தங்கள் முகத்திரையை தாங்களே கிழித்துக் காட்டிய பொய்யன் ஜமாஅத்
பாக்கரும் பதிவு செய்யப்படாத அவரது சங்கத்தைச் சேர்ந்தவர்களும் எவ்வளவு பெரிய எத்தர்கள் என்பதும் இன்னும் மக்களை ஏமாற்றுவதற்கு எத்தகைய தகிடு தத்தங்களையும் செய்யக் கூடியவர்கள் என்பதும் அல்லாஹ்வின் அருளால் அவர்கள் வாயாலே வெளிவந்து விட்டது. அல்ஹம்து லில்லாஹ்.
இவர்கள் வெளியிட்டுள்ள செய்தியைப் பாருங்கள்!
திட்டமிட்டு மக்களை இவர்கள் ஏமாற்றியுள்ளனர் என்பது உங்களுக்கே புரியும்.
பொய்யர் பதிவு செய்யப்படாத சங்கம் வெளியிட்டுள்ள செய்தி இது தான்.
இதஜவுக்கு எதிராக கலகம் செய்த பிஜெ கும்பலுக்கு நீதிமன்றம் தடை விதித்தது!
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்ஹம்துலில்லாஹ்..!! அல்ஹம்துலில்லாஹ்..!!
அல்லாஹு அக்பர்!!
ஏக இறைவனின் நம்பிக்கையும், பாதுகாப்பையும் பெற்றுள்ள நமக்கு, இந்த கண்ணியம் மிகுந்த நன்னாளில் அல்லாஹ் மிகுந்த வெற்றியினை தந்து உள்ளான். அல்ஹம்துலில்லாஹ்.
கடந்த 2 வருடமாக அல்லாஹ்வின் அருளை மட்டுமே நம்பி களம் இறங்கி, மாபெரும்அவதூறுகளை எல்லாம் தகர்த்து எறிந்து தமிழக முஸ்லிம்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தை கள்ளத்தனமாக அபரிக்க முயன்ற அநியாயக்காரன் பிஜெயின் அடவடித்தனத்திற்கு சென்னை 1வது சிவி்ல் நீதிமன்றம் முற்றுப் புள்ளி வைத்து விட்டது.
நீதிபதி ஆனந்தி அவர்கள் வழங்கிய தீர்ப்பில், ஜெய்னுல் ஆபிதீனோ, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் புதியதாக சோஷியல் ஆக்ட்டில் 2010இல் பதியப்பட்டுள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சங்கம் ஆகிய மூவரும் கடந்த 2009 ஆம் ஆண்டு ட்ரஸ்ட் ஆக்ட்டில் பதியப்பட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் (பதிவு எண் : 45/2009) எந்த செயல்பாட்டிலும் தலையிடக்கூடாது என தடை விதித்துள்ளது.
சதிக்காரர்களுக்கு எல்லாம் சதி செய்யும் வல்ல இறைவன் சதிக்காரன் பிஜெயின் சதிக்கு முற்றுப்புள்ளி வைத்தான். அல்ஹம்துலில்லாஹ்.
கடந்த நான்கைந்து தினங்களாக கடுமையான வேதனையில் சிக்கி தவித்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சொந்தகளின் உள்ளங்களில் அல்லாஹ் மகிழ்ச்சியினை ஏற்படுத்தி உள்ளான். எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே நன்றியினை உரித்தாகுகின்றோம்.
இந்த ஈனனில் செயலை வன்மையாக கண்டித்தும், மன ஆறுதலையும் நல்கிய நல்ல உள்ளங்கள் அத்தனைப் பேர்களுக்கும் காருண்யமிக்க ஏக இறைவன் இந்த தியாக திருநாளில் நல்லருள் புரியட்டும் என துஆச் செய்கின்றோம்.
வஸ்ஸலாம்.
ட்ரஸ்ட் சங்கம் வேறுபாடு
இந்தச் செய்திக்குள் அடங்கியுள்ள மோசடியை அம்பலப்படுத்துவதற்கு முன்னால் ஒரு அடிப்படையை நாம் தெளிவுபடுத்துகிறோம்.
மாநில அளவில் ஒரு சங்கத்தை பதிவு செய்து விட்டால் அந்தப் பெயரில் வேறு யாருக்கும் அந்தப் பெயர் வழங்கப்படாது. ஒரு பெயரில் ஒரு சங்கம் தான் இருக்க முடியும்.
