அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! இந்த முக நூலில் பலர் பல வேஷம் போட்டு தவ்ஹீத் வாதிகளை எதிர்த்தார்கள் .அசிங்கமா திட்டினார்கள் சிலர் விமர்சனம் பண்ணினார்கள் தரீக்கா வழிகேடர்கள் பண்ணின தொல்லைகள் ஏராளம். தவ்ஹீத் வாதிகளின் புகைப்படங்களையும் பெண்களின் செக்ஸ் போட்டகளையும் சமந்தபடுத்தி பொய்யான பீதியையும் கிளப்பி விட்டு பார்த்தார்கள் நம் தவ்ஹீத் வாதிகள் கொஞ்சம் கூட அசராமல் அவர்களின் முகத்திரைகளை கிழித்தார்கள் அவர்களின் கொக்கரிப்பு நம் தவ்ஹீத்வாதிகளிடம் எடுபடாமல் போயிட்டது. இன்னும் பலர் தவ்ஹீத் வளர்ச்சி பிடிக்காமல் தவ்ஹீத் வாதிகளின் மீது சேற்றை வாரி பூசினார்கள்.அண்ணன் பீஜே அவர்கள் மீது சுமத்திய ஆதாரமில்லாத குற்றங்கள் தவிடி பொடியா ஆனது.பலர் தவ்ஹீதை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் வாதிகளின் முகவரிலும் வந்து குழப்பினார்கள் அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட பட்டது.சிலர் நடு நிலைவாதி என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீத் வாதிகளை கண்டித்தார்கள்.அதற்கும் நம் தவ்ஹீத் வாதிகள் அஞ்சாமல் அவர்கள் யார் என்பதை இந்த முக நூலில் அடையாளம் காட்டினார்கள்.பலர் நான் எந்த இயக்கத்தை சாராதவன் என்றும் நாம் ஒற்றுமையா இருக்கணும் என்றும் போராடினார்கள் அவர்களும் ஒரு சாரார் என்பதை இந்த தவ்ஹீத் வாதிகள் நிருபித்தார்கள்.அவர்களின் பொய்யான முகத்திரையும் கிழிக்கப்பட்டது. பொய்யான முக மூடி போட்டுக்கிட்டு நாங்கள் நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் பலர் தமுமுகவை சேர்ந்தவர்கள்.என்பதை வெட்கத்துடன் சொல்லிகொள்கிறேன். தவ்ஹீத் வாதிகளை எதிர்க்க கூடியவர்கள் பலர் இந்த முக நூலில் காணமல் போனார்கள்.அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! எதிர்ப்பு இருந்தால்தான் ஏகொத்துவம் (தவ்ஹீத்) வளரும்! தவ்ஹீத் மீண்டும் மீண்டும் வீறு நடை போடும்! இன்ஷா அல்லாஹ்!

வியாழன், 24 பிப்ரவரி, 2011

நான் ரொம்ப நல்லவங்கோ(?)

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்திலிருந்து பாக்கர் உற்பட இன்னும் சிலர் வெளியேற்றப் பட்டது.தமிழுலகறிந்த பிரபலமான விஷயம்.

வெளியேற்றப்பட்டது ஏன்?


தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் எனும் மாபெரும் பதவியில் இருந்த இந்த மகான் ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு ஏ.ஸி பஸ்ஸில் குஜாலாக பிரயாணம் செய்ததும் நாம் அறியாத ஒன்றல்ல.

அதைத் தொடர்ந்து தவ்ஹீத் ஜமாத் நிர்வாகம் இந்த மகானை(?)ஜமாத்திலிருந்து சில காலம் இடை நீக்கம் செய்து வைத்து மீண்டும் சேர்த்தது.

ஆனால் இவன் கதையோ அட்டையின் கதையாக மாறியது.

அட்டையை தூக்கி மெத்தையில் வைத்தாலும் மீண்டும் குப்பைக்குத் தான் செல்லுமாம்.

இவனுக்கு இவ்வளவு சலுகைகள் கொடுத்து இவன் திருந்துவான் என எதிர்பார்த்த தவ்ஹீத் ஜமாத் நிர்வாகத்திற்கு இவன் செய்த அடுத்த துரோகம் எண்ணிலடங்காதவை.

தவ்ஹீத் ஜமாத் இவனை வைத்து விசாரனை செய்த ஸி.டி யைப் பார்ப்பவர்கள் இதனை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.

நாங்க ரொம்ப………………….நல்லவங்கங்கோ………….

இப்போது போகும் இடமெல்லாம் நாங்க ரொம்ப நல்லவங்கன்னு வடிவேல் பாணியில் பேசித் திரிவதைப் பார்க்கிறோம்.

நாய் நடுக்கடலுக்கு சென்றாலும் நக்கித்தான் குடிக்க வேணும் என்று சொல்வதைப் போல் இவன் எங்கு சென்றாலும் தான் ஒரு கேவலம் கெட்டவன் என்பதை நிரூபித்து வருகிறான்.

நானும்(?) தவ்ஹீத் வாதி நானும்(?) தவ்ஹீத் வாதி……………. என்று சொல்லி மக்கள் மத்தியில் இயக்கம் நடத்தி பிழைப்பு நடத்தப் பார்த்தவனை மக்கள் தெளிவாக அடையாளம் கண்டு கொண்டனர்.

ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளாய் இவனுடன் சேர்ந்த ஒரு காடயர் கூட்டம் தவ்ஹீத் ஜமாத்தின் வளர்ச்சியைத் தடுத்து அல்லாஹ்வின் மார்க்கத்திற்கே சவால் விட நினைத்தனர்.

அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களால் ஊதி அணைத்துவிட நினைக்கிறார்கள்.தன்னை மறுப்போர் வெறுத்த போதும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப் படுத்துபவன்.(61:8)

குர்ஆனைப் பற்றியும் ஹதீஸைப் பற்றியும் நாம் பேசுவது இந்த ஜன்மங்களுக்கு புரிந்திருந்தால் ஒரு பெட்டையனுக்கு வக்காலத்து வாங்குவார்களா?

கழுதைகளுக்குத் தெரியுமா கற்பூர வாசனை?

