அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! இந்த முக நூலில் பலர் பல வேஷம் போட்டு தவ்ஹீத் வாதிகளை எதிர்த்தார்கள் .அசிங்கமா திட்டினார்கள் சிலர் விமர்சனம் பண்ணினார்கள் தரீக்கா வழிகேடர்கள் பண்ணின தொல்லைகள் ஏராளம். தவ்ஹீத் வாதிகளின் புகைப்படங்களையும் பெண்களின் செக்ஸ் போட்டகளையும் சமந்தபடுத்தி பொய்யான பீதியையும் கிளப்பி விட்டு பார்த்தார்கள் நம் தவ்ஹீத் வாதிகள் கொஞ்சம் கூட அசராமல் அவர்களின் முகத்திரைகளை கிழித்தார்கள் அவர்களின் கொக்கரிப்பு நம் தவ்ஹீத்வாதிகளிடம் எடுபடாமல் போயிட்டது. இன்னும் பலர் தவ்ஹீத் வளர்ச்சி பிடிக்காமல் தவ்ஹீத் வாதிகளின் மீது சேற்றை வாரி பூசினார்கள்.அண்ணன் பீஜே அவர்கள் மீது சுமத்திய ஆதாரமில்லாத குற்றங்கள் தவிடி பொடியா ஆனது.பலர் தவ்ஹீதை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் வாதிகளின் முகவரிலும் வந்து குழப்பினார்கள் அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட பட்டது.சிலர் நடு நிலைவாதி என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீத் வாதிகளை கண்டித்தார்கள்.அதற்கும் நம் தவ்ஹீத் வாதிகள் அஞ்சாமல் அவர்கள் யார் என்பதை இந்த முக நூலில் அடையாளம் காட்டினார்கள்.பலர் நான் எந்த இயக்கத்தை சாராதவன் என்றும் நாம் ஒற்றுமையா இருக்கணும் என்றும் போராடினார்கள் அவர்களும் ஒரு சாரார் என்பதை இந்த தவ்ஹீத் வாதிகள் நிருபித்தார்கள்.அவர்களின் பொய்யான முகத்திரையும் கிழிக்கப்பட்டது. பொய்யான முக மூடி போட்டுக்கிட்டு நாங்கள் நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் பலர் தமுமுகவை சேர்ந்தவர்கள்.என்பதை வெட்கத்துடன் சொல்லிகொள்கிறேன். தவ்ஹீத் வாதிகளை எதிர்க்க கூடியவர்கள் பலர் இந்த முக நூலில் காணமல் போனார்கள்.அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! எதிர்ப்பு இருந்தால்தான் ஏகொத்துவம் (தவ்ஹீத்) வளரும்! தவ்ஹீத் மீண்டும் மீண்டும் வீறு நடை போடும்! இன்ஷா அல்லாஹ்!

திங்கள், 10 ஜனவரி, 2011

பாபர் மஸ்ஜித் - தீர்ப்பு குறித்த TNTJயின் அதிரடி அறிவிப்பும் தமுமுக வின் அரசியல் சார்புத் தீர்ப்பும் பாருங்க...

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு தொடர்பாக TNTJ வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கை!

பாபர் மசூதி தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் நீதியை சாகடித்து ஆழ குழிதோண்டி புதைத்திருக்கிறது.
எந்த விதமான சட்ட விதிகளையும் பின்பற்றாமல் கட்டப்பஞ்சாயத்து பாணியில் இத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. ஒரு இடம் யாருக்கு உரியது என்பதை முடிவு செய்ய அந்த இடத்திற்கான ஆவணத்தையும், அனுபோகத்தையும் மட்டுமே  அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவிலும், உலகம் முழுவதும் உள்ள சிவில் சட்டமாகும்.
ஆவணத்தின்படியும், அனுபோக பாத்தியதையின் அந்த இடம் முஸ்லிம்களுக்கு உரியது என்பது உலகம் அறிந்த உண்மை. பள்ளிவாசல் 1949ல் சிலை வைத்ததும், 1992ல் பாபர் மசூதியை இடித்து தள்ளியதையும் உலகம் பார்த்துக் கொண்டிருந்ததால் இந்த தீர்ப்பை அறியும் உலக மக்கள் இந்தியாவில் அறவே நீதி இல்லை; சிறுபான்மை மக்களுக்கு உரிமை இல்லை என்ற முடிவுக்கு வருவார்கள்.
நீதிமன்றத்தின் இச்செயலால் தேசத்தின் மானம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த முஸ்லிம்களும், நாட்டில் உள்ள நடுநிலைவாதிகள் அனைவரும் இத்தீர்ப்பை நிராகரிக்கிறார்கள் என்பதை அறிவிக்கிறோம்.
இது தொடர்பாக வரும் 17-10-2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அவசர மாநில செயற்குழுவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.
இப்படிக்கு
ரஹ்மதுல்லாஹ்
மாநிலத் துணைத் தலைவர்


இவ்வாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிம் சமுதாயத்தின் ஒட்டுமொத்த கொந்தளிப்பையும் பிரதி பலிப்பையும் அறிவித்துள்ளது.

ஆனால் மோடியின் சகோதரி ஜெயலலிதாவிடம் கூட்டணி வைத்த அம்மாவின் சகோதரன் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் அதிமுக வில் கூட்டணி வைத்தவுடன் தனது அரசியல் ஜால்ராவை துவக்கி காவிகளுக்கு அடங்கி அறிக்கை விட்டிருக்கிறார்.

அந்த லட்சனத்தை பாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக