினர் அரசியலில் போட்டியிட தங்கள் அபிமானியையே வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று போராட்டமே நடத்துகின்றர்.
டிஎன்டிஜே, அரசியலை ஷிர்க் என்று சொல்லவில்லை, ஆனால் இன்றைய சூழ்நிலையில் அரசியலில் போட்டியிட்டால் நம் ஈமானைப் பறிகொடுத்து, ஏகத்துவத்தைப் பலி கொடுத்து விட்டுத்தான் களம் காணமுடியும் என்று தான் இன்றுவரை சொல்கிறது. ஆனால் அரசியலை ஷிர்க் என்று சொல்லும் ஜாக்ஸ் அமைப்பினர் படுகேவலமான செயல்களில் இறங்கிய ஆதாரங்களை படங்களில் காணலாம். மேலப்பாளையத்தில் ஒரு பேச்சு, மேட்டுப்பாளையத்தில் ஒரு பேச்சு, திருச்சிக்கு ஒரு நிலைப்பாடு, திருநெல்வேலிக்கு ஒரு நிலைப்பாடு, புதுப்பேட்டைக்கு ஒரு கொள்கை, புதுக்கோட்டைக்கு ஒரு கொள்கை என தாங்களும் குழம்பி, மக்களையும் குழப்பும் கொள்கையை வைத்திருப்பவர்கள் யார் என்று மக்களே புரிந்து கொள்ளட்டும்.
மாற்று மதத்தவரை ஆதரிப்பது ஹராம் என்று சொல்லக்கூடிய இந்த உத்தம இயக்கத்தின் மாநில செயலாளர் கோவை அய்யூப், கடையநல்லூரில் தமுமுகவுடன் சேர்ந்து கொண்டு பீட்டர் அல்போன்ஸூக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த கொடுமையும் இதே தமிழகத்தில் தான் நடந்தது. இவ்வளவு கேவலமான நிலைப்பாடுகளை ஊருக்கு ஊர் வைத்திருக்கும் இந்த ஜாக்ஸ் அமைப்பினர் டிஎன்டிஜேவின் அரசியல் நிலைப்பாடுகளை இழிவுபடுத்துவதாக நினைத்து அவர்களே இழிவுபட்டு நிற்கின்றனர்.

திருட்டு வசூல் முயற்சி நடந்த பாம்பன் கிளையில் இருந்து புயல் கிளம்பும் என்று எதிர்பார்த்தால் , புதுமடம் தவிர்த்து மற்ற பகுதிகளில் தான் இந்த விவகாரம் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. பாம்பன் ஜாக்ஸ் கிளையின் நிர்வாகி ஹபிபுல்லா தான் இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராமவன்னியிடம் காசு கேட்டவர். கொள்கையையே இடத்திற்கு ஒன்றாகச் சொல்லக்கூடியவர்கள், இந்த பாம்பன் சம்பவத்தையும் இரண்டு விதமாகத்தான் சொல்கிறார்கள். இது போன்று ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்று ஒரு பக்கம் சொல்கிறார்கள்., ஆனால் மறுபக்கம், ஜாக்ஸ் நிர்வாகி, காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் ராமவன்னியைத் தொடர்பு கொண்டு ஜாக்ஸ் பெயரில் தான் பணம் கேட்டார் என்றும் சொல்லிவருகிறார்கள். சரி அப்படியே ஜாக்ஸ் பெயரைப் பயன்படுத்தி, அசன் அலியிடம் பணம் கேட்பது மட்டும் என்ன நியாயம்? அரசியல் ஷிர்க் என்று பிரச்சாரம் செய்பவர்கள், அந்த அரசியல்வாதிகளிடம் பிச்சையெடுப்பது மட்டும் சரியான செயலா? இவர்கள் நடந்து முடிந்தத் தேர்தலில் இராமநாதபுரம் பகுதியில், ஜூமுஆ மேடைகளில் ஜவாஹிருல்லாவை ஆதரித்தும், டிஎன்டிஜேவை கடும் சொற்களைப் பயன்படுத்தி எதிர்த்தும் பிரச்சாரம் செய்தார்களா, இல்லையா?
டிஎன்டிஜேவுக்கு எதிராக நிலைப்பாடு எடுப்பதென்பது இவர்களின் சாதரண நடைமுறையே! 2006 தேர்தலில் அதிமுகவை டிஎன்டிஜே ஆதரிப்பதால் அதற்கு எதிராக முடிவெடுத்து திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு கடையநல்லூரில் ஜாக்ஸின் மாநிலச் செயலாளர் கோவை அய்யூப் பிரச்சாரம் செய்தார்.
டிஎன்டிஜே எடுக்கும் மார்க்க முடிவுகளுக்கே, அதற்கு எதிரான முடிவை எடுக்கும் இவர்கள் அரசியல் நிலைப்பாட்டில் மட்டும் மாற்றாமலா இருப்பார்கள்? ரமலான் காலங்களில் சஹர் நேரத் துவக்கத்திற்கு ஒரு பாங்கு உண்டு என்று ஹதீஸின் அடிப்படையில் டிஎன்டிஜே அறிவிக்கிறது. அதற்கு எதிராக இவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? ரசூலுல்லாஹ் காலத்தில் அலாரம் என்ற கடிகாரம் கிடையாது, அதனால் தான் அவர்கள் அன்றைக்கு சஹர் பாங்கு சொன்னார்கள் என்று சொல்லி, நபிவழியையே கேவலப்படுத்திய இவர்கள், டிஎன்டிஜேவுக்கு எதிராக இன்றைக்கு எடுக்கும் அரசியல் நிலைப்பாடுகளால் இவர்கள் தான் கேவலப்பட்டு நிற்கின்றார்கள்.
இன்னும் இவர்களின் கொள்கைகள் கொடிகட்டிப்பறக்கும் விசயங்களாக, குமரி மாவட்டத்தில் ராஜீவ்காந்திக்கு சிலை வைக்கப் போராடிய ஜாக்கின் நிர்வாகி மலுக்கு முதலி, மதுரை தெற்குவாசலில் நடந்த முஹைதீன் அப்துல் காதர் ஜெய்லானியின் கந்தூரி திருவிழாவிற்கு திருவுளச்சீட்டு எழுதிக் கொடுக்க, நிர்வாகக்கமிட்டியில் நியமிக்கப் பட்ட ஜாக்ஸ் அமைப்பின் நிர்வாகிகள் மேலத்தெரு அப்துல் கபூர் (எ) சிரீன், கீழத்தெரு இஸ்மாயில் என ஏகப்பட்ட பட்டியல்கள் நீளும். ஆனால் இதுவே போதுமென்று நினைக்கிறோம். ஜாக்ஸ் அமைப்பினர் தங்களின் கீழ்த்தரமான வேலைகளுக்கு ஆதாரங்களைக் கேட்டு தங்களுக்கு தாங்களே சேதாரங்களை உண்டாக்கிக் கொள்கிறார்கள் என்பது தான் நிதர்சனம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிலைப்பாடுகள், பொதுக்கூட்டங்கள், வாத பிரதிவாதங்கள், பேச்சுகள், எழுத்துக்கள் என அனைத்துமே வெளிப்படையானது. ரகசியமானது எதுவும் இல்லை. ஏதாவது மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் தலைமையின் சட்டையைப் பிடித்து உலுக்கக்கூடிய சிந்திக்கும் மக்களைக் கொண்ட இயக்கம். ஒரு சாதாரணத் தொண்டர் சுட்டிக்காட்டும் தவறை, அவர் தலைமை நிர்வாகியாக இருந்தாலும் திருத்திக் கொள்ளும் இயக்கம். தவறு செய்பவர் தலைவராக இருந்தாலும் சரி பொதுச்செயலாளராக இருந்தாலும் சரி அவரைத்தூக்கி எறியும் ஒரு மக்களின் இயக்கம்.
இதர்கு எடுத்துக்காட்டு கடந்த காலத்தில் பொறுப்பு வகித்த பொய்யர்களைத் தூக்கி எறிந்த்து தான். கொள்கை ரீதியாக பலரால் எதிர்க்கப்பட்டாலும் மற்ற முடிவுகளில் மக்களை வென்றெடுக்கும் இயக்கம். எவ்வளவு கூட்டம் வந்தாலும் தலைக்கணம் கொள்ளாத இயக்கம்.
இறைவனின் மாபெரும் கிருபையால் அவனது தூதர் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த ஏகத்துவத்துவச் சுடரை மட்டுமே ஏந்திவரும் இயக்கம். தொண்டர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் ஒரே இயக்கம். தலைவராக இருந்தாலும் அவர் தலைமைத் தொண்டன் என வைத்திருக்கும் இயக்கம் .
ஏகத்துவம் கொஞ்சம் சருக்கினாலும்,
பெரிய மக்கள் கூட்டம் தேவையில்லை,
கொஞ்சமாக கொள்கைக் கூட்டமே போதும் என உடைத்து வெளியேறும் இயக்கம். எல்லா புகழும் ஏகத்துவத்தின் எஜமானனுக்கே என எழுச்சிக் குரல் கொடுக்கும் இயக்கம். எந்த நேரத்திலும் தன் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அதிலே குளிர் காயும் இயக்கம் இதுவல்ல! ஏழைமக்களிடம் வசூல் செய்து ஏசிக் கார்களில் பவனி வரும் இயக்கம் இதுவல்ல! எனவே தேவையில்லாமல் சீண்டிப்பார்க்க வேண்டாம்.