புதன், 23 பிப்ரவரி, 2011

இஸ்லாத்தை கேலிக்கூத்தாக்கிய SDPI மாநாடு

ஜிகாத் செய்ய வாருங்கள்ஜனநாயகம் என்பது நவீன இணைவைத்தல்,இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குவதே நம் லட்சியம் என்னும் கோட்பாடுகளை வைத்து அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவைசெய்து மூன்றெழுத்து மாயாஜாலக் கூடாரம் நடத்தி வந்தவர்கள்அந்த மாயாஜாலம் மக்களிடம் எடுபடாமல் போகவே அதை அப்படியே நான்கெழுத்து சர்க்கஸ்கூடாரமாக மாற்றி சந்திக்கு வந்து விட்டார்கள். சர்க்கஸ் கூடாரத்தில் தான் அந்தர் பல்டி அடிப்பார்கள்ஆனால் அதையெல்லாம் விட இவர்கள் அடித்த பல்டி தான் பெரியது. எந்த கொள்கையைக் காட்டி மக்களை மதிமயக்கினார்களோ அந்தக் கொள்கையை அப்படியே குப்புறத்தள்ளி விட்டு இப்போது அதற்கு நேரெதிர் கொள்கைகளோடு(?) களமிறங்கியிருக்கிறார்கள். இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப புதிய புதிய விசயங்களைச் சொல்லி ஏற்கனவே மயக்கத்தில் இருந்த மக்களை மேலும் மயக்கி இருக்கிறார்கள்.வருகின்ற சட்டமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு சென்னை மண்டல மாநாட்டை கடந்த 20 ஆம்தேதி சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடத்தினார்கள். அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடுகளுக்கும் இவர்கள் நடத்திய இந்த மாநாட்டுக்கும்கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லாமல் அதை அப்படியே பின்பற்றியது தான் வியப்புகுரிய விசயம்.

இதற்கு முன்னதாக வினாயகர் சதுர்த்திக்கும்,பொங்கலுக்கும்,கிருஸ்துமஸூக்கும் வாழ்த்து பேனர் அடித்து ஊர் முழுவதும் வைத்து ஓரிறைக் கொள்கையை கேலி செய்தார்கள். எங்களுக்கும்குரான்,ஹதீஸுக்கும் சம்பந்தமேயில்லை என தங்கள் வாய்களினாலேயே வாக்குமூலம் கொடுத்தார்கள். அதை நிறுபிக்கும் விதமாக,எங்களுக்கும் இஸ்லாமிய கொள்கைகளுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது இவர்களின் சென்னை மண்டல மாநாடு. அமைப்பின் தேசிய மற்றும் மாநில‌ தலைவர்களுக்கு விதவிதமான பிரம்மாண்டமான கட்அவுட் பேனர்கள் வைப்பதில் இருந்து துவங்கியது அவர்களின் மறுப்புக் கொள்கை அடையாளங்கள். தலைவர்களின் பேச்சுகளுக்குஇடையே பறந்த விசில் சப்தமும்கைத்தட்டல் ஒலிகளும்ஜிந்தாபாத் கோசங்களுமேஅவர்களுக்கும் உத்தமத்தூதர் நபிகளாரின் கொள்கைகளுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை என்பதை தெளிவுபடுத்தியது.
நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்குஅடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319 3456)
கைதட்டுதலும் விசிலடித்தலும் அன்றைய ஜாகிலியாக்கள் காலத்தில் வாழ்ந்த மறுப்பாளர்கள் கொள்கை என்பதையும்கைதட்டி இறைவனை அழைப்பது இன்றைய கிருத்தவர்களின் கொள்கை என்பதையும்அப்படியே பின்பற்றி,இவர்கள் எந்த கொள்கை(?)யில் இருக்கிறார்கள் என்பதை மேற்குறிப்பிட்ட நபி மொழி மூலமாக அப்படியே நிறுபித்து விட்டார்கள் இந்த கொள்கை சகோதரர்கள்.
இறைவசனங்களை மறுக்கும் விதமாக இவர்களது செயல் அமைந்திருப்பதில் எந்த விதமான ஆச்சரியமும் இல்லை என்றாலும் அதை நிறுபிக்கும் விதமாகவே அமைந்து விட்டது இந்த மாநாடு.இஸ்லாம் இசையை ஹராமாக்கி இருக்கிறது என்பது சாதாரண பெயர் தாங்கி முஸ்லீம்களுக்கு கூட தெரியும் போது இவர்களின் கொள்கை(?)பாடல்கள் முழுக்க முழுக்க இசைக் கருவிகளின் ஆதிக்கத்துடன் இந்த மாநாட்டு மேடையில் வெளியிடப்பட்டு இசையை ஆகுமானதாக்கியது தான் இவர்களின் மாநாட்டின் முக்கிய அம்சமே.
இறைவசனங்களை கேலி செய்தும்தூதரின் கொள்கைகளுக்கு மாறு செய்தும் அதிகபட்சம் ஒரு சீட்டாவது பெறுவதற்காக இவர்கள் நடத்திய கூத்துப்பட்டறை மாநாடு நிச்சயமாக இவர்கள் என்ன கொள்கையில் இருக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்தியது.
அல்லாஹ்வுக்கும்அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்றுவிட்டார்.
அல்குர்ஆன் (33:71)
அல்லாஹ்வும்அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும்பெண்ணுக்கும் தமது காரியத்தில் சுயவிருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும்அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழிகெட்டுவிட்டார்.
அல்குர்ஆன் (33:36)
அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில்நாங்கள்அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதாஇத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?” எனக் கூறுவார்கள்.
அல்குர்ஆன் (33:66)
அநீதி இழைத்தவன் தனது கைகளைக் கடிக்கும் நாளில்இத்தூதருடன்நான் ஒரு தொடர்பை ஏற்படுத்தியிருக்கலாமே என்று கூறுவான்.
அல்குர்ஆன் (25:27)
வானங்களிலும்பூமியிலும் உள்ளதை அவன் அறிவான். நீங்கள்மறைப்பதையும்வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான். உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்.
அல்குர்ஆன் (64:4)
அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்யெனக் கருதியோர் நஷ்டமடைந்துவிட்டனர். திடீரென அந்நேரம் வரும் போது உலகில் வரம்பு மீறி நடந்து கொண்டதால் எங்களுக்கு கேடுஏற்பட்டுவிட்டதேஎனக்கூறுவார்கள். தமது முதுகுகளில் அவர்கள் பாவங்களைச் சுமப்பது மிகக் கெட்டது.
அல்குர்ஆன் (6:31)
என்ற இந்த அருள்மறை வசனங்கள் இவர்களின் செயல்பாடுகளைத் தான் நினைவு படுத்துகிறது. அதேபோல ஒரு சீட்டுக்காக ஒப்பற்ற ஓரிறைக் கொள்கையையும்தூதர் நபியின் தூய வழிகாட்டுதலையும்புறக்கணித்து தங்களின் இவ்வுலக லாபங்களுக்காக அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்து அவர்களை வழிகேட்டின் பக்கமாக திருப்பி அவர்களையும் மாறு செய்யக்கூடியவர்களாக ஆக்கியபெருமையும் இவ்வியக்கத்தின் பொருப்பாளர்களையே சாரும்.
நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும்வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.
(அல்குர்ஆன் 5:2)
இந்த இறைவசனங்கள் இவர்களுக்கு போதுமானதாக இருந்தாலும்,இவர்களின் மூளைச்சலவையில் சிக்கும் இளைஞர்களுக்கு கீழ்க்கண்ட ஹதீஸ் தேவையானதாக இருக்கும்.
நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்: "நல்ல நண்பனுக்கும்தீய நண்பனுக்கும் உதாரணம்கஸ்தூரியைச் சுமந்திருப்பவனுக்கும்உழையில் ஊதும் கொள்ளனுக்கும் ஒத்ததாகும். அத்தர் வியாபாரி அதனை உனக்கு கொடுக்கலாம்அல்லது நீ அதனை (விலை கொடுத்து)வாங்கலாம்,அல்லது அவனிடமிருந்து அதன் சிறந்த வாசனையை யாவது கண்டுகொள்ளலாம். ஊழையில் ஊதுபவன் உன்னுடைய உடையை எரிக்கலாம்அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை கண்டு கொள்ளலாம்." (புஹாரி)
என்ன சொல்லி என்ன செய்ய! இவர்கள் தான் எங்களுக்கும் குரான் ஹதீஸூக்கும் சம்பந்தம் இல்லை என அறிவித்து விட்டார்களே! அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
மாநாட்டுத் துளிகள்:
* காலையில் மாநாடு என பேனர்களில் இருந்ததால்காலையிலேயேமைதானத்திற்கு சென்று விட்டோம். ஆனால் அங்கு போய்விசாரித்த பிறகுதான் மாநாடு மாலையில் துவங்கும் என தெரியவந்தது. சரிவந்ததுவந்துவிட்டோம் கொஞ்சநேரம் கழித்துச் செல்லலாம் எனமைதானத்தின்அருகிலிருந்த கட்டிடத்தில் அமர்ந்தோம். அங்கு ஒரு அறையில்கிருத்தவமக்களால் வழக்கமாக நடத்தப்படும் வாரந்தர ஜெபக்கூட்டம்நடந்துகொண்டு இருந்தது. அதற்கு வெளியே ஒரு வேனில் குழந்தைகளைவைத்துக்கொண்டு ஒரு ஆசிரியை பைபிள் போதனைகளைசொல்லிக்கொண்டு இருந்தார்.திடீரென கொள்கை(?) கூட்டத்தின்கும்மாங்குத்து பாடல்களை அங்கு இருந்தஅனைத்து பிரம்மாண்டஒலிபெருக்கிகளிலும் அலற விட ஆரம்பித்தார்கள். உடனேஜெபகூட்டத்தில்இருந்தவர்கள் வெளியே வந்து கொள்கை(?) சகோதர்களிடம்,இந்தபாடல்களை கொஞ்ச நேரத்திற்கு நிறுத்தி வையுங்கள்அது எங்களுக்குமிகுந்ததொந்தரவாக இருக்கிறது என முறையிட்டனர்.
ஆனால் அவர்கள் யாரும் அதை காதில் வாங்கிக்கொள்வதாகத்தெரியவில்லை.உடனே வேனில் குழந்தைகளுடன் இருந்த ஆசிரியைவெளியே வந்து பாடலைநிறுத்துமாறு அந்தப்பக்கமாக வந்து சென்றுகொண்டிருந்த கொள்கை(?)சகோதரர்களிடம் பல தடவை முறையிட்டார்.எவ்வளவோ கேட்டுக் கொண்டும் ஒருமணி நேரத்துக்கும் மேலாகஎவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்துபாடல் பயங்கரசப்தத்துடன் ஒலித்துக் கொண்டே இருந்தது. இதனால் சலிப்படைந்தஅந்தஆசிரியை வகுப்பைத் தொடர முடியாமல் வேனின் படிக்கட்டிலேயேஅமர்ந்துவிட்டார். கிருஸ்த்துமஸ் வாழ்த்துக்கள் என பேனர் அடித்து ஊர்முழுக்கவைத்தவர்கள்அந்த கிருத்தவ மக்கள் வைத்த நியாயமானகோரிக்கையைகண்டுகொள்வதாகவே தெரியவில்லை. கடைசியாக நாம்அந்த ஆசிரியை அருகில்சென்று என்ன நடந்தது என கேட்ட போதுநான்பலமுறை வலியுறுத்தியும் அவர்கள்பாடல்களை நிறுத்துவதாகத்தெரியவில்லைஇசைபாடல்களுக்கும்இஸ்லாத்திற்கும் சம்பந்தம்இல்லை என சொல்கிறார்கள் ஆனால் இவர்கள் இப்படிநடந்துகொள்கிறார்களே எனக்கேட்ட போது நமக்கு சுருக்கென்றதுஇதை விட இஸ்லாத்தை யாராலும் கேவலப்படுத்த முடியாத என நினைத்தபடி அங்கிருந்து நகர்ந்து விட்டோம்.
* ஏழைகளின் கட்சி இது SDPI
வருமையை ஒழிக்க வந்த SDP!
என இயக்கத்தின் கொள்கை(?) பாடல்களில் இந்த வரிகள் இடம்பெற்றுஇருந்தன. இந்த வரிகளை மெய்ப்பிக்கும் நிகழ்ச்சி அந்த இடத்திலேயே தெளிவாக நிகழ்ந்தது. அங்கு முருக்குகடலை,பொறி மற்றும் சுண்டல் என கூடையில் வைத்து விற்பனை செய்வதற்காக வந்திருந்த ஏழை சிறுவியாபாரிகள் மாநாட்டின் உள்ளே சென்று விற்பனை செய்ய அனுமதிக்கப் படவில்லை. கூட்டத்தோடு கலந்து உள்ளே சென்று வியாபாரம் செய்த கூடை வியாபாரிகளை கடும்சொற்களால் அர்ச்சித்து வெளியே அனுப்பினர் கொள்கை(?) கூட்டத்தின் உண்மைத் தொண்டர்கள்.ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் உள்ளே நுழைந்து வியாபாரம் செய்ய ஆரம்பித்தனர் அந்த வியாபாரிகள்.. இப்போது மீண்டும் பாடல் வரிகளைப் படியுங்கள்
* சிறு சிறு கூட்டங்களால் பயனில்லை - பறக்கும்
வண்ண வண்ண கொடிகளால் பலனில்லை,
ஒரு குடையின் கீழ் வந்தால் நலமாகும் - நாம் ஒற்றுமை கயிறை
பற்றிப் பிடித்தால் பலமாகும்
இதுவும் கொள்கை(?) கூட்ட மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கை(?)பாடல்களில் சிலவரிகள். ஆனால் இவர்களே இந்த வரியை அமுல்படுத்தாமல்ஏன் புதியதாக கட்சி துவக்கினார்கள் என தெரியவில்லை. ஏற்கனவே ஓடாமல் கிடக்கும் பல கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கலாம். அல்லது அந்த வரிசையில் கடைசியாக சமுதாய மானம் காக்க புறப்பட்டு 3 சீட்டுகளைப் பெற்றிருக்கும் மமகவுடன் இணைந்து ஒரு தொகுதியில் போட்டியிடலாம்.ஆனால் இவர்கள் தனியாக களம் கானும் காரணத்தை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். ததஜ ஒற்றுமையை குலைக்கிறதுஊரையே பிரிக்கிறது,வாருங்கள் நாமெல்லாம் ஒரு குடையின் கீழ் ஒன்று படுவோம் என ஏற்கனவே இருக்கும் 19 கூட்டத்திற்கு போட்டியாக புதியதாக ஒரு 19கூட்டத்தை உண்டாக்கி தங்கள் ஒற்றுமை பலத்தை நிறுபித்து ததஜவை தடை செய்ய வேண்டும் என போஸ்டர் ஒட்டினார்கள். ஆனால் இந்த ஒற்றுமை வேஷம் கொஞ்ச நாள் கூட நிலைக்கவில்லை. ஆம். அடுத்து வந்த ஹஜ் பெருநாள் தொழுகையை ஆளுக்கு ஒரு விதமாக ஆளுக்கு ஒரு நாளாக கொண்டாடிதங்கள் ஒற்றுமை பலத்தை நிறுபித்தார்கள். இந்த கொள்கை(?) சகோதரர்கள் சவூதியை பின்பற்றமற்ற 18 கூட்டமும் தனித்தனியாக தமிழக அரசின் விடுமுறையை பின்பற்றததஜ மட்டும் ரசூலுல்லாஹ்வின் வாய்மொழி அடிப்படையை பின்பற்றியது. இவர்களை அவர்களோஅவர்களை இவர்களோ விமர்சிக்காமல் இதிலும் ஒன்றினைந்து ததஜவை விமர்சிக்க ஆரம்பித்தார்கள். ஆக இவர்களின் ஒற்றுமை வேஷ‌ம் ததவைத் தாக்குவது என்பதில் மட்டும் தான் என்பது உறுதியாக்கப்பட்டது.
* மாநாட்டில் ஒவ்வொரு தலைவர்களும் பேசும் போது எழுந்த விசில் சப்தமும்,கைதட்டல் ஒலிகளும் காதைக் கிழித்தது. இடையிடையே SDPIஜிந்தாபாத்ஜெய் ஹிந்த் என்ற கோசங்களும் எழுந்தன‌. ஒரு கட்டத்தில் மாநில தலைவர் இமாம் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி அவர்கள் பேசும் போது எழுந்த கைதட்டலும்,விசில் சப்தமும் அடங்குவதற்கு நீண்ட நேரம் ஆகியது. கைதட்டுவதும் விசிலடிப்பதும் நமது கலாச்சாரம் இல்லை என கொஞ்சம் கூட கண்டிக்காமல் அதை அதிகமாகவே ஆமோதித்தார்.
* இமாம் தெஹ்லான் பாகவி அவர்கள் பேசும் போதுமக்களிடம் வாக்குகளையும்அத்தோடு செலவுக்கு காசையும் வாங்க வேண்டும் என தொண்டர்களிடம் கட்டளையிட்டார். ஏற்கனவே பித்ரா காசுகளை வாங்கி ஆட்டையை போட்ட இவர்களுக்கு இப்போது வசூல் செய்ய புதிய வழி கிடைத்து விட்டது என்று தான் நினைக்கத்தோன்றியது.
* மாநில பொதுச்செயலாளர் ரபீக் பேசும் போதுஇது சென்னை மண்டல மாநாடு,இங்கே கலந்து கொண்டிருப்பவர்கள் சென்னையைச்சேர்ந்தவர்கள் மட்டுமே என கூறினார். ஆனால் தமிழகத்தின் எல்லா மாவடங்களில் இருந்தும் பஸ்களிலும் வேன்களிலும் மக்கள் வந்திருந்தார்கள் என்பது தான் உண்மை.சென்னையைச் சேர்ந்தவாகனங்களில் மட்டும் பேனர்களைக் கட்டி மற்ற வெளியூர் வாகனங்களில் ஊர் பெயர் குறிப்பிடாமல் வெறும் நம்பர்களை மட்டுமே ஒட்டி வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. வெளியூர் வாகனங்கள்அனைத்தும் மெரினாவில் நிறுத்தப்பட்டிருந்தன. சென்னையில் மட்டுமிருந்தான் மக்கள் வந்திருந்தார்கள்என ரபீக் அவர்கள் பேசியது முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைத்த கதையாக இருந்தது.இப்படிதமிழகம் முழுக்க இருந்து தொண்டர்கள் அணிவகுத்து வந்த போதும் மாநாட்டுத்திடல் பாதியளவு கூட நிரம்பாதது தான் வருத்தத்திற்குரியது.
மேலும் ரபீக் அவர்கள் பேசும் போது இந்த இயக்கத்தில் உள்ள தொண்டர்கள் பேனர் கட் அவுட் வைக்கும் போது எங்கள் தலைவர்களில் யார் பெயரையுமோ,படத்தையுமோ போட மாட்டார்கள். யார் பேனர் வைக்கிறார்களோ அவர்கள் படத்தை மட்டும் தான் போட்டுக் கொள்வார்கள் என மேடையில் முழங்கினார். ஆனால் மாநாடு நடந்த பகுதியைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த கட் அவுட்களில் முழுக்க முழுக்க தலைவர்களின் படங்கள் தான் இடம்பெற்று இருந்ததை அவர் எப்படி கவனிக்க மறந்தார் என்பது தான் நமக்குத் தெரியவில்லை.
* ரபீக் அவர்கள் பேசும் போது இந்தக் கூட்டத்திலே எங்காவது ஒரு சிகிரெட் துண்டைப்பார்க்க முடியுமா எனக் கேட்டார். ஆனால் மாநாட்டின் ஒரு பகுதியில் மக்கள் வரிசையாக நின்று "தம்"போட்டுக்கொண்டிருந்ததைக் கொள்கை சகோதரர்கள் அவருக்கு ஏன்தெரிவிக்கவில்லை என்பது தெரியவில்லை.
* நிகழ்ச்சியின் உட்சபட்ச காமெடியாகஊரான் வீட்டுப்பிள்ளைக்கு யாரோ பெயர் வைத்த கதையாக‌ கிருத்தவ மிசனுக்கு சொந்தமான YMCA - (Young Men's Christian Association) திடலுக்குஇவர்கள் காயிதேமில்லத் திடல் என பெயர்வைத்தது தான் பெரிய நகைப்புக்குள்ளாக்கியது. அந்த திடலை இவர்கள் வாடகைக்கு எடுத்தார்களா அல்லது விலைக்கு வாங்கிவிட்டார்களா என்பது தெரியவில்லை. நல்லவேளை இந்த விசயம் அந்த திடல்காரர்களுக்கு தெரியாது என நினைக்கிறேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களையும் நேர்வழியில் செலுத்துவானாக!!!



மாநாட்டு "புகை"படங்கள் :

புண்பட்ட நெஞ்சமடா SDPIயே தஞ்சமடா!
சேர் டிக்கெட்ட ஃபுல் பண்ணா தர டிக்கெட்டு காலியாகுதுதர டிக்கெட்ட ஃபுல் பண்ணா சேர் டிக்கெட்டு காலியாகுது. என்ன செய்ய?







நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?????









கஷ்டப்பட்டு பஸ்புடிச்சி மாநாடுக்கு கூட்டிக்கிட்டு வந்து அணிவகுத்து வாங்கன்னு கூப்பிட்டா வந்ததுல பாதிபேர் அண்ணா சமாதிய பாக்கப் போயிட்டா இது தான் கதி. வெளக்கு வச்ச பிறகும் யாரையுமே காணோம். பெருமைக்கு எரும ஓட்டுனா இப்டித்தான்








YMCA மைதானத்துக்கு காயிதேமில்லத் திடல்னு பெயர் வச்சது அந்த திடல்காரங்களுக்கு தெரியுமா?


சனி, 19 பிப்ரவரி, 2011

அன்று தி.மு.க!! இன்று த.மு.மு.க!!!


நாத்திகத்தை கொள்கையாக கொண்ட தி.க.வில் இருந்து அரசியல் பிரவேசம் கண்ட தி.மு.க, கொள்கை எனும் ஆடையை கிழற்றி விட்டு அரசியல் சாக்கடையில் முக்குளித்ததை முன்பு புதிய  ஜனநாயகம் எனும் மாத இதழ் கட்டுரையாக வெளியிட்டது, இந்த கட்டுரையை படிக்கும் பொழுது நம்முடைய "நாத்திக கொள்கையை ஏட்டு சுரைக்கவாக ஆக்கிய தி.மு.கவிற்கும், ஏகத்துவம் எனும் வட்டத்திற்குள் நாங்கள் வர மாட்டோம்; நாங்கள் வகுக்கும் வட்டத்திற்குள் தான் ஏகத்துவம் வர வேண்டும் என்ற நிலைபாட்டை எடுத்த த.மு.மு.க விற்கும் " உள்ள ஒற்றுமையை நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது, இருவருமே கொள்கை எனும் வேட்டியை விட அரசியல் எனும் தோல் துண்டில் தான் கவனமாக இருக்கிறார்கள், அரசியல் "கொள்கையை" கொன்றுவிடும் என்பதை தான் வரலாறு நமக்கு உணர்த்துகிறது . கீழ் காணும் கட்டுரை அதற்கு தக்க சான்று.


மறைந்த தி.மு.க. தலைவர் அண்ணாதுரையின் நூற்றாண்டு தொடக்கவிழாவை தமிழக அரசு கொண்டாடி வருகிறது. தமிழினவாதிகள் முதல் பார்ப்பன பத்திரிகைகள் வரை அனைத்து தரப்பினரும் அண்ணாதுரையை வானளாவப் புகழ்ந்து தள்ளுகின்றனர். 1960களில் தமிழக மக்களின் பேராதரவைப் பெற்ற தலைவராக விளங்கிய அண்ணாதமிழ்சமூகத்துக்குச் செய்த பங்களிப்பு என்ன?
நீதிக் கட்சியின் தலைவராகப் பெரியார் பொறுப்பேற்றபின், அவரின் தளபதியாகப் பொறுப்பெடுத்துக் கொண்ட அண்ணாதுரை, சரிகைக் குல்லாக்கள் அனைவரையும் விரட்டி விட்டு அத்தேர்தல் கட்சியை சீர்திருத்த இயக்கமான திராவிடர் கழகமாக மாற்றினார். தி.க.வில் தனக்கென ஆதரவாளர்களை உருவாக்கித் தலைமைக்குப் போட்டியாளரானார். தனது “தம்பிமார்கள்’ பதவி சுகம் கண்டு பொறுக்கித்தின்னத் துடித்தபோது, பெரியார் மணியம்மையின் திருமணத்தைக் காரணமாகக் காட்டி “கண்ணீர்த்துளி’களோடு வெளியேறி தி.மு.க.வை உருவாக்கினார்.
தி.க.வும் தி.மு.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்று சொல்லிக்கொண்ட அண்ணாதுரை, கட்சி ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே நாத்திகத்தை மூட்டை கட்டி வைத்து விட்டார். “ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ எனும் திருமூலரின் வாசகத்தையே தி.மு.க.வின் கொள்கை ஆக்கியவர், பிள்ளையார் சிலையைத் தெருவில் போட்டு பெரியார் உடைத்தபோது, “நாங்கள் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம். பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டோம்” என்று பித்தலாட்டமாடினார். “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்” என்று புது ஆத்திகத்தை உபதேசித்தார். இந்தக் கொள்கைச் சறுக்கலோ, பின்னர் விநாயகர் சதுர்த்தி விழாவை தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பாலு தொடங்கி வைக்கும் வரைக்கும் சீரழித்தது என்பதை மறுக்க முடியாது.

இந்தியாவிலிருந்து நர்மதைக்கு தெற்கே உள்ள பகுதிகளை எல்லாம் “திராவிட நாடு” என்றும் இதனைப் பிரித்து தனி நாடாக்கவேண்டும் என்றும் “அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு” என்றும் அண்ணாதுரை மேடை எங்கும் முழங்கி வந்தார். இவர் கேட்ட திராவிட நாட்டின் எல்லைகளைக் கூட இவர் சரியாகச் சொன்னதில்லை. சில சமயங்களில் பழைய சென்னை மாகாணமே “திராவிட நாடு’ என்றார். ஆந்திரம் தனி மாநிலமான பிறகும் கேரளா, கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களும் திராவிட நாடென்றார். ஆனால் பரிதாபம் என்ன என்றால், இவர் திராவிடநாடு கேட்டது மற்ற 3 மாநிலத்திற்கும் தெரியாது. இறுதிவரை திராவிட நாட்டைப் பறித்தெடுக்க எந்த செயல்திட்டமோ, வரையறையோ அவர் எழுதிக்கூட வைத்திருக்கவில்லை.
தேச விடுதலைக்கு வேட்டுமுறை, ஓட்டுமுறை என இரண்டு இருப்பதாகவும், திராவிட நாட்டை ஓட்டுமுறை மூலமாகப் பாராளுமன்றத்தில் சென்று பெற்றுவிடுவேன் என்றும் சொன்னார். ஐ.நா. சபையில் பேசி வென்றெடுப்பேன் என்றார். “ரஷ்யாவுக்கு சென்றால் அவர்கள் திராவிடநாடு கோரிக்கையை ஆதரிப்பார்கள்” என்றும் பிதற்றினார். “தணிக்கை இல்லாமல் 4 சினிமா எடுக்கவிட்டால், அடைவோம் திராவிடநாடு” என்று அவர் பேசிய பேச்சும், எந்தத் தேர்தல் அறிக்கையிலும் இக்கோரிக்கையை அவர் முன்வைக்காததும் இக்கோரிக்கையினை மூக்குப் பொடி போலத்தான் பயன்படுத்தி வந்தார் என்பதனை நிரூபிக்கும் சாட்சியங்கள்.
சீனப்போர் உச்சமடைந்தபோது மத்திய அரசு எங்கே தனது கட்சியைத் தடை செய்து விடுமோ என அஞ்சி திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார். ஆனாலும், “திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு விட்டோம் என்று சொல்லவில்லை; ஒத்தி வைத்துள்ளோம். பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” என்று சமாளித்தார்.
இந்தி ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேறிய 1963ஆம் ஆண்டு முதல் 1969 வரை ஆறாண்டுகள் அதற்கெதிராகப் போராடப் போவதாக அண்ணா அறிவித்தார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு இந்தி ஆட்சி மொழிச் சட்ட நகல் எரிப்புப் போராட்டங்களை தி.மு.க. நடத்தியது. அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தலைவர்களும் அணிகளும் அன்றைய காங்கிரசு அரசால் சிறையிடப்பட்டனர். இறுதியாக, 1965 ஜனவரி 26 “குடியரசு’ நாளை இந்தி ஆட்சி மொழியாகும் துக்கநாளாக அறிவித்து கருப்புக் கொடியேற்றி, கருப்புச் சின்னமணிந்து கடும் அடக்குமுறை எதிர் கொண்டு போராடினர். இவ்வாறு, பல ஆக்கபூர்வ பணிகளால் தமிழ்மொழியை வளர்த்தும், பல போராட்டங்கள் பிரச்சாரங்களால் மொழிப் பற்றையும் இன உணர்வையும் ஊட்டி, தமிழ் மக்களை விழிப்புறச் செய்ததில் திராவிட இயக்கமும், குறிப்பாக அண்ணாதுரையும் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
ஆனால், அப்போராட்டம் அத் துக்கநாளோடு முடிந்து போனது. மொழியுரிமைப் போராட்டத்தில் தீக்குளித்த தியாகிகளின் கல்லறையிலேயே அண்ணாவும் தி.மு.க.வும் தமது மொழிப் பற்றையும் இன உணர்வையும் வைத்துச் சமாதி கட்டிவிட்டனர். மொழிப்போரின் பலன்களை 1967 தேர்தலில் அறுவடை செய்து கொள்ளும் நோக்கத்தில், அண்ணாவும் அவரது கழகமும் துரோகப் பாதையில் நடைபோடத் தொடங்கினர்.
மொழிப்பற்றாலும் மொழியுணர்வாலும் எழுச்சியுற்ற மாணவர்கள் 1965 ஜனவரி 25ஆம் நாளை, மாநிலந்தழுவிய துக்க நாளாக அறிவித்து, பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, இந்தி அரக்கி எரிப்பு ஊர்வலம் என பெரும் போராட்டத்தில் இறங்கினர். பல இடங்களில் கட்சி சாராத மாணவர்கள் தன்னெழுச்சியாகவும் தி.மு.க. மாணவர் அணியினரும் இவற்றுக்குத் தலைமையேற்றனர். அன்றைய முதல்வர் பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரசு அரசு காட்டுமிராண்டித்தனமாகவும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் மொழிப்போரை அடக்க முயன்றது. அடிபணிய மறுத்த மாணவர்கள், பிப்ரவரி 9ஆம் தேதி முதல் அஞ்சல் நிலைய மறியல், இரயில் நிறுத்தம், பொதுவேலை நிறுத்தம் இந்திப் பிரச்சார பாடப் புத்தகங்கள் எரிப்பு என போராட்டங்களைத் தொடர்ந்தனர். காங்கிரசு அரசு தமிழகத்தின் பல பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தி மாணவர்களை மிருகத்தனமாகப் படுகொலை செய்தது. அதைக் கண்டு கொதித்தெழுந்த தமிழக மக்கள் மாணவர்களோடு இணைந்து மொழிப் போரில் குதித்தனர். போலீசுக்கு எதிரான தாக்குதலிலும், அஞ்சல் நிலையங்கள் இரயில் நிலையங்களைத் தீயிடலிலும் இறங்கினர். இதுவரை கண்டிராத மாபெரும் எழுச்சியை தமிழகம் கண்டது.
இத்தருணத்தில் மாணவர்களோடும் மக்களோடும் களத்தில் நிற்க வேண்டிய அண்ணாவும் அவரது கழகமும், “இந்தப் போராட்டத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது. ஜனவரி 26ஆம் நாளை துக்கநாளாகக் கடைபிடித்ததோடு எங்கள் போராட்டம் முடிந்து விட்டது” என்று அறிவித்து வெளிப்படையாகவே துரோகமிழைத்தனர். கழகத்தின் முக்கிய தலைவர்கள் பலர் “மன்னிப்பு’ எழுதிக் கொடுத்துவிட்டு சிறையிலிருந்து விடுதலையடைந்தனர். எவ்விதத் தீர்வும் காணாமல் “இந்தி மொழி திணிக்கப்பட மாட்டாது” என்ற காங்கிரசின் வழக்கமான வாக்குறுதியை மட்டும் நம்பி, மொழிப் போராட்டத்தை அண்ணாதுரையும் அவரது கட்சியினரும் விலக்கிக் கொண்டனர்.
பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையும் மொழியுரிமையும் ஒன்றோடொன்று இணைந்தது. தன்னுரிமையை தனிநாடு கோரிக்கையைக் கைவிட்டு இந்திய அரசின் ஒருமைத்தன்மையை ஏற்றுக் கொண்டு அண்ணாவும் அவரது கழகமும் துரோகமிழைத்த பிறகு, மொழியுரிமை போராட்டம் என்பது அவர்கள் நடத்தும் நிழல் சண்டையாகிப் போனது.
ஆரம்பத்தில் தி.மு.க.வை ஓட்டுப்பொறுக்கும் கட்சி எனும் சாயல் விழாமல் பார்த்துக் கொண்ட அண்ணாதுரை, 1957இல் நடந்த தேர்தல் மாநாட்டில் “தேர்தலில் போட்டியிடலாமா? கூடாதா?’ என்பதனை வாக்கெடுப்பிற்கு விட்டு பெரும்பான்மையின் முடிவின்படி தேர்தலில் பங்கெடுத்தாராம். ஆனால் மாநாட்டுக்கு முன்பே “புதியதோர் அரசு காணப் புறப்படுவோம்’ என்று தம்பிமார்களுக்கு வெட்கத்தைவிட்டு பதவி ஆசையைச் சொன்ன மனிதர்தான் அவர்.
தேர்தல் பாதைக்குள் நுழைந்தபிறகு தி.மு.க.வின் கொள்கைகளை எல்லா சந்தர்ப்பத்திலும் காபரே நடனத்தில் ஆடை கழற்றுவது போல ஒவ்வொன்றாக உதறி எறிந்தார். 1957இல் முதுகுளத்தூர் கலவரத்தின்போது தேவர்சாதி வாக்குகளையும் தாழ்த்தப்பட்டோர் வாக்குகளையும் மனத்தில் கொண்டு, அப்போது சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தேவருக்கு ஆதரவாகப் பேசிவிட்டு, வாக்கெடுப்பில் வெளிநடப்பு செய்து தாழ்த்தப்பட்டோரை ஆதரித்தார்.
கட்சிமாறி அரசியலுக்கு ஆதிமூலமான “மூதறிஞர்’ ராஜாஜியை “குல்லுகப் பட்டர்’ எனச் சாடியவர், 1962 தேர்தலிலே “அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தரப் பகைவனும் இல்லை” எனும் பொன்மொழியைச் சொல்லி கூட்டணி சேர்ந்தார். அத்துடன் தி.மு.க.வில் இருந்து பார்ப்பன எதிர்ப்பும் கழற்றி விடப்பட்டது. அந்தத் தேர்தலிலே காஞ்சிபுரம் தொகுதியில் நின்ற அண்ணாதுரை, வாக்காளர் பட்டியலில் தன்னை “அண்ணாதுரை முதலியார்” எனப் பதிவு செய்து சாதி அரசியல் செய்ய முயன்றார். “சிலருக்கு திடீரென முதலியார் என்ற வால் முளைத்து இருக்கிறது” என்று பெரியார் இதனை அம்பலப்படுத்தினார்.
1967இல் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், கம்யூனிசத்தின் எதிரி ராஜாஜியுடனும் சந்தர்ப்பவாதக் கூட்டணி கட்டி பதவிக்காக எதையும் செய்யலாம் எனும் நிலை எடுத்தார், அண்ணா. “எங்களுக்கெல்லாம் கொள்கைதான் வேட்டி. பதவியோ மேல்துண்டு” எனத் தத்துவம் பேசியவர், ஆட்சியைப் பிடித்தபோது கொள்கை என்று சொல்லிக்கொள்ளக் கோவணம் கூட இல்லாமல் முழு அம்மணமாகி நின்றார். இதுதான் அண்ணா தன் தம்பிமார்களுக்குத் தந்த அரசியல் பாடம்.
நெருக்கடி நிலையில் தன் கட்சித் தொண்டர்களைத் தூக்கிப் போட்டு மிதித்த இந்திரா காந்தியுடன் அடுத்த தேர்தலிலேயே “நேருவின் மகளே வருக” என அழைத்து தி.மு.க. கூட்டணி கட்டியதும், பொடாவிலே தன்னைத் தள்ளி வதைத்த ஊழல்ராணியை “அன்புச் சகோதரி’யாக வை.கோ. அரவணைத்ததும் அண்ணா தந்த தத்துவம்தான்.
“தவறான கட்சியில் இருக்கும் சரியான நபர்’ என இந்துமதவெறியர் வாஜ்பேயியை அண்ணாவின் தம்பி சித்தரித்ததும், அவருடனேயே கூட்டணி அமைத்ததும் வேறு ஒன்றுமல்ல. அண்ணாவின் “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ எனும் தத்துவம்(!)தான்.
அரசியலில் பிழைப்புவாதத்துடன் கவர்ச்சிவாதத்தையும் கலந்து ஊட்டி வளர்த்த அண்ணா கொள்கைகளை எல்லாம் இழந்த பின்னர் எம்.ஜி.ஆர். எனும் கவர்ச்சியை நம்பியே கூட்டம் கூட்டினார். அதற்காக “ஆளைக்காட்டினால் ஐம்பாதியிரம் கூடும். முகத்தைக்காட்டினால் முப்பதாயிரம் கூடும்” எனும் அரசியலை வெளிப்படையாகக் கூறவும் அண்ணா கூச்சப்படவில்லை. சென்ற தேர்தலிலே தி.மு.க. அ.தி.மு.க. இரண்டுமே சினிமாத் துணை நடிகைகளை வைத்துக் குத்தாட்டம் நடத்திக் கூட்டம் சேர்த்ததும் அண்ணாவின் அரசியல் தத்துவம்தான்.
கோஷ்டி சண்டையினைக் கொம்புசீவி விட்டுத் தனக்கு இணையாக வளரும் தலைவர்களை அடியாட்களால் அடித்து நொறுக்குவதைக் கழக அரசியலில் அறிமுகம் செய்தவர் அண்ணா. ஈ.வெ.கி. சம்பத் தாக்கப்பட்டு, கழற்றிவிடப்பட்டதும் அதனை சாமர்த்தியமாக “காதிலே புண் வந்திருக்கிறது. கடுக்கனைக் கழற்றி வைத்திருக்கிறேன்” எனப் பேசியும், உண்ணாவிரதம் இருந்த சம்பத்துக்கு பழரசம் கொடுத்து சமாளிக்கப் பார்த்தும், கட்சிக்குள் நாறிக்கிடந்த கோஷ்டிச் சண்டையைத் தெருவுக்குக் கொண்டு வரத்தான் செய்தது. அண்ணாவின் தம்பிகள் இதனை தா.கிருஷ்ணன் கொலை வரை செவ்வனே செய்து வருகின்றனர்.
அண்ணாவின் பொருளாதாரக்கொள்கை என்ன என்பதைப் படித்தால் முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள் கூட விழுந்து விழுந்து சிரிப்பார்கள். “உற்பத்திப் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் கொடுக்கும் விலைதான் தொழிலாளிக்கும் முதலாளிக்கும் முறையே கூலியாகவும் இலாபமாகவும் போய்ச் சேருகிறது. அதைப் பங்கு போட்டுக் கொள்வதில் தொழிலாளி, முதலாளி ஆகிய இரு சாராருக்கும் இடையில் ஏற்படும் சச்சரவில் தலையிட்டுத் தீர்த்து வைக்கும் உரிமை பொதுமக்களுக்கு வேண்டும். இந்த உரிமையைப் பொதுமக்கள் உணரவும், உணர்ந்து நியாயம் கூறவும் தகராறுகளைத் தீர்க்க முன்வருமாறும், பொதுமக்களை அழைக்கும் பணியை கழகம் செய்கிறது. தொழிலாளருக்கும் முதலாளிக்கும் இடையே ஓர் அன்புத் தொடர்பு ஏற்படுத்தும் ஓர் அரிய காரியம் அது” என்று அண்ணா சொன்னார்.
வர்க்க சமரசத்தைக் கொள்கையாகக் கொண்ட அண்ணாவின் தி.மு.க.வோ தன்னையே உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி என்றும் “மாஸ்கோவிற்கு செல்வோம். மாலங்கோவைச் சந்திப்போம். நாங்களே உண்மையான கம்யூனிஸ்டுகள் என்போம்” என்றும் சொன்னது. அடிமுட்டாள்தனமான பொருளாதாரத் தத்துவத்தை சொன்னவரோ “பேரறிஞர்’ எனும் பட்டமும் பெற்றார். இவர் முதல்வரான பின்னர் கீழ்வெண்மணியில் விவசாயத் தொழிலாளர்கள் கொளுத்தப்பட்டனர். அப்போது இந்த ‘உண்மையான’ கம்யூனிஸ்டால் பல் விளக்காமல் காலையில் அழமட்டுமே முடிந்தது.
கற்புக்கரசி கண்ணகி என்று தமிழ்நாட்டுக்கு ஒரு சீதையை உயர்த்திப் பிடித்த அண்ணாவின் அத்தனை தம்பிமாரும் கோவலன்களாகி ஒழுக்கக்கேட்டில் மூழ்கிக் கிடந்தார்கள். அண்ணாவும் விதிவிலக்கல்ல. இந்தக் கேடுகெட்ட போக்கினை “நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல. அவள் படிதாண்டா பத்தினியுமல்ல” என கூச்சநாச்சமின்றி இப்”பேரறிஞர்’ விளக்கம் வேறு தந்தார்.
எல்லோரிடமும் நல்லவர் என்று பேரெடுக்க “எதையும் தாங்கும் இதயம்’ பெற்றிருந்த (அதாவது சுயமரியாதையை இழந்து நின்ற) அண்ணா இறந்ததும், தி.மு.க. தலைமையே திணறிப் போய்விட்டது. அண்ணாவே எல்லாவற்றையும் உதறிவிட்ட பின்னர், இனி எதைக் கொள்கை என்று சொல்வது? ரொம்ப நாள் யோசித்து ஒரு கொள்கையைத் தி.மு.க. அறிவித்தது. அது “அண்ணா வழியில் அயராது உழைப்போம்!” இவ்வாறு 70களில் வெறும் முழக்கமே கொள்கையாகப் பரிணாம வளர்ச்சி அடைந்தது. 90களிலோ மூஞ்சிகளே கொள்கைகளாகி “கலைஞர்’, “தளபதி’ என மாறிப்போனது. அவர் உருவாக்கிய கழகமோ பல கூறுகளாகி பாசிச காங்கிரசோடும் இந்துவெறி பார்ப்பன பாசிசத்தோடும் கூட்டணி கட்டிக் கொண்டு நாற்காலி சுகம் தேடிச் சீரழிந்து விட்டன.
பேரறிஞராகத் துதிக்கப்படும் அண்ணா, தனது பேச்சாலும் எழுத்தாலும் இன உணர்வை, மொழியுணர்வை ஊட்டி, கற்பனையான இலட்சியத்துக்கு மாயக் கவர்ச்சியூட்டினார். அந்த இலட்சியத்தைச் சாதிக்க தொடர்ச்சியான போராட்டத்தையோ, அதற்கான அமைப்பையோ அவர் கட்டியமைக்க முயற்சிக்கவேயில்லை. காங்கிரசை வீழ்த்தவிட்டு, அதற்குப் பதிலாக ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் பிழைப்புவாத இயக்கமாகவே தி.மு.க.வை அவர் வழிநடத்தினார்.
கொள்கை இலட்சியமற்ற பிழைப்புவாதமும் கவர்ச்சிவாதமுமே அவரது சித்தாந்தம். துரோகத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் நாக்கைச் சுழற்றி நியாயப்படுத்தும் இப்பிழைப்புவாதம், தி.மு.க.வை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து ஓட்டுக் கட்சிகளையும் கவ்வியிருப்பதோடு, அரசியல் அரங்கில் வெட்டி வீழ்த்தப்பட வேண்டிய நச்சு மரமாக ஓங்கி நிற்கிறது. எல்லா வண்ணப் பிழைப்புவாதத்தோடும் எல்லாவகை கவர்ச்சிவாதத்தோடும் ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் புதிய சித்தாந்தத்தை உருவாக்கி வளர்த்தவர் என்பதாலேயே, எல்லா பிழைப்புவாதிகளும் அண்ணாதுரையை தமது மூலவராக வணங்கித் துதிபாடுகின்றனர்.