ஆனால் ஒரு பெயரில் யாராவது சிலர் ட்ரஸ்ட் பதிவு செய்து கொண்டால் அதே பெயரில் இன்னும் எத்தனை பேர் வேண்டுமானாலும் ட்ரஸ்ட் அமைத்துக் கொள்ளலாம். ஏறக் குறைய இது தனி நபர்களின் பெயர்களைப் போன்றதாகும். அப்துல் காதர் என்று ஒருவர் தன் பெயரை கெஜட்டில் பதிவு செய்து கொண்டால் அவர் அப்துல் காதர் என்று சொல்லிக் கொள்ளலாமே தவிர இன்னும் ஆயிரம் பேர் அந்தப் பெயரைப் பதிவு செய்து கொள்வதை அவரால் தடுக்க முடியாது.
திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சி அல்லது சங்கத்தின் பெயரை வேறு யாருக்கும் கொடுக்க மாட்டார்கள்.
ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை ஒருவர் ட்ரஸ்டாக பதிவு செய்தால் சட்டத்தில் அது பதிவு செய்யப்படும்.
இது முதல் வித்தியாசம்.
ட்ரஸ்ட் என்பது குறிப்பிட்ட ட்ர்ஸ்டிகளைக் கொண்டு அமைக்கப்படும். பத்து பேர் அல்லது பதினைந்து பேர் கொண்ட ட்ரஸ்டை அமைத்துக் கொண்டால் அதற்கு அவர்கள் மட்டுமே உரிமை படைத்தவர்கள். ட்ரஸ்டுகளாக இல்லாதவர்கள் அதற்கு என்னதான் உதவி செய்தாலும் அந்த ட்ரஸ்டில் அவருக்கு எந்த உரிமையும் இல்லை. டரஸ்டிகளின் எண்ணிக்கையைக் கூட்டுவது என்றாலும் குறைப்பது என்றாலும் அந்தப் பேர் ஒன்று கூடி மெஜாரிட்டி அடிப்படையில் சிலரை சேர்க்கலாம். அல்லது நீக்கலாம். உறுப்பினர் சந்தா செலுத்தி யார் வேண்டுமானாலும் அதில் உறுப்பிணராக முடியாது. உறுப்பினர் அட்டை எல்லாம் கொடுக்க முடியாது.
கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தாலும் அது குறித்த முடிவை அந்தப் பத்து பேர் தான் எடுக்க முடியும். மற்ற யாரும் தலையிட முடியாது.
ட்ரஸ்ட் என்றால் ட்ரஸ்டிகள் மட்டுமே அதன் உறுப்பினர்கள். அதாவது உறுப்பினர்களும் நிர்வாகிகளும் அவர்கள் மட்டுமே.
ஆனால் சங்கத்தில் உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுபவர்கள் தான் நிர்வாகிகள். அதாவது நிர்வாகிகள் அல்லாத உறுப்பினர்கள் இருப்பார்கள். அவர்கள் தான் நிர்வாகிகளைத் தேர்வு செய்பவர்களாக இருப்பார்கள்.
உதாரணமாக ஒரு சங்கத்தில் தலைவராக இருப்பவர் பாலியல் குற்றம் செய்து விட்டார் என்றால் அவரை பொதுக் குழுவைக் கூட்டி நீக்க முடியும்.
ஆனால் ஒரு ட்ரஸ்டின் தலைவராக இருப்பவர் பாலியல் குற்றம் செய்து அவரை நீக்க மக்கள் விரும்பினால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. பத்து ட்ரஸ்டிகளில் ஆறு பேர் அவரை நீக்க முடியாது என்று கூறி விட்டால் அவரை யாராலும் நீக்க முடியாது.
சங்கத்துக்கு கிளை, மாவட்டம், மாநிலம் என்று பல மட்டங்கள் இருக்கும். ட்ரஸ்டுக்கு ஒரே மட்டம் தான் இருக்கும். அந்த பத்து பேருக்குள் அவர்கள் செயல்பட்டுக் கொள்ளலாம்.
இன்னும் பல வித்தியாசங்கள் உள்ளன. இப்போதைக்கு இது மட்டுமே போதும்
டர்ஸ்டாக பதிவு செய்து மக்களுக்கு செய்த துரோகம்
பதிவு செய்யப்படாத இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய வாசகத்தை கவனமாகப் பாருங்கள்.
அந்த வாசகம் இது தான்
நீதிபதி ஆனந்தி அவர்கள் வழங்கிய தீர்ப்பில், ஜெய்னுல் ஆபிதீனோ, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் புதியதாக சோஷியல் ஆக்ட்டில் 2010இல் பதியப்பட்டுள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சங்கம் ஆகிய மூவரும் கடந்த 2009 ஆம் ஆண்டு ட்ரஸ்ட் ஆக்ட்டில் பதியப்பட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் (பதிவு எண் : 45/2009) எந்த செயல்பாட்டிலும் தலையிடக்கூடாது என தடை விதித்ள்ளது.
மேற்கண்ட வாசகத்தில் இருந்து பாக்கர் தனது அமைப்பின் பெயரை ட்ரஸ்ட் என்ற வகையில் பதிவு செய்துள்ளார். 2009 ஆம் ஆண்டு 45 வதாக அவரது ட்ரஸ்ட் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் அதில் இருந்து தெரிகிறது. (45/2009 என்பதன் அர்த்தம் இது தான்)
மக்கள் திரண்டு தன்னை நீக்கி விடக்கூடாது என்பதற்காகவும், மக்கள் கணக்கு கேட்கக் கூடாது என்பதற்காகவும் ட்ரஸ்டாகப் பதிவு செய்துள்ளார். ஆனால் சங்கம் என்று மக்களை இது நாள் வரை ஏமாற்றி வந்துள்ளார். டரஸ்டாகத் தான் பதிவு செய்துள்ளேன் என்று அவர் இது நாள் வரை மக்களிடம் சொல்லவில்லை
ட்ரஸ்டாக இவர்கள் பதிவு செய்திருப்பதை அம்பலப்படுத்தும் நிலையை நாம் ஏற்படுத்தும் வரை அவர்கள் இதை மக்களிடம் கூறவில்லை. தங்கள் ட்ரஸ்டாக பதிவு செய்திருப்பதை மறைத்து சங்கம் என்று மக்களை நம்ப வைத்துள்ளார். வெளிப்படையாக சங்கம் போல் காட்டிக் கொண்டு மாவட்டம் கிளை என்று பொறுப்பாளர்களைப் போட்டுக் கொண்டு உள்ளூக்குள் ட்ரஸ்டாக வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது இதில் இருந்து தெரிகிறது.
அதாவது மாவட்டத் தலைவர் கூட அந்த ட்ரஸ்டில் உறுப்பினர் கிடையாது என்பது தான் இதன் யதார்த்தம்.
தான் ஆரம்பித்திருப்பது சங்கம் எனும் போது அதை சங்கமாகத் தானே பதிவு செய்திருக்க வேண்டும்,. அப்போது தானே அவரது இயக்கத்தில் உள்ளவர்களுக்கு அதில் உரிமை இருக்கும்.
சங்கமாகப் பதிவு செய்ய வாய்ப்பு இல்லாததால் அல்லது அந்தப் பெயரை வேறு யாரோ பதிவு செய்து இருந்ததாலோ அவர் பதிவு செய்யாமல் இருந்தாரா என்றால் அதுவும் இல்லை. அதுவும் இவர்கள் எழுதியுள்ள மேற்கண்ட வாசகத்தில் இருந்தே அறிந்து கொள்ளலாம். அவர்கள் குறிப்பிட்ட மேற்கண்ட வாசகத்தில் 2010இல் பதியப்பட்டுள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சங்கம் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்பது 2010 ஆம் ஆண்டு தான் நம்மால் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அப்படியானால் 2010 மார்ச் வரை அந்தப் பெயரை சங்கப்பதிவுச் சட்டப்படி யாரும் பதிவு செய்யவில்லை. 2010 வரை யாரும் பதிவு செய்யவில்லை என்றால் 2009ல் அவர் அந்தப் பெயரை சங்கமாகப் பதிவு செய்ய எந்தத் தடையும் இருக்கவில்லை. அவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு பிறகு நம்மால் பதிவு செய்ய முடிகிறது என்றால் அவர்களால் நிச்சயம் பதிவு செய்திருக்க முடியும். சங்கமாக பதிவு செய்ய எந்தத் தடையும் அன்று இல்லாதிருந்த போதும் அவர்கள் சங்கமாக பதிவு செய்வதை வேண்டுமென்றே தவிர்த்துள்ளனர் என்பது இதில் இருந்து தெரிகிறது.
தாங்கள் என்ன ஆட்டம் போட்டாலும் தங்களை நீக்கும் உரிமை மக்களுக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காகவும் தங்களை கேள்வி கேட்கும் சட்டப்பூர்வ உரிமை அவரை நம்பிய மக்களுக்குக் கிடைக்கக் கூடாது என்பதற்காகவும் எவ்வளவு திட்டமிட்டு காய் நகர்த்தியுள்ளார் என்பது இதில் இருந்து தெரிகிறது.
இவரை நம்பாத மக்களுக்கு மட்டும் அல்ல நம்பிய மக்களுக்கு இவர் பச்சைத் துரோகம் செய்துள்ளார்.
நீதிமன்றம் கூறுவது என்ன
நீதிமன்றம் கூறியதாக இவர்கள் குறிப்பிட்ட அந்தப் பாராவில் உள்ளது உண்மையாக இருந்தால் அது அவர்களுக்குத் தான் மரண அடியாக விழுந்துள்ளது.
மற்றும் புதியதாக சோஷியல் ஆக்ட்டில் 2010இல் பதியப்பட்டுள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சங்கம்
இந்த வாசகத்தின் மூலம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்பது நம்மால் சங்கச் சட்டப்படி சொசைட்டி ஆக்ட் படி பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாம் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட சங்கம் என்பது தான் இதன் அர்த்தம்.
ஆனால் இவர்கள் இயக்கம் இல்லை ட்ரஸ்ட் என்றும் இதே தீர்ப்பு கூறுகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு ட்ரஸ்ட் ஆக்ட்டில் பதியப்பட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் (பதிவு எண் : 45/2009) இந்த வாசகத்தில் இருந்து இதை அறிந்து கொள்ளலாம்.
அதாவது நம்முடையது பதிவு செய்யப்பட்ட சங்கம் என்பதும் இவர்கள் பதிவு செய்யப்பட்ட ட்ரஸ்ட் என்பதும் உறுதியாகிறது.
இந்தத் தீர்ப்பு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற நமது சங்கத்தின் செயல்பாட்டையும் தடுக்கவில்லை, அது குறித்த எந்த உத்தரவும் இதில் இல்லை. இவர்கள் ட்ரஸ்ட் என்ற பெயரில் வைத்துள்ள சொத்துக்களை நாம் எடுக்க முடியாது. அந்த ட்ரஸ்டுக்கு நாங்கள் தான் தலைவர்கள் என்று உரிமை கொண்டாட முடியாது என்று தான் இந்தத் தீர்ப்பை யாரும் புரிந்து கொள்வார்கள். அவர்கள் இந்தத் தீர்ப்பை வாங்கா விட்டாலும் இவர்களின் சொத்துக்களில் நாம் சொந்தம் கொண்டாட முடியாது என்பது தான் சட்ட நிலை.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற நமது சங்கத்தின் செயல்பாட்டை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் நாம் தாராளமாக செயல்படலாம்.
இது போல் அவர்கள் ட்ரஸ்ட் என்ற அடிப்படையில் தான் செயல் பட முடியும். இயக்கமாக செயல்பட இதில் எந்த உத்தரவும் இல்லை.
இவர்கள் ட்ரஸ்டாக செயல்படாமல் சங்கத்தின் செயல்பாடுகளை நமது சங்கத்தின் பெயரால் செய்வதற்கு எதிராக நாம் எடுக்கும் சட்ட நடவடிக்கைக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை, ட்ரஸ்டாக செயல் படுவதற்கு நீதிமன்ற உத்தரவு வாங்கா விட்டாலும் அவர்கள் ட்ரஸ்ட் வேலையை தாராளமாக் செய்யலாம். ஆனால் சங்க வேலையை அவர்கள் செய்ய சட்டப்படி உரிமை இல்லை. நீதி மன்றத் தீர்ப்பிலும் அது பற்றி ஏதும் இல்லை.
தன்னுடன் உள்ளவர்களின் அறிவின் மீது இவர்களுக்கு அதீத நம்பிக்கை உள்ளது. அதனால் தான் மீண்டும் மக்களை ஏமாற்றுவதற்காக இந்தத் தீர்ப்பில் இவர்களுக்கு சம்மட்டி அடி விழுந்தும் அது நிம்மதி ஏற்படுத்தியதாக மக்களிடம் காட்டுகிறார்கள்.
இவர்கள் சட்டத்துக்கு விரோதமாக எங்கள் சங்கத்தின் பெயரைப் பயன்படுத்தி சங்க வேலைகளை செய்தால் கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதில் எந்த மாற்றமும் இல்லை.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற இயக்கம் நம்மால் பதிவு செய்யப்பட்டது என்பதிலும், நம் செயல்பாடு எப்போதும் போல் இருக்கும் என்பதிலும் எந்த மாற்றமும் இல்லை.
இவர்களின் டர்ஸ்ட் செயல்பாடுகளில் நாம் தலையிடும் அவசியம் இல்லை. இதற்கு எந்த ஆர்டரும் தேவை இல்லை.
இதை ஒரு உதாரணத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
காங்கிரஸ் என்று ஒரு டரஸ்டை ஒருவர் ஆரம்பிக்கலாம். எங்கள் ட்ரஸ்டில் காங்கிரஸ் கட்சி தலையிடக் கூடாது என்று உத்தரவு வாங்கலாம். காங்கிரஸ் கட்சி என்று செயல்பட எங்களுக்கு அனுமதி கிடைத்டு விட்டது என்று கூறினால் அவனைப் போல் மூடன் இருக்க முடியாது. அந்த நிலையில் தான் இவர்கள் உள்ளனர்.