அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! இந்த முக நூலில் பலர் பல வேஷம் போட்டு தவ்ஹீத் வாதிகளை எதிர்த்தார்கள் .அசிங்கமா திட்டினார்கள் சிலர் விமர்சனம் பண்ணினார்கள் தரீக்கா வழிகேடர்கள் பண்ணின தொல்லைகள் ஏராளம். தவ்ஹீத் வாதிகளின் புகைப்படங்களையும் பெண்களின் செக்ஸ் போட்டகளையும் சமந்தபடுத்தி பொய்யான பீதியையும் கிளப்பி விட்டு பார்த்தார்கள் நம் தவ்ஹீத் வாதிகள் கொஞ்சம் கூட அசராமல் அவர்களின் முகத்திரைகளை கிழித்தார்கள் அவர்களின் கொக்கரிப்பு நம் தவ்ஹீத்வாதிகளிடம் எடுபடாமல் போயிட்டது. இன்னும் பலர் தவ்ஹீத் வளர்ச்சி பிடிக்காமல் தவ்ஹீத் வாதிகளின் மீது சேற்றை வாரி பூசினார்கள்.அண்ணன் பீஜே அவர்கள் மீது சுமத்திய ஆதாரமில்லாத குற்றங்கள் தவிடி பொடியா ஆனது.பலர் தவ்ஹீதை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் வாதிகளின் முகவரிலும் வந்து குழப்பினார்கள் அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட பட்டது.சிலர் நடு நிலைவாதி என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீத் வாதிகளை கண்டித்தார்கள்.அதற்கும் நம் தவ்ஹீத் வாதிகள் அஞ்சாமல் அவர்கள் யார் என்பதை இந்த முக நூலில் அடையாளம் காட்டினார்கள்.பலர் நான் எந்த இயக்கத்தை சாராதவன் என்றும் நாம் ஒற்றுமையா இருக்கணும் என்றும் போராடினார்கள் அவர்களும் ஒரு சாரார் என்பதை இந்த தவ்ஹீத் வாதிகள் நிருபித்தார்கள்.அவர்களின் பொய்யான முகத்திரையும் கிழிக்கப்பட்டது. பொய்யான முக மூடி போட்டுக்கிட்டு நாங்கள் நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் பலர் தமுமுகவை சேர்ந்தவர்கள்.என்பதை வெட்கத்துடன் சொல்லிகொள்கிறேன். தவ்ஹீத் வாதிகளை எதிர்க்க கூடியவர்கள் பலர் இந்த முக நூலில் காணமல் போனார்கள்.அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! எதிர்ப்பு இருந்தால்தான் ஏகொத்துவம் (தவ்ஹீத்) வளரும்! தவ்ஹீத் மீண்டும் மீண்டும் வீறு நடை போடும்! இன்ஷா அல்லாஹ்!

திங்கள், 6 ஜூன், 2011

சட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம்

மமகட்சியின் இந்த அராஜகங்களுக்கு அதிமுக அரசின் ஆதரவு இருக்கிறதா? அல்லது அரசுக்குத் தெரியாமலேயே இவர்கள் ஆட்டம் போடுகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், 09/06/2011 வியாழக்கிழமை அன்று தமிழக சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது. அதற்காக மக்களை பெருந்திரளாக திரட்டும் பணியையும் முடுக்கியும் விட்டது. தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரங்களைக் கண்டு சுறுசுறுப்படைந்த காவல்துறை உயர் அதிகாரிகள் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை அழைத்து ”உணர்வு அலுவலகம் உங்களுடையது தான், 9 ஆம் தேதிக்குள் உங்கள் கையில் அந்த அலுவகம் ஒப்படைக்கப்படும்” என்று திட்டவட்டமாக உறுதியளித்தனர்.
அவர்களின் வாக்குறுதி நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாலும், அதிகாரிகள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதாலும் இந்த சட்டசபை முற்றுகைப் போராட்டம் 14 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பது என முடிவு செய்யப்பட்டள்ளது.
கயவர்களால் கள்ளத்தனமாக அபகரிக்கப்பட்ட உணர்வு அலுவலகத்தை 14 ஆம் தேதிக்குள் நம்மிடம் ஒப்படைக்காவிட்டால் 14 ஆம் தேதியன்று சட்டமன்றக்கூட்டம் நடக்குமேயானால் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்துவது என்றும், அதற்குள் சட்டமன்றக் கூட்டம் முடிக்கப்பட்டு விட்டால், அதே தேதியில் முதல்வர் வீடு முற்றுகைப் போராட்டத்தை நடத்துவது என்றும் முடிவு செய்து அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக