குழப்பம் விளைவித்தது யார்
சட்டப்படி பதிவு செய்யாமல் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரை நாம் பதிவு செய்ததை ஜீரணிக்க முடியாமல் பல விதமான அர்த்தமற்ற கேள்விகளை சிலர் எழுப்பி வருகின்றனர்.
ஒருவர் பயன்படுத்தி வரும் பெயரை மற்றவர் பதிவு செய்வது நாணயமான நடவடிக்கையா? என்பது முக்கியமான கேள்வியாக முன் வைக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் பணி புரியும் சகோதரர்களுக்கு இதன் நியாயங்கள் முழுமையாகத் தெரிய வாய்ப்பு இல்லை.
தமிழகத்தில் நாம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் செயல்பட்டு வந்தாலும் அரசாங்கத்திலும், பத்திரிகை உலகிலும், பொது மக்கள் மத்தியிலும் வெறும் தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரால் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறியப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்று பெயர் வைத்தால் தவ்ஹீத் ஜமாஅத் என்று அறிவிப்பு செய்யலாம். அதன் ஆதாயத்தை அடையலாம் என்று திட்டமிட்டு குழப்பம் செய்வதற்காகவே இப்படி ஒரு செயலைச் செய்தனர்.
குழப்பம் விளைவிக்கலாமா என்று இப்போது கேட்கும் யாரும் இதை பாக்கரிடம் கேட்கவில்லை.
பத்திரிகைகளில் தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இவர்கள் விடும் அறிக்கைகள் தவ்ஹீத் ஜமாஅத் அறிக்கை என்ற பெயரில் வருகிறது. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அறிக்கை என்ற எண்ணத்தில் தான் அதை பத்திரிகைகள் வெளியிடுகின்றனர். நம்முடைய கொள்கைக்கு மாற்றமான ஒன்று நம் பெயரில் வருவது குழப்பம் இல்லையா?
சிலை திறப்பு விழாவில் தவ்ஹீத் ஜமாஅத் மானிலத் தலைவர் கலந்து கொண்டார் என்று செய்தி வரும் போது இதைக் கடுமையாக வெறுக்கும் நாம் அதைச் சுமக்கும் நிலையை ஏற்ப்டுத்துவது குழப்பம் இல்லையா?
அன்னியப் பெண்ணுடன் பயணம் செய்வது தப்பா என்று தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் கொடுத்த ஃப்தவா நம்மை பாதிக்குமா இல்லையா?
சட்ட மன்ற திறப்பு விழாவில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று உளவுத்துறை நம்மிடம் கேட்டனர். நாம் இது போன்ற நிகழ்ச்சிகளில் கல்ந்து கொள்வதில்லை என்று நாம் பதிலளித்தோம். அப்படியானால் அழைப்பிதழை ஏன் கேட்டு வாங்கினீர்கள் என்று அவர்கள் நம்மிடம் கேட்ட போது தான் நம்முடைய பெயரைப் பயன்படுத்தி அழைப்பிதழைக் கேட்டு வாங்கியுள்ளனர் என்பது தெரிய வந்த்து.
இரத்த தானம் செய்யும் போது ஒவ்வொருவருக்கும் இரத்த தானம் செய்த அமைப்பின் பெயர் பதிவு செய்யப்படும். நாம் செய்த இரத்த தான தகவலை திரட்டி அதை தன் பெயரில் பதிவு செய்த மோசடி செய்தார்களே இது குழப்பம் இல்லையா?
இப்படி நாங்கள் நாள் தோறும் இந்தக் கேடுகெட்டவர்களால் ஏற்படுத்தப்பட்ட குழப்பம் கொஞ்சம் அல்ல.
ஷிர்க்கான செயல்களையும் தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் இவர்கள் அறிமுகம் செய்யும் நிலைக்கு வந்த போது தான் இவர்களுக்கு இவர்கள் பாணியிலேயே பதிலடி கொடுக்க திட்டமிட்டோம்.
அதன் அடிப்படையில் தான் எட்டு மாதத்துக்கு முன்பே நாம் பதிவு செய்து வைந்த்திருந்த இந்திய தவ்ஹீத் பெயரில் களம் இறங்கும் நிலை ஏற்பட்டது.
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது சந்தேகம் ஏற்படுத்தாத பெயரில் இவர்கள் செயல்பட்டால் அது பற்றி நமக்குக் கவலை இல்லை.
மார்க்க அடிப்படையில் எடுத்துக் கொண்டாலும் ஒன்றை சொந்தம் கொண்டாடுவது என்றால் அதற்கான முறையில் தான் சொந்தம் கொண்டாட வேண்டும்.
ஒரு சொத்து வாங்கினால் அதற்கான பணத்தைச் செலுத்தி பத்திரத்தில் எழுதி பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் யாரும் பயன் படுத்தாத இட்த்தில் குடிசை போடுவது தவறாகும்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்பது பதிவு செய்யப்படாத வரை அது அரசுக்கு உரியது. அதை உரிய முறைப்படி சொந்தம் கொண்டாடுவது என்றால் அதற்கான கட்டணத்தை அரசுக்குச் செலுத்தி விட்டு பதிவு செய்தால் தான் அதற்கு உரிமை கொண்டாட் முடியும். நாம் பணம் கொடுத்து ஹலாலான முறையில் அந்தப் பெயரை அரசிடமிருந்து வாங்கி விட்டோம். இவர்கள் அந்தப் பெயருக்கு இனி மேல் உரிமை கொண்டாடுவது இன்னொருவருக்கு உரியதை அபகரித்தார்கள் என்பது தான் அர்த்தம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக